Monday, July 10, 2017

ஆந்திர கடல் பகுதியில் காசிமேடு மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு


ராயபுரம், ஜூலை 10- கடந்த மாதம் ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

அவர்களின் 32 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 10 படகுக ளையும் ஆந்திரா மீனவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

படகுக்கு தலா ரூ.50 ஆயி ரம் கொடுத்து மீட்டு வந்தனர். அதன் பிறகு 2ஆ-வது முறையாக மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் காசிமேடு மீன வர்கள், ஆந்திர மீனவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த குப்பனுக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் ஆந்திர கடல் பகுதியான பொன் னம்பிரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த ஆந்திர மீனவர்கள் அவர்களை பயங்கர ஆயுதத்தால் தாக்கினர்.

பின்னர் காசிமேடு மீனவர் களை சிறைபிடித்தனர். படகை அடித்து சேதப்படுத்திவிட்டு அதில் இருந்த மீன்களுடன் அவர்களை தங்கள் பகுதிக்கு கடத்தி சென்றுவிட்டனர்.

இதற்கிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசை படகு உரி மையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

அதில் மீனவர்கள் போர் வையில் கடல் கொள்ளையர்கள் போன்று செயல்படும் இச்சம் பவத்துக்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. இதில் தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிடில் மீன வர்களை ஒன்றுதிரட்டி மிகப் பெரும்போராட்டம் நடத்தப் படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...