புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகும். இங்கே முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மூன்று பேர்களை நியமிக்கலாம், அப்படி மூன்று பேர் களை நியமிப்பதற்கு அரசியல் சாயம் அல்லாத, கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் ஆலோ சகர்கள் போன்றோர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்க சட்டமன்றத்திற்கு உரிமை உண்டு.
புதுவையில் இதுவரை நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒப்புதலின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். அரசு மூன்று பேர்களை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பும். ஆளுநர் அதை மத்திய உள்துறைக்கு அனுப்புவார். உள்துறை அனுமதி அளித்ததும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொள்வார்கள். காலம் காலமாக இப்படித்தான் நடந்து கொண்டு இருந்தது.
ஆனால், இந்த தடவை ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒப்புதல் இல்லாமலே தன்னிச்சையாக மூன்று பேர்களை அனுப்பியுள்ளார்.
அந்த மூன்றுபேரும் பாஜகவைச்சேர்ந்தவர்கள். மூன்று பேரின் மீது பல வழக்குகள் உள்ளன. அதிலும் பாஜக தலைவர் சாமிநாதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் தொள்ளாயிரம் வாக்கு களைப் பெற்றவர். இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஒருலட்சத்து பதினெட்டாயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவர் ஆவார். மேலும் பாஜக பொருளாளர் செல்வகணபதி இந்து அமைப்பின் முக்கிய பதவியில் உள்ளார்.இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் கணபதி பந்தல் அமைக்கவேண்டும் என்று கூறி காவல்துறையின் அனுமதியையும் மீறி அங்கே பந்தல் போட்டு கலவரம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். மேலும் இவர் சிறுபான்மையினர் மீதுபொதுக்கூட்டங்களில் தொடர்ந்து வன்முறையைத்தூண்டும் விதமாகப் பேசிவந்தவர், இதனால் இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
ஏற்கெனவே ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசு யூனியன் பிரதேசத்தில் எனக்குத்தான் அனைத்து உரிமைகளும், அதிகாரங்களும் உள்ளன என்று சட்டாம் பிள்ளைத் தனமாக பேசிவருகிறார், அரசின் அனைத்து செயல்பாட்டிலும் மூக்கை நுழைத்து வருகிறார். அரசு ஒரு உத்தரவிட்டால் அடுத்த வினாடியே அந்த உத்தரவை இவர் ரத்துசெய்துவிடுவார்.
பா.ஜ.க. நிர்வாகிகளை நியமன சட்டமன்ற உறுப் பினர்களாக ஆளுநர் நியமித்தது புதுவை காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடந்து கொண்டு இருக்கும் போது ஆளுநர் தன்னிச்சையாக எப்படி நியமிக்கலாம்? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியிலும் அனல் பறக்கும் கேள்வியாக எழுந்துள்ளது.
ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் ஆளுநரின் அத்துமீறல் கொதி நிலையை ஏற்படுத்தி யுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள். அவர் களால் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலத்தின் அரசுகளை ஆளுநர்கள் மூலமாக மிரட்டும் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டி ருக்கிறது, அங்கு குஜராத்தைச்சேர்ந்த முன்னாள் பாஜக தலைவர் வாஜ்பாயி வாலா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டிற்கு பல்வேறு வகையில் தடை யாக இருந்துவருகிறார். ஆனால் மாநிலங்களில் சட்ட மன்றத்திற்கு அதிக அதிகாரம் இருப்பதால் ஆளுநரால் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு தடைகள் இருந் தாலும் சட்டமன்றத்தின் மூலம் அனைத்தும் நிறைவேறி வருகின்றன.
அதே போல் மேற்கு வங்கத்திலும் பாஜகவின் தலை வர்களின் ஒருவரான கேசரி நாத் திவாரி ஆளுநராக உள்ளார். இவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர் ஜியை அலைபேசியில் அழைத்து தரக்குறைவாக பேசியது மல்லாமல் மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திவாரி சாதாரண வார்டு பாஜக பிரமுகர் போல் நடந்துகொள்கிறார் என்று கூறியிருந்தார்.
அருணாசலப் பிரதேசத்தில், உத்தரகாண்டிலும் ஆளுநர் களைப் பயன்படுத்தி மத்திய பிஜேபி அரசு நடத்திய அரசியல் திருவிளையாடல்கள் உலகம் அறிந் ததே.
புதுச்சேரியில் பா.ஜனதா கட்சியினரை நியமன உறுப்பினர்களாக நியமித்ததைக் கண்டித்தும், இதற்கு உடந் தையாக உள்ள ஆளுநரைக் கண்டித்தும் வருகிற 8-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
டில்லியில் ஆட்டம் போட்ட ஆளுநர் பதவியி லிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அடுத்து புதுச்சேரி தானோ!
No comments:
Post a Comment