ஜூலை 12
இவ்வாண்டு ஜூலை 12ஆம் நாள் - சமூக நீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்! ஆம், அன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகளை முன்னிறுத்தி சென்னைப் பெரியார் திடலில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளின் அமைப்புகளின் தலைவர்களை, பிரதிநிதிகளை - திராவிடர் கழகத்தின் சார்பில் அழைத்து ஒருங்கிணைத்து "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" உருவாக்கப்பட்டது (27.3.2017) அதன் ஒருங் கிணைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை அக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற முப்பெரும் கோட்பாடுகளை மய்யப்படுத்தி இவ்வமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.
4.7.2017 அன்று கூடிய அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 12.7.2017 புதனன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் சமூகநீதிக்கான மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய் யப்பட்டது.
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 'நீட்' எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றினை நடத்திட மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் (விசிமி) முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
2016-2017 ஆம் ஆண்டிலேயே இது அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புப் புயல் காரணமாக கடந்தாண்டு தமிழ்நாட்டிற்கு விலக்குக் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நிரந்தரமாகவே 'நீட்' தேர்விலிருந்து விலக்குத் தேவை என்பதுதான் நமது உறுதியான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால் சமூகநீதி கண்ணோட்டத்தில் 'நீட்' தேர்வு என்பது இந்திய அளவிலேயேகூட வேண்டாத - கூடாத - ஒவ்வாத ஒன்றாகும். தமிழ்நாட்டைப் போல மற்ற மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் ஓங்க வேண்டியது அவசியமே!
பிஜேபி என்ற சமூக அநீதிக்கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் 'நீட்' தேர்வை எதிர்க்கின்றன.
தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் 'நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குத் தேவை என்ற முறையில் இரு மசோதாக்கள் ஒரு மனதாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன (31.1.2017).
இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டில் வற்புறுத்தியும், மாநில அரசு கடிதம் எழுதியும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இதில் வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்நாடு அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கே அனுப்பிக்கூட வைக்கவில்லை மத்திய பிஜேபி அரசு.
இதைவிட மாநில அரசை ஒரு மத்திய அரசு எப்படி அவமதிக்க முடியும்? மாநில அரசை மட்டுமல்ல; ஒட்டு மொத்தமாக தமிழ்நாடே கொந்தளித்து எழும் ஒரு முக்கியப் பிரச்சினையில் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது என்றால், தமிழ்நாட்டு மக்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும்.
குடியரசுத் தலைவரிடம் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி தமிழ்நாட்டில் பொங்கி எழுந்த பிறகுகூட, மத்திய பிஜேபி அரசு கண்டு கொள்ளாதது - அதன் ஜனநாயக விரோதப் போக்கையும், சமூக நீதியில் அது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்புணர்வு நிலைப்பாட்டையும் தானே வெளிப்படுத்துகிறது!
தமிழ்நாடு அரசும் - சட்டப் பேரவையில் நிறைவேற்றி விட்டோம் கடிதமும் எழுதி விட்டோம் - அத்தோடு தமது கடமை முடிந்து விட்டது என்று 'கொட்டாவி' விடுவது கண்டனத்துக்குரியது!
தமிழ்நாடு சமூகநீதிப் பயிரின் தாய்ப்பூமி, இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முதலாக திருத்தப்படுவதற்குக் காரணமான தந்தை பெரியாரின் மண்.
69 சதவீத இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக நிலை நிறுத்திய மாநிலம் தமது நாடு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது - பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்ததால், அது வரை தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்று அறியாத எம்.ஜி.ஆருக்குத் தமிழ்நாட்டு மக்கள் 'நல்லதோர்' பாடம் கற்பித்தனர்.
39 மக்களவைத் தொகுதியில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைத் தழுவினார் என்பதை எம்.ஜி.ஆர். பெயரால் ஆட்சி நடத்தும் அ.இ.அ.தி.மு.க புரிந்து கொள்ள வேண்டாமா?
தமிழ்நாட்டின் சமூகநீதியைப் புறக்கணித்த மத்திய பிஜேபி அரசுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த முகம் கொண்டு அ.இ.அ.தி.மு.க.ஆதரவுக் கரம் நீட்டுகிறது?
மத்திய பிஜேபி அரசிடம் சரணா கதி படலம் என்பதுதான் அஇஅதிமுக அரசின் முக்கிய அடையாளமா?
நடந்து முடிந்த 'நீட்' தேர்வின் முடிவுகள் நாடு எதிர் பார்த்தபடியே, நாம் எச்சரித்தபடியே ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளே நுழை யாதபடி இரும்புக் கதவைப் போட்டு விட்டது.
38.8 சதவீத இருபால் மாணவர்கள்தான் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றால் இந்தச் சமூக அநீதியை என்னென்று சொல்லுவது!
சமூகநீதி பிரச்சினையில் தந்தை பெரியாரின் தமிழ் மண் எப்பொழுதுமே தோல்வி கண்டதில்லை; எடுத்து வைத்த அடியையும் பின் வாங்குவதில்லை; வீதிகளில் மக்கள் படை வீறு கொண்டு எழுந்தால் எஃகு கோட்டைகளும் தூள் தூளாக ஆகாதா!
ஜூலை 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அரிமா சேனை யின் போர் முழக்கமாக நடக்கட்டும்! கட்டுப்பாட்டுடன் மக்கள் குரல் விண்ணை முட்டட்டும்!!
கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை - பேத மில்லை சமூக நீதித் தடத்தில் வெற்றிக் கொடி நாட்டிட அலை அலையாய் வாரீர்! வாரீர்!!

No comments:
Post a Comment