Tuesday, June 13, 2017

குமுறும் கூர்க்காலாந்து



வங்க தேசம் என்றால் உடனே 1971 இல் நடந்த போர்தான் நமக்கு நினைவுக்கு வரும். பாகிஸ்தானிடம் போரிட்டு வங்க தேசம் என்ற நாட்டை உருவாக்கியது இந்தியாதான். ஆனால், அந்தப் பிரிவினைக்கான போராட்டம் வெடிக்க முக்கிய காரண மாக இருந்தது வங்கதேச மக்களின் மொழிப் பிரச்சினைதான். அங்கு வசிக்கும் பெரும்பான்மையானேர் முஸ்லிம்கள் என்றா லும் அவர்களது தாய்மொழி வங்காளம். அதே வேளையில் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களின் தாய் மொழி உருது.
பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் முழு மைக்கும் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டுக்குமே உருது மட்டுமே தேசிய மொழி என சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் இருந்து வங்க மொழி அகற்றப்பட்டது. பாகிஸ்தான் மத்திய தேர்வாணையம் வங்க மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருந்து நீக்கியது.
இதனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1947 செப்டம்பர் 15 இல் தாய் மொழியைக் காக்க வேண்டுமென கருதி ‘‘தாமுடன் மஸ்ஜித்’’ என்ற அமைப்பு உருவானது. வங்க மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்கா பல்கலையின் இயற்பியல் பேராசிரியர் அபுல் காசிம் என்பவர் இருந்தார். மாணவர்களிடையே போராட்ட குணத்தை விதைத்தார். மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். களம் சூடானது.
போராட்டம் தீவிரமடையவே,  1948 மார்ச் 19 இல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா, டாக்கா வந்தார். மார்ச்  24 இல் டாக்கா பல்கலைக்கழகத்தில்  மாணவர்களிடையே ஜின்னா உரையாற்றினார். அப்போது, ‘‘முஸ்லிம்களைப் பொறுத்தவரை உருதுதான் ஒரே மொழி. அதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ் தானுக்கு விரோதிகள்’’  என்றார். பின்னர் மாணவர்களிடத்திலும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார். ஆனால், மாணவர்கள் மசியவில்லை. 1947 ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்தப் போராட்டத்தில் ‘வங்கதேசத்தின் தந்தை ‘ என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றினார்.
மாணவர்கள் போராட்டத்துக்கு டாக்கா மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முக்கியப் புள்ளியாக இருக்கிறது என  பாகிஸ்தான் கருதியது. 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி அந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது சலாலூதீன், அப்துல் ஜபார், அப்துல் பெர்கத், ரிஃப்லுதீன் அகமது, அப்துல் சலாம் ஆகிய மாணவர்கள் பலியாகினர். உலகின் முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். மாண வர்கள் பலியானதையடுத்து, டாக்கா முழுவதுமே கலவரம் பரவியது. அடுத்த நாள் மக்கள் வெகுண்டெழுந்து போராட் டத்தில் குதித்தனர். அப்போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 4 பேர் இறந்தனர். வங்கதேசமே குருதிக் கடலானது. வங்க தேச அரசியல் தலைவர்களையும், மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் மொழிப்பற்று மிக்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வில்லை. 1954 மே 7 ஆம் தேதி வங்க மொழியை பாகிஸ்தான், அரசு மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. 1956 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வங்க மொழியை ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகரித்து சட்டம் இயற்றியது. ஒரு கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தது. 1971 இல் கிழக்கு பாகிஸ்தான் மேற்கில் இருந்து பிரிந்தது. தாய்மொழி மீது கொண்ட பற்றால் வங்கதேசம் என்ற புதிய நாடும் பிறந்தது.
இவ்வளவும் கூறுவதற்குக் காரணம் மொழிப் பிரச்சினை என்பது எத்தகைய கூர்மையானது என்பதை உணரவேண்டும் என்பதற்காகத்தான்! மதத்தால் ஒன்றுபட்டாலும் மொழியால் மாறுபடும்பொழுது மதமா, மொழியா?  என்ற நிலை வரும் பொழுதுதான் மொழிதான் மேலாண்மை வகிக்கிறது - மதம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்பதை உணரவேண்டும்.
சமஸ்கிருதத்தையும், இந்தியையும் முதன்மைப்படுத்தும் முந்திரிக்கொட்டை இந்தத்துவா பிஜேபி அரசு இதனை உணரவேண்டும்.
இப்பொழுது இது தொடர்பாக இன்னொரு பிரச்சினை:
வடக்கே பிரச்சினைக்குரிய பகுதிகளில் நாகலாந்து மற்றும் டார்ஜிலிங் குறிப்பிடத்தக்கவையாகும். நாகாலாந்தில் நாகா பிரிவினர் தனிநாடு கேட்டு போராடி வருகின்றனர். அதே போல் மேற்குவங்கத்தில் மலைப் பிரதேசமான டார்ஜிலிங்கில் வாழும் மக்கள் தங்களுக்கு கூர்க்காலாந்து வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1970-களில் இருந்து இவர்களின் போராட்டம் தொடர்கிறது. 2007 ஆம் ஆண்டு வன்முறைப்பாதையைக் கைவிட்டு விட்டு கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கினர். இந்த நிலையில் இவர்களுக்குத் தனி மாநில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர்.
கோர்க்க அல்லது கூர்க்கா என்று அழைக்கப்படுவர்கள் டார்ஜிலிங் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,50,000 இந்தியாவிலேயே பாலின விகிதத்தில் பெண்கள் அதிகம் வாழும் மாவட்டம் இதுதான்!  1000 ஆண்களுக்கு 1,017 பெண்கள் என்ற விகிதம், மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக நேபாளத்தை பின்னணியாகக் கொண்ட கூர்கா இனத்தினர் உள்ளனர். இவர்களின் மொழி கூர்க்க (நேபாள மொழியைப் போன்றது).
இம்மாநிலத்தில் வங்கமொழி பேசுபவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். ஆகவே அங்கு வங்க மொழியை கட்டாயப்படுத்தியதற்கு எதிர்ப்புதெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.
அனேகமாக இந்தியாவை உடைப்பதில் மொழியும், மதமும் முக்கிய பங்கு வகிக்கும் என்றே தெரிகிறது.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...