சாமியார் ராம்தேவ் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் தரமற்றவை என்றும் ஆய்வகத்தின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. பதஞ்சலி தயாரிப்பாக `நெல்லிக்காய் சாறு’ திவ்ய ஆம்லா ஜூஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
ஷிவ்லிங்கி பீஜ் என்கிற பெயரிலும் மற்றொரு பொருள் பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மக்களிடையே விற்பனை செய்யப்பபட்டு வருகின் றது.
இந்நிலையில் சாமியார் ராம்தேவ் நிறுவனமாகிய பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் தரமற்றவை என்று ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது. பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் தரமற்றவை எனும் ஆய்வு முடிவானது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஷிவ்லிங்கி பீஜ் மற்றும் ஆம்லா ஜூஸ் ஆகிய பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புப் பொருள்களில் தேவையற்ற பொருள்கள் கலக்கப்பட்டுள்ளதும், குறிப் பிடத்தக்க அளவில் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புப் பொருள்களில் வரையறை செய்யப்பட்ட அளவில் அமில, காரத்தன்மை (பிஎச்-மதிப்பு) இல்லை என்பதை ஆய்வு முடிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அரித்துவாரில் உள்ள ஆயுர்வேதம் மற்றும் யுனானி அலுவலகம் சாமியார் ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புப் பொருள்கள் தரத்தில் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் உள்பட ஆயுர்வேதத் தயாரிப்புப் பொருள்கள் 40 விழுக் காட்டளவில் தரமற்றவையாக உள்ளன என்று ஆய்வக முடிவு தெரிவிக்கிறது. 2013ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் தயாரித்து விற்பனைக்கு சந்தைகளில் விடப்பட்டுள்ள பொருள்களின் 82 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 32 மாதிரிகள் தரமற்றவையாக இருந்துள்ளன. பதஞ்சலியின் திவ்ய ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவ்லிங்கி பீஜ் உள்ளிட்டவையும் தரமற்றவையாக உள்ளன.
கடந்த மாதத்தில் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் உரியதரத்தில் இல்லை என்று மேற்கு வங்க சுகாதார ஆய்வகம் அளித்த ஆய்வு முடிவையடுத்து இராணு வத்தினருக்கான உணவுப்பொருள்கள் இருப்புப் பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்ட பதஞ்சலி தயாரிப்புப் பொருள்களை விற்பனைக்கு நிறுத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி பெற்றப் பட்ட தகவலில், ஷிவ்லிங்கி பீஜ் எனும் பதஞ்சலி தயாரிப்பு பொருளில் 31.68 விழுக்காட்டளவில் தேவை யற்ற பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புப் பொருள்களில் அவிபட்டிக்காரா சூரணம், தாலிசாதியா சூரணம், புஷ்யானுகா சூரணம், லவன் பாஸ்கர் சூரணம், யோக்ராஜ் குக்குலு, லக்ஷா குக்குலு போன்ற ஆயுர் வேத மருந்துப் பொருள்களிலிருந்து 18 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் உத்தர்காண்ட் ஆயுர் வேத மருந்துகளின் மய்யமாக உருவாகியுள்ளது. அரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள், உற்பத் தியாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் விநியோ கஸ்தர்கள் உள்ளனர்.
மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன் றாக சிறு வனப்பொருள்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் மற்றும் ஆய்வு மய்யம் இயங்கிவருகிறது. அம்மய்யத்தின் சார்பில் கூறும்போது, உத்தர்காண்ட் ஆயுஷ் பிரிவின் அனுமதிக்குப்பிறகே மருந்து பொருள்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்ததிலிருந்தே, அது கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்சியாகவே அமைந்துவிட்டது.
வருமான வரித்துறையின் சார்பில் பல வழக்குகள் ராம்தேவ்மீது நிலுவையில் உள்ளன. அத்தகைய சாமியார் சட்ட விரோத, விஞ்ஞான விரோத தயாரிப்பு களில் ஈடுபடுவதும், அவரின் அத்தகு பொருள்களை இராணுவத் துறைகூட வாங்குவதும் ஏற்புடையது தானா? மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்கலாமா?
மத்தியில் உள்ளது ஜனநாயக ஆட்சியல்ல - முற்றி லும் மக்கள் விரோத கார்ப்பரேட் சாமியார்களின் அரசே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ‘சாமர்த்தியம்' இனி எடுபடாது!
- அய்.அய்.டி. மாணவர் தாக்கப்படுவதா?
- மாட்டிறைச்சி தடையும் ‘‘திராவிட நாடு’’ கோரிக்கையும்!
- திருச்சி மாநாடு
- தலைமைச் செயற்குழு தீர்மானம்: அர்ச்சகர்ப் பிரச்சினை!
No comments:
Post a Comment