அ.இ.அ.தி.மு.கவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (5.2.2017) பிற்பகலில் கூடிய கூட்டத்தில், தற்போது முதல் அமைச்சராக உள்ள மாண்புமிகு திரு.ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தை அ.தி.மு.க.வின் தலைமையான பொதுச்செயலாளரிடம் கொடுத்துள்ளார். அவரே கட்சியின் பொதுச்செயலாளரான திருமதி வி.கே.சசிகலா அவர்களே முதல்அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏக்களால் திருமதி சசிகலா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்க தனது இசைவினைத் தெரிவித்த நிலையில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய ஜெயலலிதா அரசின் கொள்கை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றும் தனது தலைமையிலான அரசு என்றும் தனது ஏற்புரையில் தெளிவாக்கியுள்ளார்.
ஒருமனதாக இத்தேர்வு அமைந்திருப்பதும், கட்சித் தலைமை வேறு, ஆட்சித்தலைமை வேறு என்று இரட்டை அதிகார நிலைப்பாட்டினால் பலவகையான அதிகார முரண்கள் ஏற்பட இனி இடமில்லை என்பதோடு, முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் ஒருவரே என்பதால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் கட்டுக்கோப்பும், கட்டுப்பாடும் நிலைநிறுத்திக்காட்டப்பட்டுள்ளது.
பெரிதும் ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண், கட்சித்தலைமை, ஆட்சித்தலைமை இரண்டையும் பெற்று அரசியல் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திருப்பமே! - வரவேற்கப்படவேண்டியது
புதிய முதல் அமைச்சருக்கு நமது வாழ்த்துகள்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்து என் கடன் தீர்ப்பேன்! - கி.வீரமணி
- மார்ச் 10 அன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திரம் எரிக்கப்படும்! - திராவிடர் கழகம்
- அறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
- கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி வெறும் 1.4 சதவிகிதமே!
- தமிழர் தலைவர் - முதலமைச்சர் சந்திப்பு