த்திய தேர்வாணையத்தின் பணியாளர் தேர்வில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றவரான தினா தாபி, அதே தேர்வில் இரண்டாமிடம் பெற்றவரான அத்தார் ஆமிர் உல் ஷஃபி கான் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் முகநூலில் அறிவித்தார்.
மத வேறுபாடுகளைக் காரணமாகக் கூறி, திரு மணத்தை நிறுத்தவேண்டும் அல்லது முசுலீம் மதத்தி லிருந்து அத்தார் ஆமிர் உல் ஷஃபி கான் மதம் மாற வேண்டும் என்று தினா தாபியின் பெற்றோருக்கு அகில பாரதிய இந்து மகா சபா எனும் அமைப்பின் சார்பில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தினா தாபியின் தந்தை ஜஸ்வந்த் தாபிக்கு அகில பாரதிய இந்து மகா சபாவின் தேசியப் பொதுச் செயலாளர் முன்னா குமார் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“இந்த முடிவின் மூலமாக உங்கள் குடும்பம் Ôலவ் ஜிகாத்Õதை ஊக்கப்படுத்துவதாக ஆகிவிடும். ஆகவே, எந்தவகையிலும் இந்த திருமணம் நடைபெறக்கூடாது. இருப்பினும் அவ்விருவரும் திருமணம் செய்து கொள் வதில் உறுதியாக இருந்தார்கள் என்றால், ஷஃபி கான் (கர் வாப்சி - தாய்மதம் திரும்புதல்) மதம் மாற வேண்டும். அதற்கு ஷஃபி கான் ஒப்புக்கொண்டால் மட்டுமே திருமணம் நடைபெறலாம். அப்படி மதம் மாறுவது அல்லது Ôகர் வாப்சிÕக்கு எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் (இந்து மகா சபா) உதவியாக இருப்போம்.
2015 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்று தினா சாதனை படைத்துள்ளார். அதற்கு நாங்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆனால், ஷஃபி கானை திருமணம் செய்து கொள்வதாக அவர் எடுத்துள்ள முடிவு எங்களுக்கு தெரியவந்தபோது, எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.
முசுலீம்கள் லவ் ஜிகாத் என்பதை அதிக அளவில் ஊக்கப்படுத்தி வருகிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்துப் பெண்களை அவர்களிடம் காதலில் விழச் செய்து, அப்பெண்களை திருமணம் செய்வதன்மூலமாக முசுலீமாக மதமாற்றம் செய்கிறார்கள்.
ஆனால், தினா தாபி மற்றும் ஷஃபி கான் இரு வருக்கும் திருமணம் செய்துகொள்வது முக்கியமாக இருந்தால், கான் முதலில் Ôகர்வாப்சிÕ (மதமாற்றம்) செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்’’ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தினா தன்னுடைய முகநூலில் அத்தாரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறி வித்தார் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சமூக வலை தளங்களில் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் தினா, அத்தார் சந்தித்தார்கள். அன்றிலிருந்துதங்களுக்குள்கருத்துகளைதொடர்ந்து பரிமாறிவருகின்றனர்.முதலில்அத்தார்காதல் வயப்பட்டார். பழகியபின்னர் தாபி சில மாதங் களுக்குப் பின்னர், தம்முடைய உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளார்.
சமூக வலை தளமான முகநூலில் தினா தாபி தங்களின் நிலைப்பாடுகுறித்து குறிப்பிடும்போது, தெளிவாகவே அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப எங்களிடையே உள்ள உறவு தொடரும் என்றும், எவரும் மதம் மாறப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர சிந்தனையுள்ள, சுதந்திரமான பெண்ணாக, எதுவாக இருந்தாலும் என்னுடைய முடிவுதான். ஆமீரை எனக்குரிய வகையில் தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எங்களின் பெற் றோர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால், ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவருடன் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்போது, இதுபோன்ற அற்பமான சக்திகள் எப்போதுமே எதிர்மறை கருத்துகளை பரப்பி வருவார்கள் என்று தாபி, தன் முகநூலில் தெளிவுபட குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் என்பது தனிப்பட்டவர் உரிமை. குறிப் பிட்ட வயதை எட்டியவர்கள் தங்கள் திருமணத்தை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இதில் மதம் எங்கே இருந்து வந்தது?
‘லவ் ஜிகாத்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிறுபான்மை மக்களை எப்படியெல்லாம் சிறுமைப் படுத்தலாம் என்பதற்கு இந்துத்துவாவாதிகள் புதிது புதிதாக வண்ண வண்ணமாக ‘ஆய்வு’ செய்து அவ் வப்போது சில மதவெறித்தன கரடிகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
மதத்தை வைத்து திருமண உரிமையில் புகுந்து விளையாடுவதைப் போலவே, சிலர் ஜாதியை வைத்தும் அரசியல் நடத்திடத் துடிக்கிறார்கள்.
இந்தப் பிற்போக்குத்தன வலையில் இருபால் இளை ஞர்களும் சிக்கிக் கொள்ளாமல், சுதந்திர சிந்தனையோடு தங்கள் வாழ்வின் எதிர்காலத்தை முடிவு செய்யட்டும்!
இளைஞர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனை முகிழ்த்து வெடிக்கட்டும்!
No comments:
Post a Comment