மோடி 70 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றும் போது தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி யினரை விமர்சித்து பேசி வாக்கு வாங்கும் நிலையிலேயே அவரது பேச்சு இருந்தது.
1) மோடி: தனக்கு முந்தைய அரசு கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது என்று கூறினார்.
விடுதலை: முந்தைய அரசுகள் என் றால் வாஜ்பாய் அரசையும் குறிப்பிடு கிறாரா?
சுஸ்மா சுவராஜ், நிதின்கட்கரி, பிரகாஷ் ஜவ்டேகர், ஸ்மிருதி இரானி மற்றும் அருண்ஜெட்லி போன்ற மத்திய அமைச் சர்கள் மீதும் வசுந்தரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான், ஆனந்திபென் பட்டேல், ரமன் சிங் போன்ற மாநில முதல்வர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, விசாரனை நடைபெற்றுவருகிறது, மோடியின் மீது கூட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மீறி சலுகைதர பரிந்துரை செய்த குற்றச்சாட்டு உள்ளது, குஜராத் பெட்ரோலியம் என்ற நிறுவனம் துவங்கி அதன் பெயரில் பல கோடி ஊழல் புரிந்த குற்றச்சாட்டை தணிக்கைத்துறை மோடி மீது கூறியுள்ளது.
2) மோ: நான் சொல்வதையே செய் வேன் செய்வதையே சொல்வேன்.
வி: எங்கே அந்த 15 லட்சம்? அனை வரது வங்கிக் கணக்கிலும் வரும் என்று கூறிய அந்த ரூ. 15 லட்சம் எங்கே? பல கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறினீர்களே கார்பரேட் நிறுவனங்களில் சுமார் 77 லட்சம் இளைஞர் கள் பணி உத்தரவாதம் இன்றி கொத்தடி மைகளாக ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றார்கள்
3) மோ: இன்று ஒரு நிமிடத்தில் 15 ரயில் டிக்கெட்டுகள் புக் செய்யபடுகின்றன
வி: கடந்த ஓராண்டில் மட்டும் ரயில் திருட்டுச் சம்பவம் 20,000 மேல் நடந்துள் ளது. நகரின் மய்யத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு ரயிலில் இருந்து 6 கோடி திருடப் பட்டுள்ளது, தனி நபருக்கு ரயில் பயணத் தில் பாதுகாப்பில்லை
4) மோ: இன்று அரசின் எல்லா மருத்துவமனைகளிலும் ஆன்லைன் ரெஜிஸ்டிரேசன் நடைபெறுகிறது
வி: சொல்ல மறந்தவை - கடந்த ஆண்டு 4000-த்திற்கும் மேற்பட்ட கர்ப் பிணிகள் சிகிச்சை குறைபாட்டால் உயிரி ழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கர்ப்ப காலத்தில் சரியான முறையில் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையின் படி சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
5) மோ: வருமான வரி திரும்ப பெறுவது மிகவும் எளிதாகியுள்ளது,
வி: சுமார் 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் வருவாய் இழந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துவிட்டார் கள்
6) மோ: பாஸ்போர்ட் பெறுவதை நான் எளிதாக்கியுள்ளேன்.
வி: யாருக்கு? கருப்புப் பணம் பதுக்கு பவர்கள் விரைவில் தப்பிச்சென்று கொண்டு இருக்கிறார்கள்
7) மோ: 24 மணிநேரத்திற்குள் நிறு வனங்களின் பெயர்கள் பதிவு செய்யப் படுகின்றன,
வி: சிறு குறு நிறுவனங்கள் ஆயிரக் கணக்கில் இழுத்து மூடப்பட்டுள்ளன, குடிசைத்தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க வழியில்லாமல் திண்டாடி நிற்கின்றன.
8) மோ: சூரிய ஒளி மின்சாரம் 116 விழுக்காடு அதிகரித்துள்ளோம்
வி: சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன் படுத்துவோர் வெறும் 7 விழுக்காடு தான் உள்ளனர் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் சோலார் எனர்ஜி நிறுவனங்களில் 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை மய்யமாக வைத்து அட்டவணை ஒன்று வெளியிட்டுள்ளது. இங்கு நிறுவனங்கள் பொய் கூறுகின்றனவா? மோடி பொய் கூறுகிறாரா?
9) மோ: முதலில் 30-35 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள் பதிக்கப் பட்டன. ஆனால் தற்போது 50 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள் பதியப்படு கின்றன.
வி: கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய சாலைப்பணிசெய்யும் கருவிகள் வந்து விட்டன, இதன்படி 100 கிலோ மீட்டர் டிரான்ஸ்மீட்டர் வேலைகள் நடந்திருக்க வேண்டுமே?
10) மோ: ஒரு நாளைக்கு 70 முதல் 75 கிலோ மீட்டர் சாலைகள் போடப் பட்டன. இன்று ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் போடப்படுகிறது,
வி: இன்று நவீனகருவிகள் வந்துவிட்ட நிலையில் மேலும் அதிகரித்திருக்க வேண்டுமே ஏன் இல்லை?
11) மோ: எனது அரசு 60 கோடி எரிவாயு இணைப்புகளைத் தந்துள்ளது
வி: இந்திய எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி கிட்டத்தட்ட செயல்படாத நிலைக்குச் சென்று விட்டது, அரசு எரிவாயு நிறுவனங்கள் ரிலையன்ஸ் மற்றும் வெளி நாட்டு பெட்ரோலிய நிறுவனங்களை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது அதாவது இந்த எரிவாயு இணைப்பு மூலம் தனியார் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் அடிக்க வழிவகை செய்துவிட்டார்.
12) மோ: 70 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கியுள்ளோம்
வி: இதனால் சாமானியனுக்கு என்ன பயன் விளைந்தது,
13) மோ பழைய சட்டங்களை நீக்கியுள்ளோம்,
வி: சட்டங்களை நீக்கிய பிறகு தொழிற் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்க ஆரம்பித்து விட்டன,
14) மோ: ஜன் தன் யோஜனாவில் 21 கோடி மக்கள் சேர்ந்துள்ளனர்
வி: ஜன் தன் யோஜனாவினால் பல கோடி மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ள தாக வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது.
15) மோ: 2 கோடிக்கு மேல் கழிப் பறைகள் கட்டப்பட்டுள்ளன,
வி: கழிப்பறைகள் கட்டப்பட்டன - சரிதான், அதை தூய்மைப்படுத்த என்ன வழிவகை செய்துள்ளார்.
16) மோ: 7000-த்திற்கும் அதிகமான கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன.
வி: தூய்மைப்படுத்த நவீன கருவிகள் கொடுத்துள்ளீரா?
17) மோ: எல் ஈ டி விளக்குகள் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தியுள் ளோம்,
வி: இதற்கான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கத்தயாரா?
18) மோ: எல் ஈ டி பல்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன,
வி: இதனால் அரசுக்கு என்ன லாபம்?
19) மோ: எங்களது நடவடிக்கை யில் விலைவாசி குறைந்துள்ளது,
வி: பச்சைப் பொய், 2013-ஆம் ஆண்டு 40 ரூபாய்க்கு விற்ற பருப்பு வகைகள் வணிக விலையேற்ற விகிதப்படி இன்று ரூ.70 இருக்கவேண்டும் ஆனால் இன்று ரூ.180-க்கு மேல் விலையேற்றம் பெற்று விற்பனை ஆகிறது,
20) மோ: பணவீக்கத்தை கட்டுப் படுத்த ரிசர்வ் வங்கியிடம் பேசியுள் ளோம்.
வி: ரிசர்வ் வங்கி தலைவரான ரகுராம் ராஜனே மோடியைப் பற்றி நான் எது கூறினாலும் அது பெரும் பூகம்பத்தைக் கிளப்பும் என்று கூறியுள்ளாரே இதற்கு என்ன பதில்?
21) மோ: விவசாயிகளின் வாழ்க் கையை மேம்படுத்தியுள்ளோம்.
வி: மகாராஷ்டிராவில் மட்டும் பிரபல மான விவசாயிகள் தற்கொலை, இன்று கேரளாவரை பரவியுள்ளது, இதுதான் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடா?
22). மோ: விவசாயிகளுக்கு ஹெல்த் கார்ட் கொடுத்துள்ளோம்.
வி: தற்கொலை செய்து சாகும் விவ சாயிக்கு ஹெல்த் கார்ட் எந்த வகையில் உதவும்
23) மோ: ரயிலில் பயோ டாய் லெட் வசதி செய்து கொடுத்துள்ளோம்,
வி: முதலில் ரயில் பயணிகளின் பாது காப்பை உறுதிசெய்யுங்கள்
24) மோ: முந்தைய அரசுகள் முடக்கிய திட்டங்கள் பல்வற்றை நிறைவேற்றியுள்ளோம்,
வி: திட்டங்களை நிறைவேற்றத்தானே அரசுகள் உள்ளது, இதில் விளம்பரம் ஏன்?
25) மோ: ரயில்வே திட்டங்களுக்கு 4 மாதங்களில் அனுமதி கொடுத்து விடுவோம்.
வி: இந்தியாவில் தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே திட்டங்களை எப்போது முடிக்கப்போகிறீர்கள்
26) மோ: 95 விழுக்காடு கரும்பு விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளோம்.
வி: இதில் என்ன பெருமை? கரும் பாலைகளுக்கு கரும்பு தரும் விவசாயி களுக்கு பணப்பட்டுவாடா செய்வது என்பது தொடர் நடைமுறைதானே!
27) மோ: இன்னும் மூன்று ஆண்டு களில் 5 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு தருவோம்
வி: 2 ஆண்டுகளுக்கு 60 கோடி எரிவாயு இணைப்பு என்று கூறிவிட்டு அடுத்த 3 ஆண்டுகளில் வெறும் 5 கோடி என்று கூறுவது முரணாக உள்ளது.
28) மோ: கடைசி குடிமகனுக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என் பதில் நாங்கள் உறுதியாக இருக்கி றோம்.
வி: சிறுபான்மையினரும், தலித்துகளும் இந்தியக் குடிமகன்கள் இல்லையா?
29) மோ: ஜாதி மதத்தின் பெயரால் யாரையும் இழிவு செய்யவேண்டாம்
வி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த அய்தராபாத் சட்ட மன்ற உறுப்பினர் தலித்துகளை கொலை செய்வேன் என்று கூறினாரே அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மோடி அவர்களே!
30) மோ: நாட்டை சுகாதாரச் சீர் கேடில்லாத நாடாக மாற்றிவிட்டேன்
வி: கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருநகரங்களில் டெங்குவினால் இறந்த வர்களின் எண்ணிக்கை 3000 த்தை தாண்டுகிறது, கடந்த அய்ந்து ஆண்டு களாக நமது நாட்டை விட்டு ஓடிப்போன போலியோ மீண்டும் வரத்தொடங்கி யுள்ளது, காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்து விட்டதாக மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச காசநோய் ஒழிப்பு தினத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை தெரிவித்துள்ளது.
- சரவணா ராஜேந்திரன்
No comments:
Post a Comment