Friday, March 11, 2016

ஜவகர்லால் நேருபல்கலைக் கழக மாணவர்களால் மனுதர்மம் எரிப்பு!

மூண்டு விட்டது மகத்தான புரட்சி!
ஜவகர்லால் நேருபல்கலைக் கழக மாணவர்களால் மனுதர்மம் எரிப்பு!
எரிந்தது எரிந்தது மனுதர்மம்

ஏபிவிபி மாணவர் அமைப்பில் இருந்து விலகியவர்கள், மனுதர்ம நூல் பெண்களை இழிவுபடுத்துகிறது என்று முழக்கமிட்டு அந் நூலின் பிரதிகளை எரித்தனர். 




புதுடில்லி, மார்ச் 11_ டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பிஜேபி ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியைப் சேர்ந்தவர்கள், உண்மையை உணர்ந்து அந்த மாணவர் அமைப் பிலிருந்து விடுபட்டு மனுதர்ம சாஸ்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தி முழக்கமிட்டனர்.

பெண்ணுரிமை நாளை  முன்னிட்டு டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் பார்ப்பனியத்தின்  அடை யாளங்களில் ஒன்றான மனுதர்ம நூல் தீவைத்து எரிக்கப்பட்டது. பல் கலைக் கழக வரலாற்றில் பரபரப்பு ஏற்பட்டது.
மனுதர்ம நூலில் உள்ள  பெண்களுக்கு எதிரான 40 சட்டதிட்டங்களை சுட்டிக்காட்டி எரிக்கப் பட்டது.  ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் மீதான  அடக்குமுறை மற் றும் மனுதர்மநூல்  குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆர்.எஸ்.எஸ்--_ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யிலிருந்து வெளியேறிய மாணவர்களும், தற்போதைய ஏ.பி.வி.பி-ஜே.என்.யூ கிளையின் துணைத் தலைவர் ஜதின் கோரயாவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  கிமிஷிகி உள்ளிட்ட பிற மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டு மனு தர்மத்தை எரித்து காவிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஏ.பி.வி.பி-யில் மனு தர்மநூல் பற்றிய கருத்துக்களை விவா தித்து  பெண்களை இழிவு படுத்துவதாகக்  கூறி வெளியேறிய மாணவர் பிரதீர் நர்வால் அந்த 40 கருத்துக்களையும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடுவில் விளக்க உரையாற்றியனார்.  அவர் பேசுகையில் மனு தர்ம நூலை ஆதரிக் கும் எவரையும் மனித குலம் ஏற்றுக் கொள்ள முடி யாது. மனு தர்மநூல் தீண்டாமையை அதிகப் படுத்தியது, இன்றுவரை தீண்டாமைக் கொடுமை நிகழ்விற்கு மனுதர்ம நூலே காரணம் என்றார். போராட்டத்தில் பார்ப் பனிய, இந்துத்துவம் காவி அமைப்பு மற் றும் இவர்களுக்கு துணை போகும் அரசுக்கு எதி ரான முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பு  சமணர் களை கழுவேற்றியதில் தொடங்கி, பவுத்தர்கள் கூட்டம் கூட்டமாக எரித்தது முதல் சமீபத் திய தலித் மற்றும் பிற் படுத்தப்பட்டவர்கள் மீதான ஜாதீயக் கொடுமைகள் வரை மனுதர்ம நூலின் தாக்கம் உள்ளது, இந்த நூலில் உள்ளதுதான் ஆங்கிலேயர்களின் வரு கைக்கு முன்பு இந்தியா முழுவதும் ஆண்ட பல்வேறு மன்னர்கள் தங்களின் அரசு சட்டமாக வைத்திருந்தனர்.
மனுதர்மத்தின் தாக்கம் எப்படி என்று விளக்கினார். கோடி கோடியாக பணம், கிலோ கணக்கில் தங்கம், மற்றும் அயல்நாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக வைத்து கையும் களவுமாக பிடிபட்ட கேதன் தேசாயின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும்,  மருத் துவர் உரிமம் 2010-ஆம் ஆண்டு ரத்து செய்யப் பட்டு 2014-ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ராஜமரியாதையுடன் அப்பதவி மீண்டும் வழங் கப்பட்டது. கடந்த ஆண்டு அவரது மகள் திருமணம் சுமார் 120 கோடி செலவில் மும்பையில் நடந்தது; அதில் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ரூ.9000 கோடிகளை ஏப்பம் விட்ட விஜய் மல்லையா என்ற பார்ப்பனருக்கு நடந்த ராஜமரியாதையும் அவர் மீது கண்காணிப்பு உத்தரவு அமலில் இருந்தும் அவ ருக்கு என்று ஜெட் ஏர்வேஸ் தனி விமானத்தை  டில்லியிலிருந்து விஜய் மல்லையாவை ஏற்றிக் கொண்டு மும்பை வந்து மும்பையில் அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு அனுப்பியதே மோடி அரசு.
ஆனால் இளவர சன் கொலை செய்யப் பட்டதும், கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டது, ரோகித் வேமுலாவின் மரணமும் மனுதர்ம நூலின் பெயரால் நடந்த கொடுமையின் சின்னங்கள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வர் முன்னிலையில் ஒரு சம்பவம் நடந்தது; ரூப்கன்வர் என்ற பெண் அவளது கணவரின் எரியும் உடலுடன் சேர்த்து எரிக்கப்பட்டார். இன்றும் அவரது நினைவு நாளை ராஜஸ்தானின் முக்கிய நாளாக வசுந்தர ராஜே அறிவித்துள்ளார். இது எல்லாம் மனு தர்ம நூலின் பெய ரால் நடைபெறும் கொடு மைகள், இன்றைய பாஜக அரசு இந்த மனுதர்ம நூலைத்தான். அரசியல் சட்டமாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக்கப்பட வேண் டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கோட்பாடாகும்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

 
 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...