அரியானா, மாநிலம் மிருதால் என்ற இடத்தில்
22-ஆம் தேதி நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இக்கொடூர நிகழ்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்று உதவி எண்கள் தரப்பட்டதும் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானே முன்வந்து விசாரணைக்குழுவின் முன்பு புகார் அளித்துள்ளார். இதன் படி அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அரியானாவில் நடைபெறும் வன்முறையின் போது மாநிலம் முழுவதும் பல இடங்களில் பெண்கள் மீது பாலியல்வன்கொடுமைகள் நடத்தப்பட்டன. இக்கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாநில அரசின் அடியாட்கள், மற்றும் காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக வெளியே சொல்லப் பயந்து முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் டில்லி-பானிபட் நெடுஞ்சாலையில் நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் மூலம் வெளிவந்தது, ஆனால் பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டாரும் மாநில காவல்துறையும் இப்படி ஒருசம்பவம் நடக்கவே இல்லை என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் உள்ளது என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் அரியானா-பஞ்சாப் உயர்நீதி மன்ற தலையீட்டின் காரணமாக மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது, இந்த விசாரணைக்குழு முன்பு முதல்முதலாக சம்பவம் நடந்த அன்று நானும் என்னைப்போன்ற பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினோம். மேலும் பாலியல்வன்கொடுமைக்கு ஆளக்கியவர்களை நான் அடையாளம் காண்பிப்பேன் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவர் ராஜசிறி ஞாயிறுன்று பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கூட்டுப் பாலியல் நடந்ததாக கூறப்படும் நிகழ்வு குறித்தும், அது தொடர்பான விபரங்கள் குறித்தும் தெரிவிக்க சில எண்களைக் கொடுத்திருந்தோம்; சனிக்கிழமை இரவு டில்லியில் உள்ள நிராளா என்ற பகுதியில் இருந்து ஒருபெண் தான் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். உடனேஅவரிடம் ரகசிய இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றோம்; அதில் அவர் கூறியதாவது, அரித்துவாரில் புனித நீராடிவிட்டு நானும் எனது 14 வயது மகளும் டில்லி திரும்பிக்கொண்டு இருந்தோம்; பானிப்பட் நகரில் நாங்கள் வந்த பேருந்து வன்முறைக் கும்பாலால் தாக்கப்பட்டது, இதனை அடுத்து எங்களை நகரத்தின் புறநகரில் இறங்கச்சொல்லிவிட்டு நாங்கள் வந்த பேருந்தின் ஓட்டுனர் ஒடிவிட்டார். நானும் எங்களுடன் வந்த சில பெண்களும் டில்லி செல்ல ஒரு காரை ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். அப்போது வேன் ஓட்டுனர் ஒருவர் எங்களை டில்லி கொண்டுசென்று விடுவதாகக்கூறி பணமும் பெற்றுக்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பிறகு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.
ஏற்கனவே வயல்வெளிகளில் சில பெண்கள் ஓடுவது அவர்களை சிலர் துரத்திச் செல்வது கண்டு நாங்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்த போது எங்களையும் ஒரு கும்பல் வாகனத்தில் இருந்து பலவந்தமாக இழுத்துச் சென்றது; எனது கண் முன்னால் எனது 15 வயது மகளின் ஆடைகளை கிழித்து எறிந்தனர். நான் அவளை விட்டுவிடும்படி கெஞ்சினேன், என்னை கும்பல் வயல்வெளியில் அப்பால் தூக்கிச்சென்றனர். என்னை பாலியல் வன்கொடுமைச் செய்தவர்களை நான் நேரில் கண்டால் அடையாளம் காட்டுவேன் என்று கூறினார்.
அவரது மகளுக்கு என்ன ஆனது என்பதைக் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் இவ்விவகாரம் கூறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது இவரது புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். என்று கூறினார்.
மேலும், இக்கொடூர நிகழ்வு தொடர்பாக இதுவரை 70க்கும் மேற்பட்ட பெண்கள், புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நேரில் வரப் பயப்படுகின்றனர். எழுத்து மூலமாக புகார் கொடுத்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியும், புகார் தெரிவிப்பவர்களுக்கு நாங்கள் அனைத்துவித பாதுகாப்பும் அளிக்கத்தயாராக உள்ளோம் என்று கூறினார் - விசாரணை குழுவின் தலைவர்.
ஞாயிறன்று மாலை இவ்விவகாரம் குறித்து தலைநகர் டில்லியில் பாஜக பெண் தலைவர்களிடம் கேள்வி கேட்க முயன்றபோது யாரும் எந்த ஒரு பதிலும் கூறவில்லை, அதே நேரத்தில் மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கி தனது ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கப் பார்க்கிறது, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இப்படியொரு காட்டுவிலங்காண்டித்தனம் வேறு எங்கு நடந்திருக்கிறது? பிஜேபி ஆட்சியில் தான் நடந்திருக்கிறது. இந்திய தலைநகரமான டில்லியில் நிருபயா என்ற ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் மரணத்தைத் தழுவினார்.
இந்தியாவே கொந்தளித்து எழுந்தது. இப்பொழுது டில்லிக்கு அருகில் உள்ள அரியானாவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டு விலங்காண்டித்தனமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரே - ஊடகங்கள் ஏன் குறட்டை விடுகின்றன? அரசியல் விமர்சக வித்தகர்கள் என்று தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொள்வோர் ஏன் உறக்க நிலையில் உறைந்து கிடக் கின்றனர். மகளிர் ஆணையம் வாய் மூடிக் கிடப்பது ஏன்?
பாரதீய ஜனதா ஆட்சியாயிற்றே - பார்ப்பன ஜனதாவாயிற்றே பாதுகாக்க வேண்டுமே என்ற சுய ஜாதி வெறிதானே இதற்குக் காரணம்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment