நமது மூளையின் சக்தியும், உழைப்பும் மிக மிக முக்கியமானதல்லவா?
மூளையின் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகள், நோய்கள்கூட நம்மை எளிதில் அண்டாது விரட்டி விடலாம்!
அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது, நமது உடல் நலத்திற்கு மிகவும் உதவிடும் அரண் ஆகும்!
எந்த ஆபத்து நம் உடலின் எப்பகுதிக்கு வருவதாக இருப்பினும் முதலில் அபாய மணி ஒலியை அடித்து நம்மை எச்சரிக்கை செய்வது அதுதானே!
அது மட்டுமா பாலியல் உணர்வுக்கும் அங்கிருந்துதான் ஆணையும், ஆயத் தமும் பிறக்கிறது என்பதை பல பாலியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையைச் சரிவர இயங்க விடா மல் பாதிக்கச் செய்யக் கூடிய - நாம் கவனமாக, தவிர்க்க வேண்டிய 10 செய்திகளை, இணையத்தின் வழி, நமது அருமை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
(இதுபோன்ற பல்வேறு பயனுள்ள சுவையுள்ள செய்திகளை நம்மைப் போன்ற நண்பர்கள் வட்டத்திற்கு தவறாது அனுப்பி மகிழ்பவர் அவர்!)
அந்த 10 செய்திகள் இதோ: படிப்ப தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். நடை முறைப்படுத்தி, நலம் காப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் நண்பர்களே.
1. முதலாவது தவறு
காலைச் சிற்றுண்டியைப் புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது.
நமது வீட்டிலுள்ள பல வயது வந்த மாணவர்கள் - பிள்ளைகள்கூட இதில் - தவிர்ப் பதில் குறியாய் இருக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று அவசர அவசரமாக “அரக்கப் பறக்க” ஓடுவதினால், காலைச் சிற்றுண்டியை அலட்சியப்படுத்தி, பட்டினியோடு வகுப்பிற்கு அல்லது வேலைக்குச் செல்லுவது, மூளையை கெடச் செய்யும், (ரத்த ஓட்டத்தைக் குறைத்து சோர்வைப் பெருக்கச் செய்யும் - அதனால் கவனக் குறைவும், குறிப்பாக கவனக் குவிப்பைச் (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtமீ) செய்ய இயலாமல் போய் விடும்.
பள்ளி, கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று அவசர அவசரமாக “அரக்கப் பறக்க” ஓடுவதினால், காலைச் சிற்றுண்டியை அலட்சியப்படுத்தி, பட்டினியோடு வகுப்பிற்கு அல்லது வேலைக்குச் செல்லுவது, மூளையை கெடச் செய்யும், (ரத்த ஓட்டத்தைக் குறைத்து சோர்வைப் பெருக்கச் செய்யும் - அதனால் கவனக் குறைவும், குறிப்பாக கவனக் குவிப்பைச் (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtமீ) செய்ய இயலாமல் போய் விடும்.
ஆங்கிலத்தில் ‘ஙிக்ஷீமீணீளீ திணீst’ என்பது சரியான காரணப் பெயர் ஆகும். இரவு உணவு முடித்து பட்டினியாக இருந்தால், வயிற்றின் செரிமான உறுப்புக்கள் உணவுக்காக ஏங்கும் நிலையும் திரவம் சுரக்கும் தன்மையும் வயிற்றின் பல பாகங்களில் நாளா வட்டத்தில் புண்கள் - ‘அல்சர்’கள் ஏற்படவும், சோர்வு ஏற்படவும் வழி வரும்.
மேலை நாட்டவர் கணக்குப்படி, காலைச் சிற்றுண்டி போதிய அளவில் எடுத்துக் கொள்வது பல வகையிலும் சக்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.
2. அதற்காக உணவை எப்போதும் அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் கூடாது கூடவே கூடாது!
எவ்வளவு பெரிய விருந்து, சுவையுள்ள உணவு வகைகள் என்றாலும் ஒரு 25 விழுக்காடு - இல்லை 10 முதல் 15 விழுக் காடு இடத்தையாவது காலி வைத்து சாப்பாட்டை முடிப்பது மிக நல்ல வாழ் வுக்கு உதவக் கூடியதாகும்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும்போதே, கட்டாயமாக திணிக்காமல் உடனே - சபலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு - எழுந்துவிடுதல் மிக அருமையான முறையாகும்!
‘மீதூண் விரும்பேல்’ என்ற மூதுரைதான் எவ்வளவு அருமையான ஒன்று. அதிகம் சாப்பிடுவது உடலை மட்டும் கெடுக்காமல், மூளையையும் கெடுக்கும் என்பது இதன் மூலம் பெறப் படும் மற்றொரு எச்சரிக்கையாகும்.
3. இரவில் நேரங் கடந்து தூங்குவது மிகப் பெரிய கேடு ஆகும்!
உடலுக்கு உணவு எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும் ஆகும்! உரிய நேரத்தில் தூங்கும் பழக்கம், உரிய நேரத்தில் விழிக்கும் பழக்கம், நம் ஆயுளை வளர்க்கும் வழி முறைகளில் ஒன்று!
உணவு, தூக்கம், போதிய ஓய்வு, (தூக்கம் என்பதன் மூலம் ஓய்வு கிடைக்கிறது). வெகு நேரங் கழித்து படுக்கைக்குச் செல்லுவது விரும்பத்தக்கதல்ல. இளமையில் இது ஒரு பழக்கமாகி விட்டால், முதுமையில் அதுவே வழக்கமாகி விடக் கூடும். எனவே இதிலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.
4. நம் உடலுக்கு சர்க்கரை தேவைதான். எதுவும் அளவோடு இருத்தல் எல்லா விதிகளிலும் தலையாய விதியாகும்.
பலருக்கு ‘மீதூண் விரும்பல்’ காரண மாகவும், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனியை கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, போன்ற பலவும் - எல்லா மாவுச் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates)
சர்க்கரையாக மாறி நமது உடலில் சேரு கின்றன. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை.
பலருக்கு ‘மீதூண் விரும்பல்’ காரண மாகவும், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனியை கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, போன்ற பலவும் - எல்லா மாவுச் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates)
சர்க்கரையாக மாறி நமது உடலில் சேரு கின்றன. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை.
நிறைய சர்க்கரையை உருவாக்கிடும் உணவுகள் எவையாயினும் (இனிப்பு மட்டுமே என்று எண்ணாதீர்!) அது நமது கணையத்தை மட்டும் பாதிப்பதில்லை; மூளையின் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது எச்சரிக்கை, என்று இதன் மூலம் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
- கி.வீரமணி
(தொடரும்)
No comments:
Post a Comment