வாசிங்டன் போஸ்ட் முதல்
டெய்லி டைம்ஸ் வரை கடும் விமர்சனம்
மோடியின் தேனிலவு முடிந்தது
இந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பன்னாட்டளவில் உள்ள ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்து மோடியின் பின்னடைவை சுட்டிக்காட்டி உள்ளன.
மோடியின் தேனிலவு முடிந்தது
இந்திய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பன்னாட்டளவில் உள்ள ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்து மோடியின் பின்னடைவை சுட்டிக்காட்டி உள்ளன.
பிகார் தேர்தல் முடிவுகள் மோடி யின் அரசின் சீர்திருத்தங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜகவின் பிரித்தாளும் பிரச்சாரத்தால் மத பதற்றம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதைக் காட் டுவதாக பிகார் தேர்தல் முடிவுகள் உள்ளன என்று பன்னாட்டு ஊட கங்கள் குறிப்பிட்டுள்ளன.
தேர்தலின்போது பாகிஸ்தான் முக்கியப் பங்காற்றியுள்ளது. அது பாஜகவின் முக்கிய ஆயுதமாகக் கொண்டு பாகிஸ்தானைக் கூறியதால், பாஜகவுக்கான ஆதரவு தேய்ந்து இழப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் ஏடான டான் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் மோடியின் பட்டாசை கவர்ந்து கொண்ட பிகார் என்று மோடி, லாலு படங்களுடன் வெளியிட்டுள்ளது.
டெய்லி டைம்ஸ்
தி டெய்லி டைம்ஸ் ஏட்டில் மேய்ச்சல் நிலத்திலிருந்து மோடியை விரட்டிய பிகார் வாக்காளர்கள் என்று பசு அரசியலுக்கு எதிரான ஓங்கி ஒலிக்கப்பட்ட தீர்ப்பு என்றும், எதிர்க்கட்சிகள் மோடியின் குறுகிய அரசியலுக்கு எதிராக இணைவதற்கு திட்டம் வகுத்துக்கொடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியாசாட் டெய்லி ஏட்டில் பசு பால் கொடுக்கும்; வாக்குகளைக் கொடுக்காது என்பதை பிகார் தேர்தல் நிரூபித்துள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தி நியூஸ் இன்டர்நேஷ னல் தலைப்புச் செய்தியில் மோடியின் பாஜக கவ்விய தூசிபடிந்த தீவிரவாதம் என்று குறிப்பிட்டுள்ளது.
பி.பி.சி. தோலுரிப்பு!
பிபிசி செய்தியில் மோடியின் தோலுரிக்கப்பட்டதை எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. பாஜக தன் னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆவேச சீற்றத்துடன் வாக்கா ளர்களை நோக்கி, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் (பிகார்) அரசை விரும்பு கிறீர்களா? என்று கேட்டது. என்றும் குறிப்பிட்டுள்ளது.
டெலிகிராப் ஏட்டில் முக்கியமான மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எப்படி இப்படி வெற்றிகரமான இரண்டாவது தோல்வியை இங்கி லாந்து வருகின்ற நேரத்தில் மோடி பெற்றார்? என்று வினவியுள்ளது.
டெலிகிராப் ஏட்டில் முக்கியமான மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எப்படி இப்படி வெற்றிகரமான இரண்டாவது தோல்வியை இங்கி லாந்து வருகின்ற நேரத்தில் மோடி பெற்றார்? என்று வினவியுள்ளது.
எகனாமிஸ்ட் இணையத்தில் (பிளாக்கில்) மோடியின் தேனிலவு ஏறக்குறைய முடிந்துவிட்டது மோடி நெஞ்சை நிமிர்த்தி பேச்சின்மூலமாக, பாஜகவின் தொடர்ச்சியான தோல் விகளே கிடைத்துள்ளன என்று குறிப் பிட்டுள்ளது.
கார்டியன் கூறும் காரணம்!
கார்டியன் இதழில் குறிப்பிடும் போது, நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒரு சார்பான வெறியாட் டங்கள்மூலமாக நாட்டின் வளர்ச்சி குன்றியதைப்போன்று, நாட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மாநிலங்களவையில் பாஜக சிறுபான்மையாக இருப்பதால், மோடி செய்கின்ற மாற்றங்கள் எதிர்க்கட்சி களால் தடுக்கப்பட ஏதுவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் நாடாளு மன்றத்தில் மோடியின் செயல்பாடுகள் மதிக்கத்தக்கதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ்
லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழில் குறிப்பிடும்போது, மோடியின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் மக் களை பிரித்து பார்க்கின்ற வெறித் தனங்களால் பாஜகவின்மீது மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. வாக்குறுதி அளித்த பொருளாதார சீர்திருத்தங் களை கொண்டுவருவதில் தோல்வி கண்டுள்ளது என்று விமர்சனத்தையும் எடுத்துக்காட்டி உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழில் குறிப் பிடும்போது, பாஜகவை பின்னுக்குத் தள்ளியது என்பது முற்றிலும் பாஜக தேவையில்லை என்று புறக்கணித்ததே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மோடியின் ஆட்சியில் இந்தி யாவில் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் மதசார்பற்றவர்கள், முசுலீம்கள் மற்றும் பொதுவாக அரசியலில் வேறு பாடுகளைக் கொண்டிருப்பவர்கள் என்று அனைவர்மீதான சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழில் குறிப் பிடும்போது, பாஜகவை பின்னுக்குத் தள்ளியது என்பது முற்றிலும் பாஜக தேவையில்லை என்று புறக்கணித்ததே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மோடியின் ஆட்சியில் இந்தி யாவில் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் மதசார்பற்றவர்கள், முசுலீம்கள் மற்றும் பொதுவாக அரசியலில் வேறு பாடுகளைக் கொண்டிருப்பவர்கள் என்று அனைவர்மீதான சகிப்பின்மை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் இதழ் குறிப்பிடும் போது, பாஜக பொருளாதார அள வுகளை சொல்லிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், நாடுமுழுவதும் வலுவாக ஏற்பட்டுவருகின்ற எதிர்ப்புகளை எதிர்கொள்ளப்பபோகிறதா? அல்லது இந்துத்துவ அமைப்புகளின் ஆதிக்கத் திலிருந்து விடுபடப்போகிறதா? என் கிற சிந்தனையை முன்வைத்துள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- இந்துக்களுக்கு அநீதி இழைத்தால் கடும் நடவடிக்கை பாகிஸ்தான் அரசு
- பா.ஜ.க. முகாமில் வாண வேடிக்கை வெடிக்க தொடங்கியுள்ளது ப. சிதம்பரம்
- பீகார் தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டனம்!
- தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடிப்பு: சாவு எண்ணிக்கை 60 ஆக உயர்வு
- மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிராக பிரச்சாரம் இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்த தவறினால் 5.5 கோடி இந்தியர்களுக்கு பாதிப்பு
- ஆண், பெண்களுக்கு வித்தியாசமான மூளை அமைப்பு!
- குறைந்த கட்டணத்தில் மருத்துவமனை அமைக்க திருப்பூர் தொழில்துறையினர் திட்டம்
- லோக் அதாலத் முறையில் 8.25 கோடி வழக்குகள் தீர்வு உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்குர் தகவல்
- 11 பி.எட். கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிராகரிப்பு
No comments:
Post a Comment