Monday, November 9, 2015

பீகார் தேர்தல் கருத்துக் கணிப்பு: மன்னிப்புக்கோரும் ஊடகங்கள்


‘என்.டி.டி.வி’ தொலைக் காட்சியும், ‘டுடேஸ் சாணக்யா’ உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தலுக் குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை நடத்தின. அவற்றில், பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக் கும் என்று கூறப்பட்டிருந் தது. என்டிடிவி நடத்திய வாக்குக் கணிப்பில், பாஜக கூட்டணிக்கு 120 முதல் 130 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப் பட்டிருந்தது. ‘டுடேஸ் சாணக்யா’ அமைப்பு நடத்திய வாக்குக் கணிப் பில் பாஜக கூட்டணிக்கு 155 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப் பட்டிருந்தது.
எனினும், பிகாரில் மதச்சார்பற்ற சுயமரியா தைக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதன் மூலம், இந்த வாக்குக் கணிப்புகள் பொய்த்துவிட்டன.
இந்நிலையில், தவறான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதற்காக அவை மன்னிப்பு கோரி யுள்ளன.
இதுகுறித்து டுடேஸ் சாணக்யா அமைப்பு வெளியிட்ட டிவிட்டரில் கூறியதாவது:
பிகார் தேர்தல் நில வரத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாததற்காக, அனைத்து நண்பர்களிட மும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற கூட்டணிக்கு வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தப் பதிவில் கூறப்பட் டிருந்தது.
என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய், தொலைக் காட்சியில் கூறியதாவது:
பொதுவாக, களத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் நம்பத்தகுந்ததாக இருக் கும். ஆனால், இந்த முறை தகவல்கள் தவறாக அமைந்துவிட்டன. எங்கே தவறு நேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எனினும், தவறுகளுக்கு பொறுப் பேற்று மன்னிப்பு கேட் டுக் கொள்கிறோம் என் றார் பிரணாய் ராய்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...