பெங்களூரு, நவ.26_ மதச் சகிப்பின்மையால் மத்தியில் ஆளும் நரேந் திர மோடி தலைமையி லான பி.ஜே.பி. ஆட்சி சிக்கலில் சிக்கித் திணறு கிறது.
இதன் விவரம் வரு மாறு:
ராகுல் காந்தி
நரேந்திர மோடி தலை மையிலான மத்திய அரசு, இந்துத்வா கொள்கையை பரப்பும் நோக்கத்தில் பிற வகுப்பினருக்கு மறைமுக மாக அச்சுறுத்தல் ஏற் படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் துணை தலை வர் ராகுல் காந்தி குற் றஞ்சாட்டியுள்ளார். பெங் களூருவில் மவுண்ட்கார் மல் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி னார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜ அரசு, இந்துத்துவா கொள்கைக்கு முக்கியத்து வம் கொடுத்து வகுப்பு கல வரத்துக்கு ஆதரவளிக் கிறது. சிறுபான்மையின ருக்கு எதிராக செயல்படு கிறது. இது ஜனநாயகத் துக்கு ஏற்புடையதல்ல. பாஜ அரசு சகிப்புதன் மையை இழந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் அமைதி சீர் கெடும். மாணவர்கள் அறிவு, திறமையை நாட் டுக்கு அர்ப்பணித்து இந் தியாவை வல்லரசாக உரு வாக்க ஓரணியில் திரள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது. அவர்கள் வாழ்க் கையில் முன்னேற்றம டைய பல வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். என் கருத்தில் நான் உறுதி: அமீர்கான்
புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச் சியில் நடிகர் அமீர்கான் பேசியபோது, "இந்தியா வில் கடந்த சில மாதங் களாகவே இந்த அசா தாரண நிலை நிலவி வரு கிறது. பாதுகாப்பில்லாத சூழ்நிலையை, மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் னர் கூட என் மனைவி கிரண் என்னிடம் வந்து, நாம் வேண்டுமென்றால் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா? குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறி னார். கிரண் பயப்படுவதி லும் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந் தார். அவரது இந்த கருத் திற்கு பல்வேறு தரப்பு களிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் இன்று அமீர்கான் வெளியிட் டுள்ள அறிக்கையில், நானும் என் மனைவியும் இந்தியாவை விட்டு வெளி யேற வேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு எதிராக பேசுபவர்கள் ஒன்று எனது பேட்டியை பார்த் திருக்கமாட்டார்கள் அல் லது வேண்டும் என்றே தவறாக பேசுகிறார்கள். கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி எனக்கும், என் மனைவிக்கும் இந்தி யாவை விட்டு வெளியே றும் எண்ணமும் இல்லை. என்னை தேச விரோதி யாக அழைக்கும் அனை வருக்கும் நான் இந்திய னாக இருப்பதில் பெரு மைப்படுகிறேன் என்ப தைச் சொல்லிக் கொள் கிறேன். இதை சொல்வ தற்கு யாரின் ஒப்புதலும் தேவையில்லை. நான் இந்தியாவை நேசிக்கி றேன். நான் மனம் திறந்து பேசியதற்காக, என்னை நோக்கி சரமாரியாக கூச் சலிட்டவர்கள் அனை வருமே நான் குறிப்பிட்ட அந்தக் கருத்தை மட்டும் தான் நிரூபித்திருக்கிறார் கள் என்பது என்னை வருத்தமடையவைக்கிறது. ஆனால் நான் ஏற்கெ னவே கூறிய கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந் தவர்களுக்கு நன்றி கூறி யுள்ள அமீர் கான், இந்த அழகான நாட்டின் ஒரு மைப்பாடு, பன்முகத் தன்மை, மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறு, சகிப்புத்தன்மை ஆகிய வற்றை பாதுகாக்கவேண் டும் எனவும் தெரிவித் துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக நடந்துவரும் போராட் டங்கள் வன்முறையில்லா மல் கவித்துவமாக இருப் பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று ரகுமான் அளித்துள்ள பேட்டியில் அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறை யற்றதாக இருப்பதே சிறந் தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகு முறை கவித்துவமாக உள்ளது.
காந்தியார் பிறந்த மண்ணிலிருந்து வந் துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். புரட்சியை அகிம்சை மூலம் கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர் காந்தியார் என்று ரஹ் மான் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விவாதம்!
அண்மைக்காலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. தாத்ரி சம்பவம், கன்னட எழுத்தாளர் கல் புர்கி படுகொலை, மும் பையில் பாகிஸ்தான் முன் னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்திய குல்கர்னிமீது கருப்பு மை பூச்சு ஆகிய சம்பவங்களை இதற்கு உதாரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கூறி வருகின்றன. இதனால் இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சகிப் பின்மை பிரச்சினை குறித்து தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை டில்லி மாநிலங்களவைத் தலைவர் அமீது அன்சாரி யிடம் மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் சீதா ராம் யெச்சூரி அளித்தார். டில்லியில் நேற்று நடந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் இதை அவர் தெரிவித் தார்.
சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டில்லி மாநிலங்கள வைத் தலைவரிடம் சகிப் பின்மை அதிகரித்து வரு வது பற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான நோட்டீசு அளிக்கப்பட் டது. அதை அவையின் தலைவர் அமீது அன்சாரியும் ஏற்றுக்கொண் டார். எனவே இதன்மீது விவாதம் நடக்கும்.
அதே நேரம் சகிப் பின்மை அதிகரிப்பு குறித்து அனைத்து கட்சி களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்மா னம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வருவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அவைத் தலை வருக்கு அளித்த நோட் டீசை திரும்ப பெறு வேன். _இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இந்துத்துவா பிஜேபி ஆட்சியில் நான்கு மாதங்களில் 330 வகுப்புவாத வன்முறைகள்
- தி.மு.க. அளிக்க முன்வந்த துயர்துடைப்பு நிதியைப் பெற்றுக் கொள்வதிலும் தாமதித்தது ஏன்?
- சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியின் பணிகளுக்கு இனிமேல்தான் அதிகம் வேலை - தொடர்ந்து செயல்படுவோம்!
- மாறாயினும் வேறாயினும் அல்ல! யாராயினும் தமிழரே! திராவிடரே! இந்துத்துவா நோய்க்கு அருமருந்து பெரியாரே!
- தேவை ராம் ராஜ்ஜியம் அல்ல - பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியமே! - பேராசிரியர் கே. எஸ். பகவான்
No comments:
Post a Comment