தலாய்லாமா
சென்னை, நவ.11_ ‘‘அனைத்து மதத்தினரை யும், கடவுள் நம்பிக்கை இல்லாதவரையும் மதிப் பதே மதச்சார்பற்ற தன்மை’’ என, தலாய் லாமா கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க சென்னை வந்துள்ள, திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சென்னை அய்.அய்.டி.,யில், ‘உலக அமைதிக்கான மனித முயற்சி’ என்ற தலைப்பில், மாணவர்களின் கேள்வி களுக்கு நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
கடந்த நுற்றாண்டு அதிக வன்முறைகளால் நிரம்பியது. தங்களுக்குப் பிடிக்காத கொள்கை கொண்டவர்களை அப் புறப்படுத்துவது என்பது ஏற்கக்கூடியதல்ல. அனைத்து மதத்தினரை யும், மத நம்பிக்கை இல் லாதவர்களையும் சேர்த்து மதிப்பதே, உண்மையான மதசார்பற்ற தன்மை.

வன்முறை என்பது முட்டாள்தனம்
உங்களை எதிர்க்கும், உங்கள் கருத்துக்கு எதி ரான அனைவரையும், உங் களால் அகற்ற முடியாது. இந்த உலகில் உள்ள, 700 கோடி மக்களில், 100 கோடி மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். எனவே, அவர்களையும் மதிக்க வேண்டியது முக்கியம். மத நம்பிக்கை என்பது அவர வர் சொந்த விஷயம்.

இந்தியாவில், பல்வேறு மதத்தவர் ஒற்றுமையுடன், சகிப்புத் தன்மையுடன் வாழ்கின்றனர். எனவே, இந்தியாவே உலகுக்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டு. திபெத்திலிருந்து நான் இந்தியாவுக்கு வந்த போது, எனக்கு, 24 வயது; தற்போது எனக்கு, 80 வய தாகிறது. இந்திய பருப் பையும், சப்பாத்தியையும் தான் சாப்பிடுகிறேன். என் உடலின் ஒவ்வொரு பாகமும், தற்போது இந்தி யனாகவே இருக்கிறது.
சிரிப்பு இல்லாத ஒரு மனிதருடன் என்னால் பழகவே முடியாது. புன் னகை இல்லாத மனித ருக்கு நேரமே போகாது. நான் பல நேரங்களில் தலாய்லாமா என்பதை விட, சாதாரண மனித னாக உணர்ந்து தனிமை யில் இருக்கிறேன். என் தாய் தான் எனக்கு முதல் ரோல் மாடல். அவரது முகத்தில் நான் கோபத்தை பார்த்ததே இல்லை. உல கிலுள்ள பெரும்பாலான அம்மாக்கள் என் அம்மா வைப் போல், கோபமில் லாத, இரக்கக் குணம் கொண்டவர்கள்.
எனக்கு பின், பெண் ஒருவர் தலாய் லாமாவாக வர வாய்ப்புள்ளது. ஆனால், அவர் கண்டிப்பாக முகத் திலும் அழகானவராக, மற்றவர்களை கவரக் கூடியவராக இருக்க வேண்டும். இதை நான் பல முறை சொல்லியிருக் கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மூன்று நாட்களாக கொட்டிய மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு அஞ்சல் துறை அறிவிப்பு
- இலங்கைச் சிறையிலிருந்த 126 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
- குரூப் 1 தேர்வு: தமிழகம் முழுவதும் இரண்டு லட்சம் பேர் தேர்வு எழுதினர்
- தியாகராயர் நகரில் புதிய மேம்பாலங்கள், நடைபாதை அமைக்கும் நடவடிக்கை
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
No comments:
Post a Comment