ஜம்மு-காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம்: காங்கிரஸ் விமர்சனம்
மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம்: காங்கிரஸ் விமர்சனம்
ஜம்மு, நவ.9_ ஜம்மு_-காஷ்மீர் மாநில வளர்ச் சிக்காக மத்திய அரசு சார்பில் ரூ.80,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது மக்களை கேலி செய்யும் அரசியல் நாடகம் என்று காங்கிரஸ் கட்சி விமர் சித்துள்ளது.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மீர் கூறியதாவது:
காஷ்மீரில் தங்கள் கூட்டணிக் கட்சியை திருப்திப்படுத்துவதற்காக பிரதமர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ஒரு அரசியல் நாடகம். அவரது அறிவிப்பில் எவ் வித தெளிவும் இல்லை. வெறும் கண் துடைப் புக்காக இதனை அறிவித் துள்ளார்.
காஷ்மீரில் கடந்த அரசு ரூ.44 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் கோரியது. அப்போது ரூ.8 ஆயிரம் கோடியை மட் டும் வழங்கிவிட்டு, இப் போது 80 ஆயிரம் கோடி தருவதாக அறிவித்துள் ளார். இது காஷ்மீர் மக் களை கேலி செய்வது போல இருக்கிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப் பதற்கு மட்டும் ரூ.34 ஆயிரம் கோடி ஒதுக்கி யது என்றார் அவர்.
ஒமர் அப்துல்லா
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,
நிதி அறிவிப்பதால் காஷ்மீரில் உள்ள பிற பிரச்சினைகள் தீர்ந்து விடாது. பிரதமரிடம் இருந்து மக்கள் வேறு அறிவிப்புகளை எதிர் பார்த்தார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்துள்ளது.
பிரதமரின் பேச்சில் புதிய விஷயங்கள் ஏது மில்லை. மோடியின் வரு கையால் புதிதாக ஏதும் நிகழும் என்ற நம்பிக்கை யையும் நான் வைத்திருக்க வில்லை என்று கூறினார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மாணவர்களுக்கான புதிய செயலிகள் அறிமுகம்: மத்திய அரசு நடவடிக்கை
- பாஜகவிடம் எச்சரிக்கை தேவை கட்சியினருக்கு மாயாவதி அறிவுறுத்தல்
- “சகிப்புத்தன்மை இல்லாத அரசு!” குடியரசுத் தலைவரிடம் சோனியா புகார் மனு
- மத்திய அரசு வெளியிடும் தங்கக் கடன் பத்திரத்துக்கான விலை ஒரு கிராம் ரூ.2,684 என நிர்ணயம்
- பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்குமேல் தங்கியிருந்தால் பணி நீக்கம் மத்திய அரசு புதிய விதிமுறை .
No comments:
Post a Comment