மாட்டிறைச்சி விவகாரத்தால் மோடி தலைமையில் ஆன மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்புதல் வாக்குமூலம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்புதல் வாக்குமூலம்
பனாஜி அக் 12 நாடு முழுவதும் மாட்டிறைச்சி குறித்த விவாதம் மற்றும் தாதரியில் மாட்டிறைச்சி வதந்தியால் முதியவர் அடித்துக் கொலை செய் யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த சம்பவங் களால் என்.டி.ஏ மற்றும் பாஜகவின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது என்று ஒப்புக் கொண்டார். பனாஜியில் கப்பற் படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபிறகு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார், அதில் செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பார்வையாளர்களில் ஒருவர்: தனிப்பட்ட நபரின் உணவு விவகாரத் தில் மதரீதியான கொள்கை களைத் திணிப்பது, அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது மத்தியில் ஆளும் கட்சிமீது மக்களிடையே அவ நம்பிக்கை ஏற்படாதா? மனோகர் பாரிக்கர்: உண்மைதான், முக்கியமாக மாட்டிறைச்சி வதந்தி காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், பிசாரா கிராமத்தில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. இந்த சம்ப வத்தின் மூலமாக வள மான இந்தியா என்ற கன விலிருந்து சிறிது பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி தலை மையில் ஆன மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற் பட்டுள்ளது, அதே போல் தேசிய ஜனநாயகக் கூட் டணியில் உள்ள கட்சி களுக்கும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. கேள்வி: மோடி ஏன் இதில் நேரடியாக பதில ளிக்காமல் மவுனம் சாதித்தார்?
மனோகர் பாரிக்கர்: மோடி எந்த ஒரு சம்பவத் திற்கும் உடனடியாக பதிலளிக்க முடியாது, காலச்சூழல், சம்பவத்தின் தாக்கம், மற்றும் பல்வேறு காரணங்களை ஆய்வு செய்த பிறகு தான் கருத் துக் கூறமுடியும், ஆனால் இந்தச் சம்பவம் அந்த மாநிலம் தொடர்பான பிரச்சினையாகும், மோடி ஏதாவது கருத்துக் கூறி னால் அது தேசிய அள வில் தாக்கத்தை ஏற்படுத் தும். சில உள்ளூர் அர சியல் கட்சிகளும், மதரீதி யான லாபநோக்குடன் கட்சி நடத்தி வரும் சில ரும் இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரி தாக்கி விட்டனர். அவர்களுக்கு இது ஒரு அரசியல் லாபம் தரும் சம்பவமாகப் மாறி விட்டது.
கேள்வி: இந்து அமைப் புகள் இந்த சம்பவத்தில் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைக் கூறிவரு கிறன்றனவே, இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தானே வழிகாட்டி? மனோகர் பாரிக்கர்: மாட்டிறைச்சி விவகாரத் திற்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் தீவிர ஆதரவாளன் என்று அனைவருக்கும் தெரியும், நான் உறுதியாகக் கூறமுடியும் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சி னைகள் தற்போது நாடு முழுவதும் எழும் தாக்கங் கள் இந்த இரண்டுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற் கும் தொடர்பில்லை கேள்வி: மாட்டிறைச் சித் தடை மதரீதியாக முன் னெடுத்துச் செல்லப்படுகிறதே?
மனோகர் பாரிக்கர்: முற்றிலும் தவறானது மாட்டிறைச்சித் தடை என்பது மாடுகளை துன்பு றுத்துதல், சூழல்மாசுபடு தல், சுகாதாரக் கேடு போன்ற பல்வேறு கார ணங்களை மய்யமாக வைத் துத்தான் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் கொண்டு வரப்படுகிறது, இதுதான் அதற்கான முக்கிய கார ணமாகும். மாட்டிறைச்சி திருவிழா நடத்தும் கோவா அரசு கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சித் தடை யில்லை, மேலும் கோவா தினம் (கோவா கார்னிவல்) என்ற பெயரில் ஒரு வாரம் நடக்கும் அரசு விழாவில் மாட்டிறைச்சித் திருவிழா என்ற இரண்டு நாள் விழாவும் உண்டு, இந்த விழாவில் மாட்டிறைச்சி யில் செய்யப்படும். பல் வேறு வகையான உணவு வகைகள் கண்காட்சி போன்றவையும் நடக்கும், இந்த நிகழ்ச்சியில் கோவா அமைச்சர்கள் முதல் அதி காரிகள் வரை கலந்து கொள்வார்கள்.
இந்த மாட்டிறைச்சி விவகாரம் குறித்து கோவா மாநில முதல்வராக இருந்த போது மனோகர் பாரிக்கர் கூறிய கருத்து: கோவா பல் வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலமாகும், முக்கியமாக இந்த மாநி லத்தில் முதன்மை வரு மானமே சுற்றுலாவினால் வருவது தான்; ஆகவே அயல்நாட்டு மக்களைக் கவர மாட்டிறைச்சி விழாவை அரசே நடத்துகிறது என்று கூறியிருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சீற்றம் அடையும் சிந்தனையாளர்கள்
- சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியா?
- நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டுவதேபி.ஜே.பி.யின் நோக்கமாக உள்ளது
- மத்திய பிஜேபி அரசின் மதச் சார்பு, சகிப்புத் தன்மையற்ற போக்கை மறைமுகமாக சாடினார் குடியரசுத் தலைவர்
- நுழைவுத் தேர்வு கிராமப் பகுதி மாணவர்களைப் பாதிக்கவே செய்யும்
No comments:
Post a Comment