அதிர்ச்சித் தகவல்! அதிர்ச்சித் தகவல்!!
தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கண்டனம்
சென்னை, ஜூலை 10_ தமிழக நிதிநிலை அறிக் கையில் அறிவித்த ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை, தமிழக அரசு முழுமை யாகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையம் தமிழக அர சுக்குக் கண்டனம் தெரி வித்துள்ளது.
தமிழக பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான 18 சதவீத நிதியில் 2 சதவீதத்தை கூட அவர் களுக்காகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தெரிவித் தார்.
தாழ்த்தப்பட்டவர்களுக் கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தலைமையில், உறுப்பினர் கள் கமலம்மா, ராஜூ பார்மர் உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று முன் தினம் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சங்கங்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர்.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசி கன், தமிழக டிஜிபி அசோக்குமார் மற்றும் துறைகளின் செயலாளர் களுடன் நேற்று ஆலோ சனை நடத்தினர்.
தொடர்ந்து ஆணைய தலைவர் புனியா கூறிய தாவது:
தமிழகத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங் கப்படும் கல்வி தேசிய அளவைவிட 7 சதவீதம் அதிகமாக உள்ளது. கல்வி கற்ற தாழ்த்தப்பட்ட பெண்கள் எண்ணிக்கை யும் அதிகம். தாழ்த்தப் பட்ட மாணவர்களுக் கான 1,314 விடுதிகளில் 482 விடுதிகள் மாணவிகளுக் கானவை. இவற்றில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து புகார் வந்ததால், ஆய்வு செய்ய அரசுக்குப் பரிந்துரைத் துள்ளோம்.
தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக் கான 18 சதவீத இட ஒதுக் கீட்டை, 20 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளோம். இவர்களில், 33 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக் குக் கீழே உள்ளனர்.
தமிழக நிதிநிலை அறிக் கையில், தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒதுக்கப் படும் 18 சதவீத நிதியில், 2 சதவீதம் மட்டுமே அவர்களுக்காக செலவி டப்படுகிறது. மீதமுள்ள நிதி பொதுத் திட்டங் களுக்கு செலவிடப்படு கிறது. இதை ஆணையம் அனுமதிக்காது.
தேசிய அளவில் தாழ்த் தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகள வில் நடக்கும் 5 மாநிலங் களில் தமிழகமும் ஒன்று. வன்கொடுமை தொடர் பான புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதியாமல், நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே பதிவு செய்யப்படுகிறது.
வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி ஆதாரம் இல்லாவிட்டால் வழக்கை முடிக்கலாம். ஆனால், தமிழகத்தில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப் பட்டுள்ளன. மேலும், 10 சதவீதம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பான விஷயங் களை கண்காணிக்க மாநில அளவில் முதல் வர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சி யர் தலைமையிலும் கண் காணிப்புக் குழுக்கள் உள் ளன. ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டிய இந்த குழு, மாநில அளவில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஜூன் 25-_க்குப் பின் கூடவில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் என போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்துள்ள 2000 பேரை யும் பணியில் இருந்து உடனடியாக நீக்கி, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந் துரைத்துள்ளோம்.
வேறு ஜாதி பெண் களை காதலிக்கும் தாழ்த் தப்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய் வோம் என டிஜிபி விளக் கம் அளித்துள்ளார். கவுர வக் கொலைகள் விவகா ரத்தில் நீதி மறுக்கப்பட் டால் மட்டுமே ஆணை யம் தலையிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment