டில்லி, நவ.9- இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு
செய்யப்பட்ட ஆய் வறிக்கை யில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும்
மருந்து களின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல்
கிடைப் பதில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க
மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன. இவ்வாறு
அளிக்கப்படும் விளம்பரங் களில், மருந்து தயாரிப்பில் எந்தெந்த பொருட்கள்
பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளி வான தகவல்கள் தரப்படு வதில்லை.
பெரும்பாலான மருத்துவர்கள், மருந்துகள் குறித்து தகவல் அறிய மருத்துவ
பத்திரிக்கைகள் மற்றும் மருத்துவ பிரதிநிதி களை சார்ந்து உள்ளனர்.
மருத்துவர்களுக்கு மருந்து களின் தன்மை குறித்த தெளிவான தகவல் இல்லா ததால்
அவர்கள் மருந்து களின் பக்க விளைவுகளை அறியாமலேயே நோயுற்ற வர்களுக்கு அதனை
பரிந்து ரைக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்திய மருத்துவக் கழக பத்திரிகையில் 2011 டிசம்பர் முதல் 2012 நவம்பர்
வரை கொடுக்கப்பட்ட 145 மருந்து களுக்கான 54 விளம்பரங் களில், இரண்டு
விளம்பரங் களில் மட்டும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள்
குறித்த தகவல் இருந்தது. 2 விளம் பரங்களில் மருந்தின் பக்க விளைவுகள்
குறிப்பிடப் பட்டிருந்தன. மருந்து உபயோகிப் பதற்கு முன் தேவையான
முன்னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்து இரண்டு விளம்பரங்கள் தெரிவித்
திருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஜி. எம் மருத்துவ கல்லூரி மற்றும்
எல்.எஸ்.கே மருத் துவமனை ஆய்வாளர்கள், அனைத்து விளம்பரங் களிலும்
மருந்துகளின் பிராண்ட் பெயர் குறிப் பிடப்பட்டிருந்ததாகவும், ஆனால்
அவற்றில் வெறும் 61 சதவீத விளம்பரங்கள் மட்டும் மருந்தின் மருத்துவ
சிகிச்சை பயன்கள் குறித்த தகவலை தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.
மருந்துகள் குறித்த தகவலுக்கு மருத்துவ பத்திரிகை விளம்பரங்களை
சார்ந்திருப்பதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவர்கள்
நோயுற்றவர்களுக்கு மருந் துகள் பரிந்துரைக்கும் போது அதிக கவனத்துடன்
செயல்படுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் வலியு றுத்தியுள்ளது.
No comments:
Post a Comment