Tuesday, July 8, 2014

பார்வையிழந்தோர் வாக்களிக்க இயந்திரம்: கண்டுபிடித்த மாணவிகள்






பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியுமின்றி வாக்களிக்கும் வகையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கோவில் பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கணினித் துறை சார்பில், மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி  நடைபெற்றது.

கல்லூரியில் கணினித் துறையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அதில், பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் மின்னணுவியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம், ரயில் பாதையை மூடும் தானியங்கிக் கருவி மற்றும் பயணத்தின்போது வைத்திருக்கும் பெட்டிகளை கண்காணிக்கும் கருவி ஆகியவை சிறந்த மாதிரியாக தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது.

பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் வாக்களிப் பதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கணினித் துறை இறுதி ஆண்டு மாணவிகள் ருக்மணி, டஃபினி ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

இந்த வாக்களிக்கும் இயந்திரத்தில் ஒரு விசைப்பொறி, தொடுதிரை மற்றும் வேட்பாளர்கள், கட்சியின் பெயர்கள், அவர்களின் சின்னங்களைச் சொல்லும் ஒரு பதிவு செய்தல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பார்வையற்றவர்கள் செவி, ஒலிபெருக் கியை காதில் அணிந்து அதன்மூலம் வேட்பாளர்களின் விவரங்களைக் கேட்டறிந்து, அவர்கள் விரும்பும் வேட் பாளருக்கு தொடுதிரை மூலம் வாக்களிக்கலாம். இதில் உள்ள விசைப்பொறி பொத்தான், எத்தனை வாக்காளர்கள் வாக்களித்தனர் என்ற எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு உதவியாக உள்ளது.

பார்வையிழந்தோர் செவி ஒலி பெருக்கியை காதில் அணியும்போது, ஒரு வேட்பாளர், கட்சியின் பெயர்களை 5 முறை சொல்லும். வாக்களிப்போர் இயந்திரத்தைப் பயன்படுத்தியவுடன் நன்றி என்று சொல்லும். இதனால் பார்வையிழந்தோர் வாக்களித்தது உறுதி செய்யவும் ஏதுவாக உள்ளது என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...