ஆசிரியர் தகுதித் தேர் வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 விழுக் காடு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டதால், கூடு தலாக 45 ஆயிரம் பேர்கள் பலன் அடைந்ததாக தின மணி நாளிதழில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இப்படி செய்தி வெளி யிடுவதன் நோக்கமே தாழ்த்தப்பட்டவர்களுக் கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் ஒரே அளவு கோல் சரியா என்ற கேள் வியை மறைத்துவிடலாம் என்று தினமணி கருது கிறதோ?
இரண்டாவதாக 2013 இல் எழுதியவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று அரசு அறிவித்திருப் பது நேர்மையா, நியாயமா? என்ற கேள்வியையும் புறந் தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா?
நீதிமன்றம் சென்றால் அரசின் முடிவு நிற்குமா? வீண்பிடிவாதம் காட்டா மல் 2012 ஆம் ஆண்டில் இரு கட்டமாக நடை பெற்ற தகுதித் தேர்வை எழுதியவர்களுக்கும் இந் தப் பலன் கிடைக்க, வழி செய்யவேண்டும் தமிழ் நாடு அரசு.
No comments:
Post a Comment