Wednesday, February 12, 2014

இல. கணேசன் ஏன் பாடினார் வந்தே மாதரம்?

சென்னையை அடுத்த வண்டலூரில் கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி பேசினார். அந்தக் கூட் டத்தில் கலந்து கொண்ட திருவாளர் இல. கணேசன் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடினா ராம். அவருக்குப் பாடத் தெரியும் என்பதற்காக தனது திருவாயைத் திறந் தாரா? சங்கீதத்தில் புலி என்பதற்காக தனது சாரீ ரத்தைக் காட்டிக் கொண் டாரா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது!

நரேந்திரமோடி இப் பொழுதெல்லாம் முஸ்லீம் களைத் தாக்கிப் பேச மாட் டார் - வேண்டுமானால் தாஜா செய்வார்! அவர் முகத்தில் விழுந்த மத வெறி கரும் புள்ளியைத் துடைத்தெடுக்க படாத பாடுபடுகிறார். இந்த நிலையில் வீண் வம்பை விலைக்கு வாங்க முடியுமா?

அந்தக் குறையைப் போக்குவதற்குத்தான் திரு வாளர் இல. கணேசன் தன் சாரீரத்தை அரங்கேற்றினார்.

வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் வங்கா ளத்தைச் சேர்ந்த பங்கிம்சந் திர சட்டர்ஜி என்பவர்; 1894இல் வங்காள மொழி யில் எழுதப்பட்ட ஆனந்த மடம் எனும் நாவலில் இடம் பெற்ற பாடல்தான் இந்த வந்தே மாதரம்!

அந்த நாவலில் காணப் படும் கதையம்சமும், உரை யாடலும் இஸ்லாமியர்க ளுக்கு எதிரானவை என்பது மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்திய டிக்க வேண்டும் என்பது தான் அந்த நாவலின் அடி நாதம். அந்த நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு காட்சி; ஒரு கிராமமே கொள்ளையடிக்கப்படுகிறது. திடீரென ஒரு முழக்கம்! முஸ்லீம் களைக் கொல்லு! கொல்லு!! என ஒரே ஆர்ப் பரிப்பு! வந்தே மாதரம் எனும் பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல்: ஓ சகோதரர்களே! மசூதிகளை யெல்லாம் தரை மட்ட மாக்கி, அந்த இடத்திலே மாதவர் ஆலயத்தைக் கட் டும் நாள் விரைவில் வரும் (பாபர் மசூதி இடிப்பை இந்த இடத்தில் நினைவு கொள்க!) என்றுபிரசங்கம்.
வந்தே மாதரத்தின் தாத்பரியம் என்ன என்பது ஓரளவிற்கு இப்பொழுது புரிந்திருக்குமே!

1937இல் ஒரிசா சட்டப் பேரவையில் வந்தே மாத ரம் தேசிய கீதமாகப் பாடப் பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. சட் டப் பேரவைத் தலைவரி டம் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும் பொழுது உட்கார்ந்திருப்பதும், எழுந் திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறி விட் டார் சபாநாயகர்.
அதே கால கட்டத்தில் 1938இல் சென்னை மாநிலத் தில் என்ன நடந்தது? சக்ர வர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) அப்பொழுது சென்னை மாநிலப் பிரதமர்.

சட்டப் பேரவைத் தலை வராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி. சட்டப் பேரவை தொடங்கும் போது வந்தே மாதரம் பாடலைப் பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் பேரவா! பாடவும் பட்டது; முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்த னர். இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் பாடலை நாங்கள் எப்படிப் பாட முடி யும்? என்று எதிர்க் கேள்வி வைத்தனர்.

குல்லூகப்பட்டர் பிரத மர் ஆச்சாரியார் ஒரு தந்திரம் செய்தார் (அதுதானே அவ ருக்கே உரிய குணாம்சம்!)

சபை அலுவல் தொடங் கும் நேரம் காலை 11 மணி  -அதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடி விட லாம், மற்றவர்கள் அதற்குப் பின் அவைக்கு வரலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார். வேண்டுமானால் வந்தே மாதரத்தோடு வேறு மதப் பாடல்களையும் இணைத் துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இந்தத் தந்திர வலைக்குள் சிக்கிக் கொள்ள முசுலிம்கள் தயாராக இல்லை; முடிவு வந்தே மாதரம் வராத மாதரமாக ஆக்கப் பட்டு விட்டது.

இதற்குள் இவ்வளவு சரக்குகள் இருக்கின்றன. முஸ்லீம்களை  நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற விஷம் அந்தக் குப்பிக் குள் இருக்கிறது.

இந்துத்துவா கூட்டத் தில் இஸ்லாமியர்களைத் தாக்கிப் பேசாமல் இருக்க முடியுமா? சந்தர்ப்பவாத மாக மோடி பேசாவிட்டா லும் நம் உணர்வின் வெறியை வெளிப்படுத்தா மல் இருக்க முடியுமா? இருக்கலாமா? என்ற எண்ணத்தோடுதான் திருவாளர் இல. கணேசன் வாள்(ல்) வந்தே மாதரம் பாடலை, வண்டலூர் கூட் டத்தில் முழுமையாகப் பாடித் தீர்த்திருக்கிறார் புரிகிறதோ!

காந்தியைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் கடைசிப் பகுதியாகக் கூறி முடித்த வரியில்கூட அந்த வந்தே மாதரம் இருக் கிறதே!

அகண்டபாரத் அமர் ரஹே, வந்தே மாதரம்

- கருஞ்சட்டை


Read more: http://www.viduthalai.in/e-paper/75085.html#ixzz2t5BCvcCZ

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...