பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் பரபரப்புத் தகவல்கள்
புதுடில்லி, டிச.17- நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்குரைஞர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவரத்தை மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வெளி யிட்டார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் வழக்குரைஞர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உச்சநீதி மன்றம், ஏ.கே.கங்குலி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்தது.ஆனால் பாலியல் புகா ரை திட்டவட்டமாக மறுத்த, முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்தும் விலக மறுத்தார். ஏ.கே.கங்குலி மீது சட்டப்படி விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் வலி யுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் நேற்று டில்லியில் கூறுகையில், முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அப்படி விலக மறுத்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
பெண் வழக்குரைஞர் அளித்த புகார்
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், பெண் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண வாக்குமூலத்தையும் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டார். அதில் நீதிபதி கங்குலி மீது பெண் வழக்குரைஞர் அளித்த புகார் விவரம் வருமாறு:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி இரவில் (கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தையதினம்), நீதிபதி கங்குலி தன்னை தொலைபேசி மூலம் அழைத்தார். நான் ஓட்டல் அறைக்கு சென்றதும் அங்கு மேலும் ஒரு பெண் உதவியாளரும், அகில இந்திய கால்பந்து சங்கம் தொடர்பாக ஒரு ஆணும் இருந்தனர்.அவர்களை நீதிபதி எனக்கு அறிமுகம் செய்துவைத்து, அகில இந்திய கால்பந்து சங்கம் வழக்கு தொடர்பான அறிக்கையை மறுநாள் காலை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இரவு முழுவதும் வேலை இருப்பதால், அங்கு தங்க வேண்டியது இருக்கும் என்று நீதிபதி கூறினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் அவருடன் இருந்த ஆணும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நான் நீதிபதியிடம், வேலையை விரைந்து முடித்துவிட்டு திரும்பி விடுவதாக தெரிவித் தேன். அப்போது வலைத்தளம் வேலை செய்யாததை நீதிபதியிடம் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் நீதிபதி கங்குலி, மது பாட்டிலை வெளியில் எடுத்து கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஓட்டல் நிர்வாகத்தினர் கொடுத்த அன்பளிப்பு என்றும் நான் மது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றும் கூறினார். மது அருந்திய அவர் என்னையும் அருந்துமாறு கட்டாயப்படுத் தினார். வேறு வழி இல்லாமல் நானும் சிறிது அளவு சாப்பிட்டேன்.
பின்னர் சாப்பிட வருமாறு அழைத்தார். அங்கு இருக்கையில் அமரமுயன்றபோது எனது பின்பகுதியை நீதிபதி தொட்டு, எனக்கு உதவி செய்ய வந்ததற்கு நன்றி என்று கூறினார். நீதிபதியின் விபரீத போக்கை உணர்ந்து கொண்ட நான் அவரிடமிருந்து விலக முயன்றேன். அப்போதும் நீதிபதி என் அருகில் வந்து என் தலை மீது கை வைத்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறி என்னை படுக்கை அறைக்குள் அழைத்து, வா... இருவரும் சற்று ஓய்வாக இருப்போம் என்று அழைத்தார். அது எனக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பதற்றமாகவும் மன நிலையை குலைப்பதாகவும் இருந்தது.
தொடர்ந்து அவர் எனது கையை பிடித்து, உன்னால் நான் மிகவும் ஈர்க்கப் பட்டுள்ளேன். உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியபடி நீதிபதி என்னை நெருங் கினார். நான் அவரது பிடியில் இருந்து விலகி வெளியேற முயன்றபோது, நீதிபதி எனது கை மணிக்கட்டில் முத்தமிட்டார். என்னை மிகவும் நேசிப்பதாக மறுபடி மறுபடி கூறினார்.
நான் அவரை தள்ளிவிட்டு, எனது கணினியையும், பையையும் எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளி யேறினேன். அவர் என்னை தொடர்ந்து வந்து, போகாதே போகாதே, நான் உனக்கு தொல்லை தருகிறேனா? என்னை விட்டு போகாதே, இப்போது எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். அகில இந்திய கால்பந்து வழக்கு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினேன்.
ஓட்டல் வரவேற்பு அறை வரை நீதிபதி எனது பின்னால் வந்தார். அங்கு நான் செல்வதற்கு கார் இல்லாததால், நீதிபதி தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசினார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் கால்பந்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்று நீதிபதி என்னிடம் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து தனியாக நின்ற நீதிபதி, வேலையை முடித்துத் தருமாறு என்னிடம் வேண்டி னார். நான் பதில் ஏதும் கூறவில்லை. பின்னர் இரவு 10.30 மணிக்கு கார் வந்ததும் நான் அங்கிருந்து திரும்பிவிட்டேன். நான் எனது விடுதிக்கு திரும்பியதும், நீதிபதி எனக்கு போன் செய்து, போய் சேர்ந்து விட்டாயா? என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று பதில் அளித்ததும் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
மறுநாள் காலையில் இருந்து அடிக்கடி எனக்கு நீதிபதி போன் செய்தார். ஆனால் நான் அந்த போன்களை எடுக்கவில்லை. அன்று இரவு 9 மணிக்கு நான், நீதிபதிக்கு போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் முதல் நாள் இரவு நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்ததாகவும், மேலும் எனது பணியை தொடர விரும்பவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவித்து இருந்தேன். பதிலுக்கு நீதிபதி வருத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதில் அனுப்பவில்லை. பின் னரும் அடிக்கடி போன் செய்தார். அவரு டன் பேசுவதை, நான் தவிர்த்துவிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண் வழக்குரைஞர் கொடுத்த புகார் அறிக்கை வெளியானதற்கு, முன்னாள் நீதிபதி கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அமர்வு முன்பு அளிக்கப் பட்ட ரகசிய அறிக்கையை எப்படி வெளி யிடலாம் என்றும் அவர் கேள்வி விடுத்தார்.
போராட்டம்
இதற்கிடையில் மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி உடனடியாக விலகக் கோரி, கொல்கத்தா அலிபூரில் உள்ள அந்த அலுவலகம் முன்பு எதிர்ப்பாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.கறுப்பு பட்டை அணிந்திருந்த அவர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் ஏந்தி இருந் தனர். நீதிபதி கங்குலியின் உருவபொம்மை யையும் அவர்கள் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலிமீது சட்டம் கடமையைச் செய்யட்டும்!
- நீதிபதிகள் நியமனத்தில் தற்போதுள்ள கொலிஜியம் முறையை நீக்க வேண்டும்
- தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்!
- தஞ்சை வல்லம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
- அய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அய்யப்பப் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக பரிதாப மரணம்
No comments:
Post a Comment