தி இந்து தமிழ் நாளிதழுக்கு எனது வாழ்த்துக்கள்.தமிழ் பத்திரிகை உலகில் நல்ல பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் தி இந்துவில் எந்தவித பாரபட்சங்களுமின்றி கருத் துகள் இடம்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோர் கருத்து.
நான்
தினமும் ஆறு பத்திரிகை களைப் படிப்பவன்.பார்ப்பவனல்ல! ஆங்கில நாளிதழில்
பல வெளிவராத செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மற்ற நாளி
தழ்கள் மொழி பெயர்த்து வெளி யிட்டுள்ளன.
இப்போது
ஒரு நெருடலான செய்தி என்னவென்றால் முதல் நாள் வெளிவந்த தி இந்து ஆர்வமாய்
வாங்கி படித்தேன். நல்ல பல கட்டு ரைகள். கவர் ஸ்டோரி,விளையாட்டு,
இன்னும்பல..ஆனால்தேடி தேடி பார்க்கின்றேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்
செய்தி ஒரு இடத்தில் கூட இல்லை. இது தொடர்பான சைக்கிள்பந்தயம் என்ற ஒரு
செய் தியை தவிர.. தங்களின் தலையங்கத் தில் தமிழ் மொழியின் சிறப்பிற்கு
மேலும் அழகூட்ட நாங்களும் வந் துள்ளோம் என்று எழுதி விட்டு அன்னை தமிழ்
மொழிக்கு எப்படி யெல்லாம் சிறப்பை சேர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்த
தமிழ்த்தாயின் மூத்த குடிமகன் என்று தமிழர்களால் அடையாளம் காணப் பட்ட அந்த
அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் செய்தியை விட்டு விட்டீர்களே! அரசியல்
கட்சியினர் நடத்தும் அண்ணா பிறந்தநாள் செய்திகள் இடம்பெற வில்லை என்றாலும்
ஒரு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையிலாவது செய்தி வெளியிட்டு சிறப்பை
சேர்த்திருக்கலாமே! ஆனால் ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததுதான் தவறு என
நினைக்கின்றேன்.
ஆம். சென்னை
உயர்நீதிமன்றத் தில் டி.முத்துசாமி அய்யர் என்ற ஆரியர் ஒருவர் தமிழராக
தெரியும் (இன்றைய தலையங்கத்தில் வந்த ஆதாரம்) தி இந்துவிடம் தன் தாய்
நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாவை எப்படி
தெரியும்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.திராவிட இயக்கப் புறக்கணித்தலை
கைவிட்டால்தான் தங்கள் நாளிதழை மக்கள் புறக் கணிக்க மாட்டார்கள்.
- தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட தி.க.செயலாளர் காரைக்குடி-630002
No comments:
Post a Comment