தமிழர் தலைவர் சென்ற வாகனம்மீது வன்முறை வெறியாட்டம்! எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் மீதும் தாக்குதல்!!
விருத்தாச்சலத்தில் நேற்று (28.9.2013) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாணவரணி மாநாடும், பேரணியும் மிகுந்த எழுச்சியோடும், மக்கள் பங்கேற்போடும் நடந்து கொண்டிருந்ததை கண்டு பொறுக்காத கூலிப்படைக் கும்பல் ஒன்று திறந்தவெளி மாநாட்டில் உரையாற்ற வந்து கொண்டிருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எதிப்புத் தெரிவிக்கிறோம் என்று கொடி கட்டப்பட்ட கழி, கம்புகளுடன் விருத்தாசலம் பாலக்கரையில் கூடி நின்றுள் ளனர். தங்களிடம் அனுமதி பெறாமல் தலைவர் வரும் பாதையில் சாலையை மறித்து நின்றவர்களை கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள் போலும் காவல்துறையினர்!
தமிழர் தலைவரைத் தாக்க முயன்ற காவிக்கும்பல், அது முடியாததால் தலைவர் பயணித்த வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தியது. தமிழர் தலைவர் வந்த வேன், பாதுகாப்பிற்கு வந்த பொலீரோ ஜீப் ஆகியவற்றை அடித்தும், கம்பு கட்டைகளால் தாக்குதல் நடத்தியும், வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
தேசிய யாதவ மகாசபை என்ற பெயர் தாங்கிய கொடியைப் பிடித்திருந் தவர்களும் காவிக் கொடித்துணிகளைப் பிடித்து வந்த பாரதிய ஜனதா உள்ளிட்ட காவிக்கூலிப்படையின் தாக்கு தலையும் தாண்டி, தமிழர் தலைவரின் வாகனம் மேடையை அடைந்தது. தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து முழக்கம் எழுப்பிய தோழர்களை கூலிப்படையினரும், காவல்துறையினரும் தாக்கியது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. காலை முதல் அமைதியான முறையில் எழுச்சியாக நடந்த கொண்டிருந்த மாநாடு, பேரணியை ஆர்வமுடன் பார்த்து, தொடர்ந்து மாலை மாநாட்டில் பங்கெடுத்த விருத்தாச்சலம் நகர பொதுமக்களும், கழகத்தோழர்களும், கழகத் தலைவரின் வாகனம் தாக்கப்பட்டதையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தோழர்கள் தாக்கப்பட்டதையும் கண்டு கடும் எதிர்ப்பையும், காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டு கடும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
கழகத் தலைவரைத் தாக்க ஆயுதங்களுடன் வந்த யாதவ மகா சபை மற்றும் பாரதிய ஜனதா கூலிப் படைக் காவிகள் (28.9.2013, விருத்தாசலம்)
கைக்கட்டி நின்ற காவல்துறையினர் (28.9.2013, விருத்தாசலம்)
No comments:
Post a Comment