Monday, September 30, 2013

வீரமணி ஒழிக என்று கூச்சல் போடுகிறீர்களே! வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரியுமா?

கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதியையும் ஒழித்து விட்டுத்தான் ஒழிவான்!
விருத்தாசலம் மாநாட்டில் தமிழர் தலைவர் போர்ப்பறை!

விருத்தாசலம், செப்.29- கடைசி ஆதிக்கவாதியையும், கடைசி சுரண்டல்காரனையும், கடைசி மூடநம்பிக்கைவாதி யையும் ஒழித்துவிட்டுத் தான் இந்த வீரமணி ஒழிவான் என் றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
விருத்தாசலம் வானொலித் திடலில் நேற்று (28.9.2013) மாலை நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் கழக மாணவரணி மாநாட்டில் நிறைவுரை  வழங்கிய போது அவர் குறிப்பிட்டதாவது:
விருத்தாசத்தில், திராவிடர் கழக மாநாடு நடைபெறக் கூடாது; ஊர்வலம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தாலும் நான் இங்கு வரக் கூடாது என்பது சிலரின் ஆசை; அதற்காக வன்முறையில் இறங்கியுள்ளனர். (தலைவர் வந்த வாகனத்தை சில காலிகள் தாக் கினர், தலைவரையும் தாக்க முயன்றனர்).
இந்த இயக்கத்தைப்பற்றி அறி யாதவர்கள் இவர்கள். எதிர்க்க எதிர்க்கத்தான் இந்த இயக்கம் வளரும் - அப்படித்தான் வளர்ந் தும் வந்திருக்கிறது.
யாரோ சிலர் போதிய தெளிவு இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் பின்னணியில் பார்ப் பனர்களின் தூண்டுகோல் இருக் கிறது  - நமது காவல்துறையும் இத னைச் சரியாகக் கையாளவில்லை.
காலை முதல் பல்வேறு கட்சி களைச் சேர்ந்தவர்கள், விபூதி பூசிய தமிழர்கள், நாமம் தரித்த தமிழர்கள்கூட எங்களை வர வேற்று மகிழ்ச்சியைத் தெரிவித் துக் கொண்டனர். சால்வை களை அணிவித்த வண்ணமாக வும் இருந்தனர்.
நான் வரும் வழியில் சிலர் கூடி வீரமணி ஒழிக என்று கூச்சல் போட்டனர். வீரமணி எப்பொழுது ஒழிவான் தெரி யுமா? கடைசிப் பார்ப்பானின் ஆதிக்கம் இருக்கும் வரை, கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கும் வரை, கடைசி சுரண் டல்காரன் இருக்கும் வரை, அவற்றை ஒழித்து விட்டுத்தான், வீரமணி ஒழிவான் (பலத்த கரவொலி!)
என் உயிருக்கு மூன்று முறை குறி வைத்தனர். மம்சாபுரத்திலும், சென்னை புதுவண்ணையிலும், ஆத்தூர் தம்மம்பட்டியிலும் என் உயிருக்குக் குறி வைத்துத் தாக் கினார்கள்.
மூன்று முறை எனக்கு இருதய சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. நான் இயற்கையாய் மரணம் அடைவதைவிட இது போன்று பொதுப் பணியில் நான் ஈடுபடும் போது நான் உயிரிழக்க நேரிட் டால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி ஏது?
பத்து வயதில் விருத்தாசலத்தில் இதே வானொலித் திடலில் பேச ஆரம்பித்தவன் நான். தோழர் முனுசாமி, நமது மாவட்டத் தலைவர் இளங்கோ அவர்களின் மாமனார் சபாபதி அவர்கள், முருகன்குடி ராஜவேலு போன் றோர் இந்தப் பகுதியில் இயக்கப் பணிகள் ஆற்றினர்.
இன்றைக்கோ ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் இயக்கத்திற்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டிற்குப் பிறகு  ஏராளமான இளைஞர்கள் இயக்கத்திற்கு வரு வார்கள்.
நாங்கள் வன்முறையை வன் முறையால் சந்திக்கக் கூடியவர்கள் அல்லர்; எங்களின் அறிவார்ந்த பிரச்சாரத்தால் அவர்களையும் திருத்தவே ஆசைப்படுகிறோம்.
என்னைத் தாக்க வந்தவர் களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பாடுபடுகிறோம். இன்றைக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசில் 27 சதவீத இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் கிடைக்கிறது என் றால் யார் காரணம்?
மண்டல் குழுப் பரிந்துரை களைச் செயல்படுத்த திராவிடர் கழகம் தானே பாடுபட்டது.
மண்டல் அவர்களே பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றினாரே! நாங்கள் அறிக்கையைத் தான் கொடுக்க முடியும். அதனைச் செயலாக்கும் சக்தி பெரியார் பிறந்த மண்ணுக்குத்தான் உண்டு. திராவிடர் கழகத்திற்குத் தான் உண்டு என்று பேசினாரே!
நான் கிருஷ்ணன் பற்றி அறிக்கை வெளியிட்டதாகக் கோபப்படுகிறார்கள். அதற்காக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் கூறி னார்கள். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். வீதியில் சொல்லுவதை, நீதிமன்றத்திலும் ஆதாரத்துடன் கூற நல்ல வாய்ப் புக் கிட்டும்.
அந்தக் கிருஷ்ணன் தானே கீதையை உண்டாக்கி சதுர்வர் ணம் மயா சிருஷ்டம் என்றான். நான்கு வருணத்தையும் நானே உண்டாக்கினேன் என்றான்.
அந்த நான்கு வருணத்தில் நீங்கள் யார் - நாம் யார்? சூத்தி ரர்கள் தானே! சூத்திரன் என்றால் யார்? இதோ அசல் மனுதர்மம். அதன் 8ஆவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
யுத்தத்தில் புறங்காட்டி ஓடு பவன், பக்தியால் ஊழியம் செய்கிறவன், தனது தேவடியாள் மகன் என்று சொல்லவில்லையா?
இந்த இழிவிலிருந்து நீங்களும் சரி, நாங்களும் சரி விடுபட வேண் டாமா!
சூத்திரனுக்குப் படிப்பு கிடை யாது, சொத்துரிமை கிடையாது; இவ்வளவும் இன்று கிடைத்துள் ளன என்றால் அதற்கும் காரணம் நாங்கள் தானே!
நாங்கள் இல்லையென்றால்  மீண்டும் ராஜாஜியின் குலக் கல்வி திட்டம் தானே வரும்!
இங்கு மோடி வந்து விட்டுச் செல்லுகிறாரே - அவர் ஆட்சியில் மனுதர்மம் பாடமாக வைக்கப் பட்டுள்ளதே. இந்தியா முழுமை யும் இந்த மனுதர்மக் கொடியைப் பறக்க விடத்தானே முயற்சி நடக் கிறது? அதனைத் தடுத்து நிறுத் தும் ஆற்றல் இந்த இயக்கத்திற்குத் தான் உண்டு என்று குறிப்பிட் டார்.




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கி.வீரமணி சென்ற வாகனம்மீது வன்முறை வெறியாட்டம்!

தமிழர் தலைவர் சென்ற வாகனம்மீது வன்முறை வெறியாட்டம்! எதிர்ப்பு தெரிவித்த தோழர்கள் மீதும் தாக்குதல்!!


விருத்தாச்சலத்தில் நேற்று (28.9.2013) நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாணவரணி மாநாடும், பேரணியும் மிகுந்த எழுச்சியோடும், மக்கள் பங்கேற்போடும் நடந்து கொண்டிருந்ததை கண்டு பொறுக்காத கூலிப்படைக் கும்பல் ஒன்று திறந்தவெளி மாநாட்டில் உரையாற்ற வந்து கொண்டிருந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எதிப்புத் தெரிவிக்கிறோம் என்று கொடி கட்டப்பட்ட கழி, கம்புகளுடன் விருத்தாசலம் பாலக்கரையில்  கூடி நின்றுள் ளனர். தங்களிடம் அனுமதி பெறாமல் தலைவர் வரும் பாதையில் சாலையை மறித்து நின்றவர்களை கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள் போலும் காவல்துறையினர்!
தமிழர் தலைவரைத் தாக்க முயன்ற காவிக்கும்பல், அது முடியாததால் தலைவர் பயணித்த வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தியது. தமிழர் தலைவர் வந்த வேன், பாதுகாப்பிற்கு வந்த பொலீரோ ஜீப் ஆகியவற்றை அடித்தும், கம்பு கட்டைகளால் தாக்குதல் நடத்தியும், வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
தேசிய யாதவ மகாசபை என்ற பெயர் தாங்கிய கொடியைப் பிடித்திருந் தவர்களும் காவிக் கொடித்துணிகளைப் பிடித்து வந்த பாரதிய ஜனதா உள்ளிட்ட காவிக்கூலிப்படையின் தாக்கு தலையும் தாண்டி, தமிழர் தலைவரின் வாகனம் மேடையை அடைந்தது. தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து முழக்கம் எழுப்பிய தோழர்களை கூலிப்படையினரும், காவல்துறையினரும் தாக்கியது மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. காலை முதல் அமைதியான முறையில் எழுச்சியாக நடந்த கொண்டிருந்த மாநாடு, பேரணியை ஆர்வமுடன் பார்த்து, தொடர்ந்து மாலை மாநாட்டில் பங்கெடுத்த விருத்தாச்சலம் நகர பொதுமக்களும், கழகத்தோழர்களும், கழகத் தலைவரின் வாகனம் தாக்கப்பட்டதையும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தோழர்கள் தாக்கப்பட்டதையும் கண்டு கடும் எதிர்ப்பையும், காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டு கடும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.




கழகத் தலைவரைத் தாக்க ஆயுதங்களுடன் வந்த  யாதவ மகா சபை மற்றும் பாரதிய ஜனதா கூலிப் படைக் காவிகள் (28.9.2013, விருத்தாசலம்)
கைக்கட்டி நின்ற காவல்துறையினர் (28.9.2013, விருத்தாசலம்)

Friday, September 27, 2013

அ.தி.மு.க. ஆட்சியில் சமூக (அ)நீதி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் சலுகை வழங்க முடியாதாம்
சென்னை, செப்.26- ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் இடஒதுக்கீடு முறையில் சலுகை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரை ஞர் பழனிமுத்து, கருப் பையா உட்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித் துள்ள உத்தரவின் அடிப் படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர் வினை நடத்துகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படாமல் தேர்வுகள் நடத்தப் படுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் ஆந்திரா, ஒரிசா உள் ளிட்ட பிற மாநிலங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படு கிறது. எனவே தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி உத்தர விட வேண்டும் இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது.  அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப் பினர் செயலாளர் டி.வசுந்தரா தாக்கல் செய்துள்ள பதில் மனு வில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆசிரி யர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தும் முக்கிய அமைப்பாகும். இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் களை தமிழக அரசுதான் நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் கள் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே இந்த தகுதித் தேர்வில் பங்கேற்பவர் களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பல் வேறு மதிப்பெண்கள் வழங்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இந்த உயர்நீதி மன்றம் ஒரு கமிட்டி நியமித்தது. அந்த கமிட்டி அளித்த அறிக்கையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலு கைகள் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரி யர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. மாணவர் களுக்கு தரமான கல் வியை வழங்குவதற்காக இந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவில் சமர சம் செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்குவ தில் யாருக்கும் சலுகை வழங்க முடியாது என் றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு தர மான கல்வி வழங்க ஆசிரியர் தகுதித் தேர் வில் தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. எனவே தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் எந்த சமரச மும் செய்ய முடியாது. இந்த தேர்வில் சலுகை கள் வழங்க தேவை யில்லை. இந்த வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, September 22, 2013

தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்?


தந்தை பெரியார் தேவைக்கான உச்சக்கட்டம் இது. வரலாற்றுப் போக்கால் ஆரியத்தை, வருணாசிரமத்தை வைதீ கத்தை வீழ்த்தி புத்தம் எழுந்தது. பிற் காலத்தில் பக்தி மார்க்கம் சூழ்ச்சியால் கோலோச்சி பவுத்த சமண மார்க்கங் களைச் சாய்த்தது.
பல நூற்றாண்டுகளுக்குமுன் பவுத்தமும், சமணமும் தோற்ற இடத்தில் தந்தை பெரியார் என்ற ஒரு வரலாற்றுப் பெருமான் எழுந்தார்.
ஆரியத்தின் ஆணி வேர் பக்க வேர், சல்லி வேர்களை சொல்லிச் சொல்லி வெட்டி வீழ்த்தினார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரம் பெரு வெள்ளமானது; - சூறாவளி யாகச் சுழன்றது; சுனாமியாக வீறு கொண் டது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மூட் டிய தீ இந்தியா முழுமையும் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந் திருக்கிறது.
சூத்திரா என்ற அமைப்பு உத்தர பிரதேசத்தில் உதித்தது. இராமனுக்கு அங்கும் செருப்படி விழுந்தது. டில்லியில் பெரியார் மய்யம் எழுந்தது. கொல் கத்தாவில் பெரியார் மய்யம் தேவை என்ற விண்ணப்பம் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் சிகாகோவை தலைமை மய்யமாகக் கொண்டு எண்டிசையும் ஈரோட்டு வேந்தரின் சிந்தனைச் செல் வங்கள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து; - மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தோ, ஆபத்து! உலகம் மத யானை யின் அச்சுறுத்தலால் பெரும் அபாய வட்டத்துக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் மூர்க்கமாக எழுந்துள்ளனர். இந்தியாவில் இந்துத்துவா என்னும் காவிக் கூட்டம் திரிசூலத்துடன் புறப்பட் டுள்ளது.
அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி காவிப் படையினர் துவம்சம் செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் அமைந்த காவி ஆட்சி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித் தது - தலைகளைச் சீவியது. கர்ப்பிணிப் பெண்களைக் கூட சூறையாடியது.
இந்தியாவையே குஜராத் தாக்க துடித்துக் கொண்டு நிற்கிறது. வரவிருக் கும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று டில்லி கோட்டையில் காவிக் கொடியை ஏற்றலாம் என்று எச்சில் ஊறி எகிறிக் குதிக்கிறது.
புத்தரை வீழ்த்தி வைதிகம் புத்துணர்வு பெற்றது போல - பெரியாரியத்தை வீழ்த்தி மீண்டும் ஆரியம் அரியாசனத்தில் அமரும் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்குப் பெரும் தடை தந்தை பெரி யாரியல்தான். அதனை நிர்மூலப்படுத் தாமல் தாம் நினைத்தது நடக்கப் போவ தில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளனர். பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
இந்தியாவில் 70 சதவிகித ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளில்; இணையதளம் வேறு சேர்ந்து கொண்டு இருக்கிறது. பொய்யை விதைத்து பொய்யை அறுவடை செய்யும் கும்பலாயிற்றே! விதைக்காது விளையும் கழனியாயிற்றே!
தந்தை பெரியார் மீது அவதூறுகளை ஆவேசமாக அள்ளி வீசுகிறார்கள். எந்த வகையிலாவது பெரியாரியலைப் பலகீனப்படுத்த முடியாதா என்பதில் படாதபாடு படுகிறார்கள்.
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பறச்சி ரவிக்கை போட்டதால் தான் விலைவாசி ஏறி விட்டதாகப் பெரி யார் பேசி இருக்கிறார் என்று பொத்தாம் போக்கில் புழுதி வாரி, தூற்றுகின்றனர்.
பெரியார் எங்கே பேசினார்? எப்பொ ழுது பேசினார்? என்ற விவரங்கள் கிடை யாது. மானாங்காணியாக எழுதுகிறார்கள்.
இந்த அக்கப் போர் குற்றாச்சாற்று தந்தை பெரியார் காதிலும் விழுந்தது.
இதற்குத் தந்தை பெரியாரே பதில் கூறியிருக்கிறார்.
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னதுதான்; எலெக்சன் நேரத்திலே இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஒட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான் நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போடக் கூடாது அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது;
இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்; இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும்.  நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே யாகும்.
- (சென்னை அயன்புரத்தில் 11.12.1968 மாலை 7.15 மணி அளவில் நடைபெற்ற வேலூர் நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில் பேசுகையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து இந்தப் பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது).
(ஆதாரம்: விடுதலை 15.12.1968 பக்கம் 3).
உண்மை இவ்வாறு இருக்க, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வைக்கம் வரை சென்று போராடி அதற்காக இருமுறை சிறை வாசமும் கண்டு வந்த வைக்கம் வீரர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் அவர்கள்தான் கொச்சை மனிதர்கள்; உண்மையைக் காலில் போட்டு மிதித்து பொய்மையில் வயிறு வளர்க்க ஆசைப்படும் அற்பப் பேர் வழிகள்.
தீண்டாதார் எனும் தலைப்பில் 1928 நவம்பர் 8ஆம் தேதி வெளிவந்த குடி அரசில் தந்தை பெரியார் எழுதிய தலை யங்கம் என்ன கூறுகிறது?
தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப்புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை.
இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும் சுமார் 25 வருடங் களுக்கு முன்பாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்குமேயானால் இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப் பிராய பேதங்களும், ஒற்றுமை யின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிரா மணக்கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய் வத்தைக் காணக்கூடாத மனிதனும் இந்தி யாவில் இருக்கக்கூடுமாவென்பதை யோசிக்க வேண்டுவதோடு பொது நோக் குடைய ராஜீய மகாநாட்டில் இதை வலி யுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். - குடிஅரசு தலையங்கம் - 08.11.1925
பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்றவரும் பெரியார் (குடிஅரசு 11.10.1931)
ஜாதி இழிவு இன்னும் வெளிப் படையாக சூளுரைத்து நிற்கக் கூடிய இடம் கோயில் கருவறையே! அந்த இடத்திற்குத் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச் சனை செய்யும் உரிமை சட்ட ரீதியாக வர வேண்டும் என்ற கருத்தைச் சொன் னது மட்டுமல்ல; - அதற்காக தம் இறுதி மூச்சு அடங்கும் வரை - அதற்கான களத் திலேயே நின்று மரணத்தைத் தழுவிய தலைவரைப் பார்த்து பன்னாடைகள் புலம் புவதும், புறம்போக்குகள் சபாஷ் போடு வதும் வெட்கக் கேட்டின் எல்லையே!
- மின்சாரம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, September 21, 2013

பாபர் மசூதியை இடித்தவர்கள் நாடாளத் துடிக்கிறார்கள்

காவிப்படை - பணத் திமிங்கலங்கள் பின்னணியில்; விளம்பர வெளிச்சத்தில் இளைஞர்களே ஏமாறாதீர்!
முற்போக்குச் சக்திகள் ஓரணியாய் நின்று முறியடிப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
பாபர் மசூதியை இடித்த கூட்டம்  - ஹிந்துத் துவாவை நிலை நிறுத்த ஆட்சிக் கட்டிலில் ஏறத் துடிக்கிறது - மதச் சார்பற்ற சக்திகள் - முற்போக்கு எண்ணங் கொண்டோர் ஓரணியாய்த் திரண்டு முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்துத்துவா, ஹிந்து ராஷ்டிரம் என்பதையே மய்யப்படுத்தி இந்தியாவை ஹிந்துஇயா வாக மாற்றத் துடிக்கும் அமைப்பின் அரசியல் பிரிவு - உருவாக்கம் தான் பாரதீய ஜனதா (BJP) என்பது.
பிஜேபியின் மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில்!
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத விசித்திர நிலை பா.ஜ.க.வுக்கு; அது சுதந்திரமாக இயங்கும் அரசியல் கட்சி அல்ல; மாறாக, அதன் மூக்கணாங் கயிறு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கையில்தான் உள்ளது.
பிரதமராக யார் (பிஜேபி மூலம்) வருவது என்பதை மட்டுமல்ல; யாருக்கு எந்தத் துறை (இலாகா) அளிப்பது என்பதைக்கூட ஆர்.எஸ்.எஸ். எஜமானர்கள் தான் நிர்ண யிக்க வேண்டும்; அதனை அப்படியே செயல்படுத்துவது மட்டும்தான் பா.ஜ.க.வின் வேலை!
அதன்படிதான் பி.ஜே.பி. தலைவராக, நிதின்கட்காரி என்ற பார்ப்பன தொழிலதிபரையே இரண்டாம் முறைக்கும் கொண்டுவர அது முயற்சித்து  தோற்று விட்ட நிலையில் தான், திடீரென்று ராஜ்நாத்சிங்கைப் பா.ஜ.க. தலைவர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்தது.
அதுபோலவே மோடி வித்தையும்கூட; வேறு வேறு நபர்கள் அத்வானி போன்றவர்களால் முன்னிறுத்தப்படக் கூடுமோ, அதன் மூலம் நமது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்வாக்கும், அதிகாரமும் சரியக் கூடிய நிலை ஏற்படு மோவென்று கருதியே, திடீரென்று அவசர அவசரமாக தங்கள் கருத்துப்படியே மோடியை பிரதமர் வேட்பாளர் என்று  அறிவித்து விட்டது ஆர்.எஸ்.எஸ்.
போட்டி காங்கிரசுக்கும் - ஆர்.எஸ்.எசுக்குமே!
மத்திய இணையமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எசு.க்கும் தானே ஒழிய, மற்றபடி காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்கூட அல்ல. அதுதான் உண்மை என்று கூறியுள்ளது 100-க்கு 100 சரியான கணிப்பு ஆகும்!
பாபர் மசூதியை இடித்தவர்கள், மீண்டும் நாட்டில் மதவெறியைப் பரப்பி, சிறுபான்மையிரை மிரட்டி, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை - சமூக நீதியைப் பறித்து, மீண்டும் இராமர் கோவில் கட்டுவது தொடங்கி நாட்டை இந்து நாடாகவே ஆக்கி, ஜனநாயகத்திற்கு மெல்ல விடை கொடுத்து பாசிசத்தினை அரியணை ஏற்றி, மனுதர்மத்தையே இன்றைய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மூலதாரச் சட்டமாக்கும் முயற்சியின் முன் னோடிச் செயல்களில் முதன்மையானதே மோடியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளதன் ரகசியம்.
பிஜேபியின் பின்புலத்தில் பெரு முதலாளிகள்
அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவரும், சமூகநீதியில் உறுதியான நிலைப்பாடு கொண்டவருமான சரத்யாதவ் அவர்கள் மோடி பற்றி மற்றொரு முக்கிய பின்னணியையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்!
பன்னாட்டு பெரு நிறுவனங்களின் (Multinationals) நெருக்குதல் காரணமாகவே மோடி முன்னிறுத்தப் பட்டுள்ளார் என்று விளக்கியுள்ளார்.
அம்பானிகள், டாட்டா போன்ற இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் மற்றும் வெளியே தெரியக் கூடாத பன்னாட்டு திமிங்கலங்கள் திணித்துள்ளதன் விளைவே மோடி முன்னிறுத்தப்படுவது.
பணம் ஆறாக ஓடும் பிரச்சாரத்தில்; அது திருச்சியிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது.
தினம் தினம் ஒவ்வொன்றாக அள்ளி விட்டு, பெருங் கூட்டத்தைக் காட்டி, தமிழ்நாடே ஏதோ காவிமயமாக் கப்பட்டு விட்டது போல், பார்ப்பன பனியா - ஊடகங் களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறதே!
ஹிந்து ராஷ்டிரம் - எச்சரிக்கை!
பன்மதங்கள், பன்மொழிகள், பல கலாச்சாரங்கள் - பண்பாடுகள் நிலவும் நாட்டில் ஒரு மதம் - ஹிந்து மதம் ஒரு மொழி - சமஸ்கிருதம் ஒரு கலாச்சாரம் - பார்ப்பனீய  ஆரிய சனாதன மத கலாச்சாரம்,
ஒரு சட்டம் - மனுதர்மம்
(குஜராத்தில் பள்ளிப் பாட புத்தகங்களில் இவை பாடமாக வைத்துச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன)
18 வயதுள்ள வாக்காளர்களான இளைஞர்கள்  - வெறும் இந்த விளம்பர வெளிச்சம் இணையதள மத் தாப்புகள் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்குப் போட்டே காவிக் கூட்டம் இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் நிலை!
விவரமற்றவர்களா மக்கள்?
மக்கள் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் அல்லர்; அப்பாவி இளைஞர்களுக்கு ஹிந்துத்துவா ஆபத்தை விளக்குவதோடு, குஜராத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற மாயத் திரையையும் கிழித்து, ஏழை - எளிய விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, பெரு முதலாளிகள் வசம் ஒப்படைத்து, அவர்களை தெருப் பிச்சைக்காரர் களாக மாற்றுவதா வளர்ச்சி? என்று  கேட்கும், மைனா ரிட்டி சமூகத்தை அடியோடு வாழ்வுரிமையற்றவர்களாக்கி, ஒரு வகை கொத்தடிமைகளாக்கிட முயலுவது தானா வளர்ச்சி? (Growth) அப்படியும் அங்கு - மோடி ஆளும் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆந்திராவை விட, கர்நாடகத்தைவிட, மற்ற பல மாநிலங்களைவிட மிக அதிகம் என்பதை ஏடுகளில் வந்த புள்ளி விவரங்கள் மூலம் விளக்குவது அவசர அவசியமாகும்!
தேன் தடவிய விஷ உருண்டை இது என்பதை இடையறாத பிரச்சாரத்தின் மூலம் இணைய தளங்களில் தொடங்கி, எல்லா ஊர்களிலும் பிரச்சாரமான பாசீசப் படையெடுப்பிலிருந்து, இந்திய நாட்டின் மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகத்தை காப்பாற்றிட கட்சிகளை மறந்து முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓர் அணியில் திரள வேண்டும்.
மாட்டுச் சாணிக்குப் பயந்து மனிதச் சாணியா?
தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால், மாட்டுச் சாணிக்குப் பயந்து மனுஷ சாணியில் காலை வைத்து விடக் கூடாது! எச்சரிக்கை!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை  
20.9.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...