- மின்சாரம்
பிரபல சமூக வரலாற்றாளர் ஆர்.எஸ். சர்மா அவர்களால் எழுதப் பட்ட பழங்கால இந்தியாவில் அரசியல், கொள்கைகள், நிலையங்கள் -_ சில தோற்றங்கள் என்ற நூலில் அரசன் முக்கியமாகத் தோற்றுவிக்கப்பட்டதே வருணக் கலப்பைத் தடுப்பதற்கே என்று குறிப்பிடுகிறார்.
பிரபல சமூக வரலாற்றாளர் ஆர்.எஸ். சர்மா அவர்களால் எழுதப் பட்ட பழங்கால இந்தியாவில் அரசியல், கொள்கைகள், நிலையங்கள் -_ சில தோற்றங்கள் என்ற நூலில் அரசன் முக்கியமாகத் தோற்றுவிக்கப்பட்டதே வருணக் கலப்பைத் தடுப்பதற்கே என்று குறிப்பிடுகிறார்.
ராஜ்யம் தோன்றுவதற்கு சமூகப் பிரிவினை
வர்ணங்கள் காரணமாக இருந் ததைப் புராணங்கள் முக்கியமாகக் கூறுகின்றன.
வாழ்வதற்கு வேண்டிய பொருள்கள் கிடைத்து விட்ட பிறகு, மக்கள் நான்கு வகை
வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டார்கள். இறைவனை வழிபடுவதற்குப் பிராமணர்களும்,
போரிடுவதற்கு க்ஷத்திரியர்களும், உற்பத்தி செய்ய வைசியர்களும், கூலி
வேலைக்குச் சூத்திரர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரிவினை இறைவனை
வழிபட்டவர் களுக்கும் போரிட்டவர்களுக்கும் ஆதர வாக ஒரு தலைப்பட்சமாக
இருந்ததால் வைசியர்களும், சூத்திரர்களும் இதை மனமு வந்து ஏற்கவில்லை.
வர்ணங்களுடைய கடமைகள் முடிவு செய்யப்பட்ட போதி லும், அவர்கள் தங்கள்
கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர் என்று வாயு
புராணம் கூறுகிறது. இதை உணர்ந்து பிரம்மா குற்றவாளிகளை விசாரித்துத்
தண்டிப்பதையும் போர்களில் ஈடுபடு வதையும் க்ஷத்திரியர்களின் தொழிலாக
ஆக்கினார். இந்த நூலில் பிறிதொரு இடத்திலும் இதைப் போன்ற விவரம்
தரப்பட்டுள்ளது. வர்ணாசிரமம் என்ற அமைப்பைப் பிரம்மா படைத்தார் என்றும்
மக்கள் அதை ஏற்றுத் தம் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஒருவரோடு ஒருவர்
(அதாவது ஒரு வர்ணத்தாரோடு மற்றொரு வர்ணத்தார்) சண்டை போட்டுக் கொண்டனர்
என்றும் அது கூறுகிறது. அதனால் அவர்கள் மனுவிடம் முறையிட்டனர். பிரியவிராட,
உத்தானபாத என்ற இரு அரசர்களை அவன் முதலில் நியமித்தான். இதிலி ருந்து தண்ட
அதிகாரம் அரசர்களைச் சேர்ந்ததாயிற்று. எனவே பல வர்ணங் களுக்கும் இடையே
நடந்த சச்சரவு களைத் தீர்க்கவே ராஜ்யம் ஏற்பட்டதாகப் புராணங்கள்
கருதுகின்றன. வர்க்கப் போராட்டங்களைத் தடுக்க ராஜ்யம் தேவைப்பட்டது என்று
இந்நாளில் மார்க்சிஸ்டுகள் சொல்லுவதற்கு இது முன்னோடியாக அமைந்தது எனலாம்.
(நூல் பக்கம்: 66-_67).
அதே நூலில் பக்கம் 90இல் இவ்வாறு
கூறப்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்காக, விஷ்ணு தன் மனத்திலிருந்து
ஒரு மகனைத் தோற்றுவித்து உண்டாக்கினான் என்றும் ஆனால், அவன் பின்னோர்கள்
உலகப் பற்று நீங்கினர் என்றும் அதனால் வேணனின் கொடுங்கோலாட்சி ஏற்
பட்டதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அரசனின் உயிருக்கு முனிவர்கள்
முற்றுப் புள்ளி வைத்தனர் என்றும் அவ னுடைய வலது தொடையிலிருந்து பிருதுவை
உண்டாக்கினர் என்றும் கூறப்படுகிறது. பிருது, விஷ்ணுவின் எட்டாவது சந்ததி.
என்ற அடிப்படையில் பிருது, வைன்ய என்பவன் சிம்மாசனத் தில் வீற்றிருக்கலாம்
என்பதை முனி வர்கள் தெளிவாக எழுதி வைத்தார்கள். (1) தண்ட நீதிக்
கொள்கையின்படி அரசாள்வேன் (2) பிராமணர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்க
மாட்டேன் (3) சாதிக்கலப்பு ஏற்படாதபடி உலகைக் காப்பாற்றுவேன் -_ என்று
மூன்று உறுதிமொழிகளைச் சத்தியம் செய்து கொடுக்கும்படி முனிவர்கள் அவனை
வேண்டினார்கள். மனிதர்களுக்குள் காளைகள் போன்று விளங்குவதால் பிராமணர்களைப்
பெரிதும் மதித்து அவர்களை வணங்கி வழிபடுவதாக, பிருது, முனிவர்களிடம்
கடவுள் சாட்சி யாகச் சத்தியம் செய்தான். அரசாங்க இயலுக்கு ஏற்பவும்
நியாயமாகவும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வதாக அவன் ஏற்கெனவே
உறுதிமொழி கொடுத்திருந்தான்.
(மகாபாரதம் சாந்தி பருவம் 59ஆம் அதிகாரம் 94_99).
பாரதம் காட்டும் நெ(வ)றி
பாரதம் காட்டும் நெ(வ)றி
வில் வித்தையில் கர்ணனுக்கு ஆர்வம்
ஏற்பட்டது. ஆனால் அவனோ சத்திரியன். அதனால் அவனுக்கு வித்தை கற்றுக் கொடுக்க
யாரும் முன்வரவில்லை. ஞானவேட்கையை முன்னிட்டு பொய் கூறுவதில் குற்றமில்லை
என்று நினைத் துத் தன்னை பிராமணன் என்று பொய் கூறி பார்க்கவரிடம் (வில்
வித்தை நிபுணர்) மாணாக்கனாகச் சேர்ந்து வில் வித்தையில் நிபுணத்துவம்
பெற்று, தலைமாணாக்கனாகத் திகழ்ந்தான்.
ஒரு நாள் நண்பகலில் பார்க்கவர், தம் சீடன்
கர்ணன் மடியின்மீது கண்ணயர்ந்து தூங்கினார். அப்பொழுது வண்டு ஒன்று கர்ணன்
தொடையில் துளைத்து ரத்தம் பெருக்கெடுக்கச் செய்தது. குருவுக்கு நித்திரைப்
பங்கம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு வலியைப் பொறுத்துக் கொண்டான். கண்
விழித்த குரு தன் முகத்தில் ரத்தம் பரவியதற்கு காரணம் என்ன என்று கேட்டார்.
நடந்தவற்றைக் கர்ணன் கூறினான். நீ ஏன் ஓலமிட்டுக் குதித்து எழவில்லை?
என்று குரு கேட்டார்.
உங்கள் உறக்கத்திற்கு இடையூறு வராதிருக்கும் பொருட்டு, என்று பதில் சொன்னான்.
அப்பொழுது பார்க்கவர் சொன்னார் _ உடலில்
உண்டு பண்ணுகிற வதை யைச் சகிக்கும் தன்மை க்ஷத்திரியர் களுக்கே உண்டு. அடே
சிறுவா, நீ ஒரு க்ஷத்திரியன் அல்லவா? என்று கேட்டார்.
கர்ணன் குருவின் காலில் விழுந்து தேம்பித் தேம்பியழுது உண்மை நிலைகளைச் சொன்னான்.
பார்க்கவர் கோபாவேசமும் பதை பதைப்புமாக
வடிவெடுத்தவர் ஆனார். அவருக்கோ பண்பிலும் மிக்கது பிறப்பு. பிராமண
குலத்தில் பிறந்த தம் கலையை நல்குவது என்னும் கொள் கையில் அவர் முற்றிலும்
ஊறியிருந்தார். ஆதலால் குற்றமில்லா அவ்விளைஞனிடத்தில் வைத்திருந்த அன்பு
ஒரு நொடிப் பொழுதில் மாயமாய் மறைந்து போயிற்று.
உன்னை நீ ஒரு பிராமணன் என்று பாசாங்கு
பண்ணிக் கொண்டு என்னி டத்தில் அஸ்திர சாஸ்திர வித்தைகள் அனைத்தையும்
கற்றுக் கொண்டாய். இந்த வித்தைகளைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடி
வாய்க்கும் பொழுது, இவையாவும் உன்னுடைய ஞாபகத் தினின்று மறைந்து
பட்டுப்போம் என்று சாபமிட்டார்
(ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றி மஹாபாரதம் என்ற நூலிலிருந்து _ பக்கம் _ 47_49)
நேருவின் சீற்றம்
நேருவின் சீற்றம்
இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் ஒரிசாவுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது ஏகலைவனைப் பற்றி ஒரு சிறு நாடகம்
நடத்தப்பட்டதைக் கண்டேன். இது மகாபாரதத்திலுள்ள ஒரு கதை; ஒரு ஏழைக்
குடியானவன் க்ஷத்திரியர்களின் வில் வித்தை ஆசானான துரோணரை அணுகினான்;
வில்லம்புகளை உபயோ கிக்கும் முறைகளைக் கற்றுக் கொள்வ தற்காக. ஆனால் அந்த
துரோணரோ வில் வித்தைகளைக் கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டார்; அந்த ஏகலைவன்
க்ஷத்திரியன் அல்ல என்ற காரணத்தால். இருந்தும் அந்தக் குடியானப் பையன்
துரோணரைப் போல ஒரு சிலை செய்து வைத்துக் கொண்டு தானே வில் வித்தைகளைப்
பயின்றான். தன் சொந்த சீடனான அர்ஜுனனைவிட இந்த ஏகலை வன் வில் வித்தையில்
சிறந்தோனாகி விட் டான் என்று அந்த துரோணர் கேள்விப் பட்டதும், அவர் அவனிடம்
சென்று, அவன் அந்த வித்தைகளைத் தன்னு டைய (துரோணருடைய) உருவத்திட மிருந்து
கற்றுக் கொண்டதால் தனக்கு குரு தட்சணை தந்தாக வேண்டுமென்று கேட்டார்.
அவர் கேட்ட குருதட்சணை அந்த ஏகலைவனின்
வலது கைக் கட்டை விரலாகும். அந்தச் சிறுவனும் தயங்காது தனது இடது கையால்
தனது வலது கை கட்டை விரலைத் துண்டித்து அதை துரோண ருக்குக் கொடுத்தான்;
இந்த ஏகலைவன் கதை மகாபாரதத்தில் மிகவும் காரமான - கடினமான வரலாறாகும்.
நான் இச்சம்பவத்தைப்பற்றி அவ்வள வாக கவனம் செலுத்தவில்லை; ஆயினும் அந்த நாள் முதல் அது என் மனதை உறுத்திற்று கவலை கொள்ளச் செய்தது.
இந்த கதையைப்பற்றி என்னிடம் ஒரு விஷயம்
கூறப்பட்டது. அதாவது அந்த ஒரிசாவிலுள்ள மலைவாசிகள் (பழங் குடிகள்) தங்களைப்
பிறர் எவ்விதம் அடக்கி ஒடுக்கி சுரண்டி வந்துள்ளனர் என்பதற்கு இந்தக்
கதையே ஒரு உதார ணமாகிறது என்று சுட்டிக் காட்டுகின் றனராம்.
இத்தகைய எழுச்சிகளின் நோக்கத்தை நாம்
உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மை என்னவென்றால் முன் காலத்தில் எழுதப்பட்ட
நாட்டு வரலாறு ஒரு பட்சமாகவுள்ளது. இக்கால மக்களும் அப்படியே தங்கள் சொந்த
முறையில் நிகழ்ச்சிகளை எழுத முற்பட்டுள்ளனர்; இது மற்றவர்களால்
சிருட்டிக்கப்பட்டது என்று நாம் நினைக்கக் கூடாது.
இந்தக் கதையை நான் எண்ணும் போது மற்றவர்கள் தங்களுடைய போட்டியிடுபவர்களைத் தடுக்க முற்படும் அந்த மனிதர்கள்மீது என் கோபம் கொந்தளித்து எழுகிறது.
இந்தக் கதையை நான் எண்ணும் போது மற்றவர்கள் தங்களுடைய போட்டியிடுபவர்களைத் தடுக்க முற்படும் அந்த மனிதர்கள்மீது என் கோபம் கொந்தளித்து எழுகிறது.
எனவே நாம் இந்தப் பிரச்சினையில் அதிக ஜாக்கிரதையாகக் கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.
(டெல்லியில் இந்தி மொழி கவிஞரும், மத்திய
சட்டப் பேரவை உறுப்பினருமான ஆர்.எஸ். தினகர் தமிழ்நாட்டில் தாம் மேற்கொண்ட
சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு வடவர் எதிர்ப்பு
உணர்வை சுட்டிக்காட்டிப் பேசினார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நேரு
இவ்வாறு பேசினார் -_ ஆதாரம்: விடுதலை 16.12.1954).
இவ்வளவு எடுத்துக்காட்டுகளையும் எடுத்துக் கூறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
இராமாயணம், பாரதம் ஆகிய இதிகாசங்களும்
புராணங்களும், இந்து மத சாத்திரங்களும் வருண தர்மத்தை இறுக்கிக்
காப்பாற்றுவதில்தான் தம் இருப்பைக் கொண்டு இருக்கின்றன.
இந்த இதிகாசங்களில் இலக்கிய வளங்கள் இருக்கலாம்; தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருப்பது போல என்று தந்தை பெரியார் கூறுவார்.
இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு,
இலக்கிய ரசனை, உபகதைகள் பாத்திரப் படைப்புகள் என்று மெச்சி தமிழின
எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுத ஆரம்பிப்பது சரியானது தானா? நல்லது
தானா? நாட்டு மக்களுக்குச் செய்யும் தொண்டு இதுதானா? என்று நாம் கேட்கத்
தவறினால் அது சமுதாயத்துக்கு இழைக்கப்படும் துரோகமே! நல்ல உணர்வாளர்
முற்போக்குச் சிந்தனை யாளர் என்றெல்லாம் நாம் எண்ணி மதித்த பிரபஞ்சன்
போன்றவர்களின் பேனா இந்தத் திசையில் பயணிப்பது வருத்தத்திற்குரியது.
திராவிட இயக்க முத்திரையோடு செயல்படும் ஒரு தொலைக்காட்சி, இராமாயணம், மகாபாரதங்களைப் புதுப் பொலிவோடு ஒளிபரப்புவதன் பொருள் என்ன? வெறும் பொருள் தானா? ஒரு நூற்றாண்டுக் காலம் இம் மக்களின் தன்மானத்திற்காகவும் இன மானத்துக்காகவும், சுய மரியாதைக்காகவும், பகுத்தறிவுச் சிந்தனைக்காகவும் அயராது பாடுபட்ட இயக்கங்கள், தலைவர்கள், தொண்டர்கள் உண்டு.
திராவிட இயக்க முத்திரையோடு செயல்படும் ஒரு தொலைக்காட்சி, இராமாயணம், மகாபாரதங்களைப் புதுப் பொலிவோடு ஒளிபரப்புவதன் பொருள் என்ன? வெறும் பொருள் தானா? ஒரு நூற்றாண்டுக் காலம் இம் மக்களின் தன்மானத்திற்காகவும் இன மானத்துக்காகவும், சுய மரியாதைக்காகவும், பகுத்தறிவுச் சிந்தனைக்காகவும் அயராது பாடுபட்ட இயக்கங்கள், தலைவர்கள், தொண்டர்கள் உண்டு.
அந்தத் தியாகத்தால் செழித்தவற்றின் வேர்களில் எல்லாம் அனல் பாய்ச்சிட நம் தமிழர்கள் பந்தயக் குதிரைகளாக பாயலாமா?
மகாபாரதம் போன்ற ஒரு படைப்பு உலகத்தில்
எந்த மொழியில் சாத்தியமாகி இருக்கிறது? வித்தியாசமாக, ஒன்று போல ஒன்றில்லாத
எத்தனை பாத்திரங்கள் மகா பாரத மனிதர்கள் எண்ணத்தை தொடர்ந்து நிரப்பிக்
கொண்டிருக்கிறார்கள்.
(-பிரபஞ்சன் (கல்கி 4.8.2013)
(-பிரபஞ்சன் (கல்கி 4.8.2013)
உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத
பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் வருண தர்மத்தைக் கட்டிக்
காப்பதுதான் உலகத்தில் எங்கும் இல்லாத சிறப்பான (?) காவியம் என்பதற்கான
தகுதிப்பாடா? குற்றம் சுமத்துவது என்பதைவிட வருத்தத்தைத் தெரிவிப்பதுதான்
நமது நோக்கம்!
நமது திறமையும் செயலும் சமுதாய
வளர்ச்சிக்கும் விழிப்புக்கும் பயன்பட வேண்டுமா? அல்லது நம் பங்குக்கு
நாமும் சேர்ந்து மிதிக்க வேண்டுமா? பண்டிதர்களால் பார்ப்பனீயம் செழித்தது
போதாதா? புது தலைமுறை எழுத் தாளர்களும் துரோக உரங்களைப் போட வேண்டுமா?
ஒரே ஒரு நிமிடம் தந்தை பெரியாரை நினைக்கக் கூடாதா?
பர்தாவா? டிரவுசரா?
ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.
ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.
அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது.
10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக
பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார்.
12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான
அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று
பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே
மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240
தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே
குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம்
செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ்
பார்க்கவில்லை.
- இந்தியா டுடே 7.8.2013
பாரதம் காட்டும் பண்பாடு?
பாண்டவர்கள் கிருஷ்ணனின் துணையோடு
உறவினர்களுடன் போரிட்டது பலன் கருதாப் பணியா? அவர்களைக் கொன்று வென்று
நாட்டை ஆள வேண்டுமென விரும்பியது பலனை எதிர்பார்த்த பணிதானே!
துரோணரின் மகன் அசுவத் தாமன்
இறந்துவிட்டானென்று தருமரை ஏவிப் பொய் சொல்ல வைத்தது ஏன்? கௌரவர் களுக்குப்
போரில் பெருந் துணையாக இருக்கும் துரோணாச்சாரியரைக் கொல்ல வேண்டுமென்ற
சூழ்ச்சியால் தானே! தருமரைப் பொய் சொல்ல வைத்தது, பலன் கருதாப் பணியா?
கிருஷ்ணன், போரில் ஜயத்ர தனை நோக்கி;
சூரியன் மறைந்து விடடது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும்? பலன் கருதாப் பணியை
வலியுறுத்தும் கிருஷ்ணன், இதனைப் பலன் கருதாமலா சொன்னார்?
மெய்காப்பாளர்கள் துணை யின்றித் தனிமையில் இருந்த ஜயரதனை அம்பெய்திக் கொன்றது பலன் கருதாப் பணியா?
பெண்ணாகப் பிறந்தவனிடம் போர் செய்ய
விரும்பாத பீஷ் மரை அவருக்கு எதிரே இருந்த சிகண்டிக்குப் பின் நின்று
கொண்டு அர்ச்சுனன் பீஷ்மரைக் கொன்றது பலன் கருதாப் பணியா?
- நூல்: பா. வீரமணியின் கீதையின் மறுபக்கம் ஆழழும் அகலமும்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment