Thursday, July 11, 2013

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பார்ப்பனக் கலாச்சாரம்தான் கட்டிக் காக்கப்படும் - எச்சரிக்கை!


இந்தியாவில் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேச அரசின் சார்பில் இலங்கையில் சீதைக்குக் கோயில் கட்டப்பட உள்ளதாம். 50 இடங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இறுதியாக நுவரிலியா அருகே திவுரும்போலோ என்ற இடம் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதாம். இதற்காக இரண்டு கோடி ரூபாயை  மத்திய பிரதேச பிஜேபி அரசு செலவழிக்கவுள்ளது.
இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இதற்கு ஒப்புதலும் தந்துள்ளது.
இதில் சில முக்கிய நியாயமான கேள்விகள் எழுகின்றன.
1) ஒரு மதச் சார்பற்ற அரசு ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையவருக்கு அரசு பணத்தில் கோயில் கட்டலாமா? இது மதச் சார்பற்ற தன்மைக்கு உகந்தது தானா? பிஜேபி அரசு இந்து மதம் தொடர்பான கோயிலைத் தவிர, வேறு மதம் சார்ந்த கோயிலை எழுப்பிட முன்வருமா?
2) சீதை என்பது இதிகாச தொடர்புடைய ஒரு பாத்திரம். ஒரு வரலாற்று மகளிர் கிடையாது. இப்படி புராண இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களுக் கெல்லாம் கோயில் கட்டுவது தான் ஓர் அரசின் வேலையா? சீதையில் ஆரம்பித்து ஒவ்வொரு அவதாரத்திற்கும் கோயில் கட்ட ஆரம்பிக்க மாட்டார்கள் என்று உறுதி அளிக்க முடியுமா?
3) பார்க்கப் போனால் இலங்கை என்றால் மாவீரன் இராவணன் நிலம் என்றுதான் சொல்லத் தோன்றும். அப்படிப் பார்க்கப் போனால் முதலில் இலங்கையில் கோயில் எழுப்பப்பட வேண்டியது இராவணனுக்கே! இதை நாம்  சொல்லவில்லை. இலங்கையில் உள்ள ராவண பாலயா என்ற புத்தமத அமைப்பு சீதையின் கோயில் முன்பு இராவணன் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்தியாவில் கூட இராவணனை வழிபடும்  மக்கள் உண்டே!
4) சிங்கள அரசு - சீதைக்குக் கோயில் கட்ட அனுமதிப்பது - சிங்களவர்களும், ஆரியர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்; இனம் இனத்தோடு சேர்கிறது என்றே கருத இடம் இருக்கிறது.
5) சீதைக்குக் கோயில் எழுப்பும் பிரச்சினையில் இலங்கையிலும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை; இலங்கையின் வரலாற்று நிபுணர்கள் இது போன்ற இடங்கள் மிகவும் அரிய வகைக் கண்டுபிடிப்பாகும். இங்கு கட்டடங்கள் கட்டுவதன் மூலம் அதன் வரலாற்றுச் சிறப்பு அழியும் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
6) ராமனானாலும், சீதையானாலும் மூல நூலான வால்மீகி இராமாயணத்தின் அடிப்படையில் பார்த்தால் உயர்ந்த பாத்திரங்களாக - வழிபடுவதற்குரிய தகுதி உடையவர்களாகக் காணப்படவில்லையே!
அதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போது மானதாகும் - இதோ:
தனக்கு எவ்வளவோ மரியாதை செய்து, உபசரித்து, பிரியமாய்ப் பேசிய சீதையிடத்தில்... ஆசை மேலிட்டு, புதன், ரோஹினியைப் பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலைமயிரையும், வலது கையால் தொடை களையும் சேர்த்துப் பிடித்தெடுத்தான் இராவணன் (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு, ஆரண்ய காண்டம், சர்க்கம் 49, பக்கம் 151) மேலும் தொடைகளைத் தூக்கிப் பிடித்து எடுத்து ரதத்தில் வைத்தான் என்று 157ஆம் பக்கத்திலும் மற்றும், சீதையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் ஜடாயுவை அறைந்தான் என்று 165ஆம் பக்கத்திலும் காணப் படுகிறது.
இவ்விதம் இராவணன் சீதையைத் தொட்டு எடுத்தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தொட்டு எடுத்திருப்பானாகில், சீதை இராவணனுக்கு உடன் பட்டவள் என்றே பொருள்படும்.
காரணம், இராவணன், தன்மேல் இஷ்டப்படாத பெண்ணைத் தொடுவானாகில், அவன் தலை சுக்குநூறாகிவிடும் என்பதாக ஒரு சாபமும், உடம்பு தீப்பற்றி எரிந்துவிடும் என்று மற்றொரு சாபமும் இருக்கின்றன. இந்த சாபங்கள் ஒன்றாகிலும் இராவணனைப் பாதிக்காமல் இருக்குமானால், அவள் இஷ்டப்பட்டாள் என்றுதான் பொருள்படும். அதன்படியே இராவணனுக்குத் தலைவெடிக்கவும் இல்லை, உடல் தீப்பற்றி எரியவும் இல்லை. ஆகவே, சீதை இராவண னுடன் செல்வதற்கு உடன்பட்டாள் என்றே பொருள்.
மேலும், சீதை இராவணனுடன் செல்லுகையில், அவனுடைய மடியின்மேல் இவள் உட்கார்ந்திருக்கையில், அவளுடைய முகம், காம்பறந்த தாமரை மலரைப்போல் இருந்தது. அவளுடைய ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு இராவணன் மேல் - புரண்டன (பக்கம் 167) என்று கூறப்படுகிறது.
இலங்கைக்குக் கொண்டு சென்றபின், தன் அந்தப்புரத்தில் வைத்தான். (பக்கம்- 173) என்று கூறப்படுகிறது.
சீதை எத்தகையவள் என்பதற்கு இது ஒன்று போதாதா? இவளுக்குத்தான் கோயிலைக் கட்டப் போகிறதாம் இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச பி.ஜே.பி. அரசு. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பார்ப்பனக் கலாச்சாரம்தான் கட்டிக் காக்கப்படும் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...