கே: கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும், சாகித்ய அகாடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு செம்மொழி அந் தஸ்தை மத்திய அரசு அளித்துள்ளது பற்றி?
ப: எல்லா மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கிட்டி விடும் என்று, தமிழ் மொழிக்கு அந்த அந்தஸ்து தரப்பட்ட போதே நாம் எழுதியிருந்தோம்.
அதுதான் மத்திய அரசின் எண்ணம் என்பது கலைஞர் உட்பட எல்லோருக்கும் அப்போதே தெரிந்துதான் இருந்தது. நியாயமாகப் பார்த்தால், செம்மொழி அந்தஸ்து பெறுகிற எல்லா மொழியினரும் கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு ஒரு குறை; மெட்ராஸ் பாஷை என்ன பாவம் செய்தது? அதற்கும் செம்மொழி அந்தஸ்து தந்தால் என்ன குடியா முழுகி விடும்?
(துக்ளக் 19.6.2013 பக்கம் 11)
(துக்ளக் 19.6.2013 பக்கம் 11)
தமிழைக் கொச்சைப்படுத்துவது என்றால் பார்ப்பனர்களுக்கு பாயசம் சாப்பிடுவது மாதிரி!
தமிழுக்குச் செம்மொழி தகுதி கொடுக்கும்போது மெட்ராஸ் பாஷைக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்று கொடுக்கில் விஷத்தைத் தேக்கி பதில் சொல்கிறார் திருவாளர் சோ. ராமசாமி.
தினமலர் என்ன எழுதியது தெரியுமா?
கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஏழை நெசவாளர் வீட்டுக் கைத்தறி நிற்காமல் இயங்கும் ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாத வர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். (தினமலர் 13.6.2004).
தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக்கூட லாயக்காக மாட் டார்கள் (துக்ளக் 23.6.2013).
இப்படி எல்லாம் தமிழைக் கொச்சைப்படுத்தி எழுதுவதுபற்றி தமிழ்த் தேசியம் பேசுவோர்களின் வாய்கள் திறக்கவே திறக்காது. எழுதுகோல்கள் வேலை நிறுத்தம் செய்துவிடும்.
பிராமணர் என்றால் அறிவாளி என்று புது அகராதிகளைத் தொகுத்து வைத்திருப்பவர்கள் எப்படி பார்ப் பனர்களை விமர்சிப்பார்கள்?
தமிழை செம்மொழியாக்கினால் பிரியாணி பொட்டலம் வருமா என்று கேட்கிறார்களே. ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறி வித்து மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்தபோது கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டினார்களே. அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு குதிரை பிரியாணி வந்ததோ!
தமிழைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எழுதும் இதே சோ. ராமசாமி கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது துக்ளக்கில் (18.11.1998) என்ன எழுதினார் தெரியுமா?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை, ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த் தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர் களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதி களை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக் காது. அதாவது இங்கே முக்கியத் துவம் மொழிக்கல்ல ஒலிக்கு என்று வக்கணையாக எழுதினாரே!
எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு அதில் இந்த மொழிதான் கடவுளுக் குப் புரியும். ப்ரீதம் என்று சொல்லும் அரட்டைக் கச்சேரியைக் கவனிக்கத் தவறக்கூடாது.
அவர்கள் ஸம்ஸ்கிருதம்பற்றிப் பேசினால் அது மொழி வெறியா காது. நாம் தமிழைப்பற்றிப் பேசினால் மொழி நக்ஸலிசம்! தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழியைப் பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும் தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத் திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தாய்மொழியெனக் கருது வதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வடமொழியாகிய சமஸ் கிருதத்தின்மீதுதான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் (2.11.1947) எழுதினாரே - அதுதான் எவ்வளவு பெரிய இமாலய உண்மை.
கூடுதல் தகவல்: (Tail Piece:) அம்மாவை வாடி என்றும், மகளைப் போடி என்றும் தண்ணீரை ஜலம் என்றும் வீட்டுக்குப் போவதை ஆத் துக்குப் போறேன் என்றும் பேசும் அத்திம்பேர் - அம்மாமி - அக்கிர கார பாஷையைவிட மெட்ராஸ் பாஷை கேவலமானதல்ல.
No comments:
Post a Comment