உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?
1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.
மிகவும் கடினமானது எது?
பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?
நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!
மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!
மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.
நட்பின் ஆழமான அடையாளம்
அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.
நல்ல தலைமையின் அடையாளம்!
எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!
இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?
இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!
தொண்டர்களின் சரியான இலக்கணம்
சிந்திப்பதற்குத் தலைமை
செயல்படுவதற்கு நாம் என்பதே!
செயல்படுவதற்கு நாம் என்பதே!
வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?
சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!
வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!
மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!
கல்வியின் சிறப்பு
தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!
பணம் சம்பாதிப்பதன் தேவையா?
ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.
அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!
சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?
நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.
மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?
ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.
இருக்கக் கூடாதது...?
பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.
(தொடரும்)
- கி.வீரமணி
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment