2013 புத்தாண்டு பிறந்தது. கோயில்களில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு என்று செய்திகள் வெளி வந்தன.
சங்கராச்சாரியார்கள், இந்து முன்னணிக்காரர்கள் வறட்டுத் தவளையாய்க் கத்திப் பார்த்தனர். ஆங்கிலப் புத்தாண்டு நம் புத்தாண்டல்ல; அது கிறித்துவர்களுக்கானது.
இந்துக் கோயில்கள் நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவுகளில் திறந்து வைக்கக் கூடாது; அது ஆகம விரோதம் - சாஸ்திர விரோதம் என்று கதறிப் பார்த்தனர்.
வியாபாரம் ஆயிற்றே! இந்துக் கோயில்களை அன்று திறந்து வைத்தால் நன்கு போனியாகுமே, விட்டு விடுவார்களா?
மைலாப்பூர் முண்டகக் கண்ணியம்மனுக்கு, அதி காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜையும் நடைபெற்றதாம்.
பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோயில், பெசண்ட் நகர் அஷ்ட லக்குமி கோயில்களிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் விடியற்காலை 3 மணிக்கும், தியாகராயர் நகர் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை 2 மணிக்கும் - சிறப்புப் பூஜைகள் நடந்தனவாம்.
அய்யோ பாவம் சங்க ராச்சாரியார்கள், அய்யோ பாவம் இந்து முன்னணி ராம கோபாலன்கள் ஆந்தை யாய்க் கத்தி என்ன பயன்? தவளையாய்க் கத்தி கண் டது என்ன?
இந்துக்களுக்கு எண் ணாயிரம் கோயில்கள் இருந்தும் போதாது; வேளாங் கண்ணி மாதா கோயிலானாலும் சரி, நாகூர் தர்காவாக இருந் தாலும் சரி அங்கு சென்று கும்பிடு தண்டம் போடு பவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தானே - மறுக்க முடியுமா? அங்கெல்லாம் சென்று இந்து முன்னணி கள் மறியல் செய்வது தானே!
ஒரு தகவல் தெரியுமா? நாம் கூறுவதல்ல; கல்கி இதழில் (12.9.1982) வெளி வந்துதான் இதோ:
ஸ்ரீ ரங்கம் அரங்கநா தர் திருக்கோயிலில் அர் ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.
அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவ மூர்த்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து கைலி கட்டி அலங்கரிக் கிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.
இவர்களது கடவுளே கைலி கட்டி, முஸ்லிம் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரே... இதனை எதிர்த்துப் போராடுவார்களா? சொல்லுவது கல்கி; விடுதலையல்ல; உண்மை இதழும் அல்ல! அக்கிரகாரத்து இதழ் தான்.
ஒரு வகையில் சொல் லப் போனால் ஸ்ரீரங்க நாதரே முஸ்லீம்களுக்கு உறவாகிவிட்ட பிறகு, இங்குள்ள இந்துத்துவா கூட்டம் இஸ்லாமியர் களை எதிர்ப்பது கடவுள் விரோதம் அல்லவா!
இந்துப் பக்தர்கள் சிந்திப்பார்களாக!
- மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
1 comment:
நியாயமாக ..நாசுக்காக ..எழுதப்பட்ட கேள்விகள் ! தொடருங்கள் ..இதே எழுத்து நடையில் !
Post a Comment