தமிழ் நாடெங்கும் இந்தி எதிர்ப்பு வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்கள் ஒரு பக்கத் தில் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் மதுரையிலி ருந்து வெளி வந்துள்ள ஒரு சேதி திடுக்கிட வைக்கிறது.
மதுரை மாநகரம் வீதி, சாலைகளுக்கான பெயர் கள் தமிழ், இங்கிலீஷ், இந்தியில் பொறிக்கப் படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ள தகவலை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மான மிகு வா. நேரு தெரி வித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் தவிர இந்திக்கு இட மில்லை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே சட்ட ரீதியாகவே ஆக்கப்பட்டு விட்ட ஒன்று.
இப்பொழுது அண்ணா பெயரால்தான் ஆட்சி நடைபெறவதாகச் சொல்லப்படுகிறது; இனக் கலாச்சாரத்தைக் குறிக்கும் திராவிட என்ற முன்னொட்டும் வேறு;
எந்த நோக்கத்துக் காக இப்படி ஒரு முடிவை மாநகராட்சி ஆணையர் எடுத்தார் என்று தெரிய வில்லை. இது வீண் வம்பை விலைக்கு வாங் கும் விபரீதமான வேலை.
ஒரு கால கட்டத்தில் இரயில்வே நிலையங் களில் இந்தியில் ஊர்ப் பெயர்கள் முதலிடத்தைப் பிடித்திருந்தன. தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கிளர்ந் தெழுந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந் திப் பெயர்ப் பலகையை அழித்ததன் காரண மாகவே (திராவிடர் கழகம் பூசிய தாரை மண் ணெண்ணெய் கொண்டு அழித்தவர் ம.பொ.சி. என்பது வேறு பிரச்சினை) தமிழ் முதலிடத்தைப் பிடித்தது.
சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலையில் மைல் கற் களில் இந்தி வந்தபோது திராவிடர் கழகம் சுட்டிக் காட்டி எச்சரித்த நிலை யில் அது உடனடியாக அகற்றப்பட்டது.
தமிழ்நாட்டு மண் ணுக்கென்று (Soil Psychology) தனிக் குணம், மணம் உண்டு. இவற்றை யெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அரசு அதிகாரி எப்படி இப்படி அறிவிக்கலாம்? அரசின் அனுமதியோடு இதை நடத்தப் போகிறதா? மாநகராட்சி மேயரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டாரா? என்று தெரியவில்லை.
இந்த எண்ணம் கருவிலேயே சிதைக்கப் பட்டாக வேண்டும். இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என் பதை திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் முடிவு செய்வார்.
எச்சரிக்கை! எச்ச ரிக்கை!! எச்சரிக்கை!!! -
1 comment:
'விஸ்வரூபம்' என்பது தமிழ்ச்சொல் அல்லவே.தமிழர் தலைவருக்குத் தெரியாதது இல்லை.இதைப்பற்றியும் பகர்ந்து இருக்கலாமே !
இத்துடன்,மறைந்த ஓவியர் ( என்று தன்னைக் கூறிக்கொண்ட) திரு.எம்.எப்.ஹுசைன் அவர்களது ஹிந்துக் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்களைப் பற்றியும் அவற்றுக்கு எழுந்த எதிப்பின் பொது தங்களது தாங்கள் ஏதாவது கூறினீர்களா என்றும் பகர்ந்தால் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும்.
Post a Comment