Tuesday, December 4, 2012

ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்தத் துடிப்பதற்குக் கண்டனம்!


நாடெங்கும் ஜாதி மறுப்பு -  காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடைபெறும்
திராவிடர் கழகம் கூட்டிய ஒத்த கருத்துள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
திராவிடர் கழகம் நடத்திய  ஒத்த கருத்துள்ள கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்தபடம். (3.12.2012)
சென்னை, டிச.3- நாடெங்கும் ஜாதி மறுப்பு  மற்றும் காதல் திருமணங்களை ஊக்குவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி ஒத்தக் கருத் துள்ள அமைப்புகளின் கலந்துரையாடல் கூட் டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழ கத்தின் சார்பில் இன்று காலை கூட்டப்பட்டது. கூட் டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு வருகை தந்தோர்:
பெ.வீ. கலியாணசுந் தரம் (தி.மு.க. அமைப்புச் செயலாளர்), மா. சுப் பிரமணியம் (தி.மு.க. இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்),  பொள்ளாச்சி உமாபதி (தி.மு.க. மாநிலத் தொண் டரணிச் செயலாளர்) பி. சம்பத் (சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர்) எஸ்.எஸ். பாலாஜி (தலைமை நிலைய செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் (பொதுச் செயலாளர் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்), மு. குமரன், மு. மாறன், (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்), சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), இல. திருப்பதி (மாநில இளைஞரணி செயலாளர் திராவிடர் கழகம்) ஆகியோர் பங் கேற்றனர்.
கீழ்க்கண்ட முடிவு களும், செயல் திட்டங் களும் உருவாக்கப்பட் டன.
(1) ஜாதி வெறியர் களால் கடும் பாதிப்புக்கு ஆளான தருமபுரி மாவட்டம், கடலூர் மாவட்டப் பகுதிகளில் முழு நிவாரணப் பணி களில் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அர சைக் கேட்டுக்  கொள் ளப்படுகிறது. எரிக்கப் பட்ட வீடுகளுக்குப் பதி லாக புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.  இழப்பீட் டின் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு முழு அளவிலான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் இதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன  செய்ய வேண்டும்.
2) சி.பி.அய். விசா ரணை நடத்தப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண் டும்.
3) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரி யான முறையில் துல்லி யமாகச் செயல்படுத்தப் பட வேண்டும்.
4) தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லாதார் என்ற பிரி வினையை அடிப் படையாகக் கொண்டு அணி பிரிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரும் பாடுபட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல தோர் சூழ்நிலையின் அமைதியைக் குலைத்து தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட் டோரைப் பிரித்து பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் மோசமான - பிற்போக்குத்தனமான சக்திகளை இக்கூட்டம் கண்டிக்கிறது.
சமூகத்தில் ஒடுக்கப் பட்ட இந்த இரு பிரி வினரின் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத் திலும் மிகவும் முக்கிய மானது. ஜாதியற்ற சமூகத்தை உருவாக்கும் முயற்சிக்குத் தடை யாகவும் அரசியல் நோக் கத்துடனும் ஜாதியைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் சக்திகளை முறியடிப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.
5) மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு - தீண் டாமை ஒழிப்புப் பிரச் சாரத்தை, விழிப் புணர்வுப் பிரச்சாரத்தை ஒத்தக் கருத்துள்ள அமைப்புகள் இணைந்து மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்படுகிறது.
6) நாடெங்கும் ஜாதி மறுப்புத் திருமணங் களை, காதல் திரும ணங்களை ஊக்குவிக் கும் மன்றல் விழாவினை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியா ளர்கள் சந்திப்பு நடந் தது. கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட மேற் கண்ட முடிவுகளை திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி எடுத் துரைத் தார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...