Tuesday, December 4, 2012

திடலா - மக்கள் கடலா?


சென்னை  டிச.3- திடலா மக்கள் கடலா என்று கருதும் வண்ணம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று சென்னை பெரியார் திடல் காணப் பட்டது. கருஞ்சட்டைக் கடலோ என வியக்க வைத்தது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் வெகு சிறப்பாக நடைபெற்றது (2.12.2012).
காலை, முற்பகல் முழுவதும் பல் துறைப் பெரு மக்களும், கழகத் தோழர் களும் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 4.15 மணிக்கு பெரியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கருஞ் சட்டைக் காவியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கவியரங்கம்
தொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் தமி ழென்னும் மணி விளக்கு ஏற்றடா நாட்டில்! என்னும் தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கோயில்களில் எனும் தலைப்பில் கவிஞர் தமிழமுதன், ஊடகங்களில் எனும் தலைப்பில் பேரா. இரா. கருணாநிதி, கல்விக் கூடங்களில் எனும் தலைப்பில் யுகபாரதி ஆகியோர் சிறப்பாகக் கவிதை மாரி பொழிந்தனர். கைதட்டி மக்கள் வெகுவாக இரசித் தனர். கவிஞர் களின் கவிதைப் பாடல்களுக்கு இடை இடையே கவியரங்கத் திற்குச் சுவை கூட்டினார் தலைமை வகித்த ஈரோடு தமிழன்பன்.
பாராட்டரங்கம்
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை தலைமை ஏற்க வரவேற்புரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார். கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அறிமுக உரை நிகழ்த் தினார். கவிஞர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் மருத் துவர் சோம. இளங்கோவன் அவர்கள் சால்வை அணிவித்து நினைவு பரிசினையும் வழங்கினர்.
நூல்கள் வெளியீடு
தமிழர் தலைவர் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார் கலைஞர். தொடர்ந்து நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிறந்த நாள் மலரினைக் கலைஞர் வெளியிட, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் நல். இராமச் சந்திரன் பணம் கொடுத்து கலைஞரிட மிருந்து பெற்றுக் கொண்டார்.
அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 2) எனும் நூலினை டாக்டர் சரோஜா பழனியப்பன் பணம் கொடுத்துக் கலைஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்3) எனும் நூலினை மயிலை நா. கிருஷ்ணன் பணம் கொடுத்து கலைஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா. அருணாசலம்  பெரியாருடன் வீரமணி (தேதி சொல்லும் சேதி) எனும் நூலினை கலைஞர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். வட நாட்டில் பெரியார் (பாகம் 1) எனும் நூலினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்கட்டளையின்) தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களும் பாகம் இரண்டினை கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ. தங்கராசு, வீரமணி வெண்பா அந்தாதி (கவிஞர் இக்குவனம்) எனும் நூலினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் எமரால்டு  கோ. ஒளிவண்ணன் Joy of Living எனும் நூலினை வரியியல் அறிஞர் ச. இராசரத்தினம், Lets Listen to Dr. K. Veeramani    எனும் நூலினை  ஓய்வு பெற்ற நீதிபதி இரா. பரஞ்சோதி ஆகியோர் கலைஞர் அவர்களிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.
இணையதளம்
முதல் நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் இணையதளத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
விருந்தினர்ப் பெரு மக்களுக்கு...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களுக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து நினைவுப் பரிசும் வழங்கினார். தொடர்ந்து தொல். திருமா வளவன் அவர்களுக்கு சு. அறிவுக்கரசு அவர்களும், கவிப் பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், பேராசிரியர் சுப. வீரபாண் டியன் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினர்.
தமிழர் தலைவரைப் பாராட்டி திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகி யோர் உரையாற்றியதற்குப் பிறகு விழா நாயகர் கழகத் தலைவர் கி.வீரமணி ஏற்புரை வழங்கினார்.
கவி பேரரசு வைரமுத்து, தொல். திருமாவளவன் ஆகியோர் கலைஞர் அவர்களுக்கும், தமிழர் தலைவருக்கும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். கழகப் பொதுச் செய லாளர் வீ. அன்புராஜ் நன்றி கூற, விழா நிறை வுரையை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 45 நிமிட நேரம் உரை நிகழ்த்தினார்.
உண்மை சந்தா
இளைஞரணி, மாணவரணி சார்பாக 1680 உண்மை சந்தாக்களுக்கான தொகையாக ரூ.5,88,000 கழகத் தலை வரிடம் அளிக்கப்பட்டது. அளித்தவர்கள் விவரம்:
தஞ்சை இரா. செயக்குமார் (பொதுச் செயலாளர்), இல. திருப்பதி (மாநில இளைஞரணி செயலாளர்), த.சீ. இளந்திரையன் (மாநில மாணவரணி செயலாளர்), தமிழ்ச் சாக்ரடீஸ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ப. வைரம் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு. சென்னியப்பன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), சுரேஷ் (சென்னை மண்டல இளை ஞரணி செயலாளர்), சந்திரசேகரன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்), சுரேஷ் (சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்), மு. இராசா (திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர்), இராம கிருஷ்ணன் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்) சி. மணிவேல் (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்), அறிவுச்செல்வன் (காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர்), சிவக்குமார் (வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்), சாக்ரடீஸ் (மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்), வீரன் (நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர்), மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்).
பெரியார் பிஞ்சு சந்தா
மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக பெரியார் பிஞ்சு இதழுக்கு 313 சந்தாக்கள் கழகத் தலைவரிடம் அளிக்கப்பட்டது.
இனிய நிலா
சிங்கப்பூர் கவிதா - மாறன் ஆகியோரின் செல்வியும் கி.வீரமணி - மோகனா ஆகியோரின் பேத்தியுமான இனிய நிலா தேன் குரலில் பாடிய பாடல் பார்வையாளர் அனைவரின் ஒட்டு மொத்தமான வரவேற்பைப் பெற்றது - பலத்த கரஒலி!
மருத்துவ முகாம்
தமிழர் தலைவர் பிறந்த நாளை யொட்டி பெரியார் திடல் மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. குருதிக் கொடை வழங்கல்  86 யூனிட் மருத்துவ உதவி பெற்ற பயனாளிகள் 155. ஒரே நாளில் இந்தளவு குருதிக் கொடை வழங்கிய மைக்கு சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் குருதிக் கொடைப் பிரிவு இயக்குநர் டாக்டர் கே. செல்வ ராசன் மிகவும் பாராட்டி, நன்றி தெரி வித்து, கடிதம் எழுதியது குறிப்பிடத் தக்கதாகும்.
மக்கள் வெள்ளத்தில் திக்கு முக்காடிய பெரியார் திடல்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாளில் பெரியார் திடல் மக்கள் கடலாகி திக்குமுக்காடச் செய்தது என்று சொல்லும் வண்ணம் அவ்வளவு மக்கள் தொகை. மன்றம், பால்கனி வழிந்து வெளியிலும் தந்தை பெரியார் சிலை வரையிலும் மக்கள் கூடியிருந்தனர். கருஞ்சட்டைக் கடலாகவும் காட்சி அளித்தது.
மார்பகப் புற்று நோய் சோதனை
இந்தப் பரிசோதனையில் இயல்பானது - 26. இயல்புக்கு மேல் 12 பேர் (சிகிச்சை தேவையில்லை)
மிகவும் பாதிப்பு 6 பேர் (சிகிச்சை கட்டாயம் தேவை)
திருச்சி - ஹர்சமித்திரா புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து இந்தச் சோதனைகளை நடத்தியது.
ருசியாவின் கவுன்சல் ஜெனரல்
தென்னிந்தியாவுக்கான ருசியாவின் கவுன்சல் ஜெனரல் நிக்கோலை லிஸ்டபொடோ அவர்கள் பெரியார் திடலுக்கு மாலை  6 மணியளவில் வருகை தந்து தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினார். அவருக்கு நன்றி தெரிவித்து தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
இந்திய யூனியன் முசுலிம் லீக் சார்பில்...
இந்திய யூனியன் முசுலீம் லீக் சார்பில் சென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னூல் ஆபிதீன் கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மகளிரணி பாசறை சார்பில் மருத்துவ நிதி  ரூ.50 ஆயிரம்
சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக மருத்துவ நிதியாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்பட்டது. மாநில மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, திருவொற்றியூர் உமா, சி. வெற்றிச் செல்வி, கு. தங்கமணி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் ஆகியோர் அளித்தனர்.
நன்கொடை அளித்தோர்:
க. பார்வதி (தலைமை செயற்குழு உறுப்பினர்)    ரூ.5000/-
வி. டெய்சி மணியம்மை ( மாநில செயலர், மகளிர் பாசறை    ரூ.5000/-
வழக்கறிஞர் அருள்மொழி (கழக பிரச்சாரச் செயலாளர்)    ரூ.5000/-
ஜ.ஜெயலட்சுமி (தாளாளர், கலி கி.அரங்கநாதன் மான்ட்போர்டு பள்ளி)    ரூ.5000/-
நல்லினி ஒளிவண்ணன் (தலைமை நிருவாகி, எமரால்டு பதிப்பகம்)    ரூ.5000/-
சுகுணா கருணாநிதி (அண்ணாநகர்)    ரூ.5000/-
செ. உமா (சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர்)    ரூ.2000/-
கு. தங்கமணி (மகளிரணி அமைப்பாளர், வடசென்னை)    ரூ.500/-
நாகவல்லி முத்தையன் (தாம்பரம்) ரூ.5000/-
ரூ.37,500/-
மகளிரணி மற்றும் மகளிர் பாசறை  ரூ.12,500/-
மொத்தம்    ரூ.50,000/-


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...