Wednesday, December 19, 2012

பக்தி வந்தால் புத்தி போச்சு!


மனிதனை மறந்த கடவுள் சேவைக் கேலிக் கூத்து!

ஊசி மிளகாய்

பெற்றதாய் கூழுக்கழுகையில், பிள்ளை கும்பகோணம் கோயிலுக்கு கோதானம் கொடுக்குதாம் என்ற ஒரு பழமொழி உண்டு.
பிரபல கர்நாடக மதுபானத் தொழில திபரான விஜய் மல்லய்யா என்ற கன்னட பார்ப்பன முதலாளி, பல்வேறு தொழில் களையும் நடத்தும் பெரும் பணக்காரர்.
இவர் சில ஆண்டுகளுக்குமுன் கிங்பிஷர் (முபேகளைநச) என்ற விமான சேவை ஒன்றைத் தொடங்கி, பிரபலமாக நடத்தி வந்தார்!
பல பெருநகரங்கள், சில வெளிநாட்டு நகரங்கள் உள்பட பலவற்றிற்கும் சென்ற இவரது விமான சேவை - பெரும் நட்டத் தில் இயங்குவதாகக் காட்டப் பட்டது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியதில் எண்ணெய் நிறுவனங் களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது அந்த விமானக் கம்பெனி.
அதுபோல, பல மாதங்களாக  விமான ஓட்டிகளுக்கு சம்பளம் தராமலேயே பாக்கி ஏராளம் வைத்து, அவர்களும் பொறுமை இழந்து வேலை நிறுத்தம் செய்து, பல நாள்கள் விமான சேவையைத் தொடர முடியாமல், பயணிகள் பலரும் பெரும் இன்னலுக்கும் ஆளானார்கள். பல விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுக் கிடந்த நிலை.
சில வங்கிகள், புதிய கடனுதவி தரக்கூடியவர்கள் முன்வந்தும் முற்றாக நிலைமை சரி செய்யப்பட முடியாத நிலை. ஏதோவது மஞ்சள் கடிதாசியை (இன் சால்வென்சியைக்) கூறிவிடுவார்களோ என்று பல தரப்பிலும் பேசப்பட்ட நிலை உண்டு.
இந்நிலையில், ஒரு விமானியின் மனைவி சம்பளம் வராத காரணத்தால், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் - டில்லி அருகே!
இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாத விஜய் மல்லய்யா திருப்பதி ஏழுமலை யானுக்கு நேற்று 3 கிலோ தங்கம் அளித்துள்ளார்!
திருப்பதி கோயில் கருவறைகளின் கதவுகளுக்கு முலாம் பூச இந்தத் தங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இவர் கூறியுள்ளாராம்! இதன் மதிப்பு 90 லட்ச ரூபாய்கள் ஆகும்!
இதுபோலவே, முன்பு கருநாடக மாநிலம் தட்சண கன்னட மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணிய கோயிலுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத் தகடுகள் பொருந்திய கதவுகளைக் காணிக்கை யாக தந்தார்!
(அப்போது இவரது விமானக் கம்பெனி விமானிகள் வேலை நிறுத்தம், எரிபொருள் நிரப்ப முடியாத அளவுக்குக் கடன் சுமை காரணமாக அக்கம் பெனிகளின் மறுப்பு முதலியவை உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டம்).
பக்தியின் லட்சணம் பார்த்தீர்களா? கடவுளை மற; மனிதனை நினை என்ற தந்தை பெரியார்தம் மனிதநேய அறிவுரையின் முக்கியத்துவம் புரிகிறதா, தோழர்களே!
தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காது பட்டை நாமம் - வெங்க டாஜலபதி நெற்றிபோல! ஆனால், கடவுளின் கதவுக்குத் தங்கக் கட்டிகள் மட்டும் நன்கொடை!
என்னே பக்தி மூட நம்பிக்கை!
பெரிய மனிதர்களுக்குக்கூட பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்று போதாதோ!
-----------------------------------------------------------------------------------------

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...