இந்தத் தேதியைப் பார்ப் பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. கொஞ்சம் ரசிக்கத் தோன்றுகிறது.
இதைத் தவிர இதற்குள் வேறு என்ன அதிசயம், முக் கியத்துவம் இருக்க முடியும்?
இது ஏதோ அதிர்ஷ்ட நாளாம் - இந்த நாளில் திருமணம் செய்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்; இந்த நாளில் குழந்தை பிறந்தால் விசேஷம் என்று விசேஷமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.
1-1-1, 2-2-2, 3-3-3, 4-4-4 - இப்படியாக ஒவ் வொரு ஆண்டும் ஒரு தேதி வரத்தான் செய்யும்.
அவ்வப்பொழுது இப் படித்தான் அதிர்ஷ்டத் தேவையை இறக்குமதி செய்வார்கள்.
இந்த வித்தியாசமான தேதிகளில் திருமணம் செய்துகொண்டவர்கள் அல்லது இந்த வித்தியாச மான தேதியில் பிறந்தவர் கள் வித்தியாசமாக வாழ் கிறார்கள். அதிர்ஷ்ட தேவதை அப்படியே இவர் களை வாரி அணைத்து முத்தமாரி பொழிந்தாள் - ஓகோ என்று வாழ்கிறார்கள் -அதோ பாரீர் என்று சொல்லுவதற்கு ஏதேனும் எடுத்துக்காட்டுகள் உண்டா?
இந்த வித்தியாசமான தேதிகளில் மாடு கன்று போட்டது இல்லையா? பன்றி குட்டிகள் போட்டது கிடையாதா? செடிகளில் பூ பூத்திருக்கவில்லையா? கொடிகளில் காய்கள் காய்க் கவில்லையா? அவையெல் லாம் எந்த அதிர்ஷ்ட தேவ தையின் அந்தரங்க மாளி கையில் ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டுள்ளன?
துபாயில் 696 திரு மணங்கள், சிங்கப்பூரில் 540 திருமணங்கள் நடக் கின்றனவாம். தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. முட்டாள்தனம் என்ன ஒரு நாட்டுக்கு மட்டும்தான் சொந்தமா?
ஒவ்வொரு தேதியும் கிழிக்கும்போது நேற்று என்ன சாதித்தோம், இன்று என்ன சாதிக்கப் போகி றோம் என்று சிந்தித்தாலும் பலன் உண்டு.
அதை விட்டுவிட்டு இந்தத் தேதியில் கலியா ணம் கட்டிக்கணும், பிள்ளை பெத்துக்கணும் என்று நினைப்பதைவிட முட்டாள் தனமும், பைத்தியக்காரத் தனமும் வேறு ஒன்று இருக்க முடியுமா?
எரியும் வீட்டில் சுருட் டுக்கு நெருப்புத் தேடும் ஆசாமிகள் போல் இது தான் சந்தர்ப்பம் - இந் நாளில் யாகங்கள் நடத்த வேண்டும் என்று புரோகி தர்கள் சங்கம் அறிவித்துள் ளது. கல்யாணமானாலும், கருமாதியானாலும் பார்ப் பனர்களின் கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பிக் கொண்டு தானே இருக்கும்.
திராவிடர் கழகம் வெளியிடும் நாள் காட்டியில் ஒரு வாசகம் உண்டு நல்ல நேரம் - 24 மணி நேரமும் என்பதுதான் அந்த வாசகம். - மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment