Monday, November 19, 2012

சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயின் மறைவுக்கு இரங்கல்


சிவசேனா இயக்கத் தலைவர் பால்தாக்கரே மறைவு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:
மராத்திய மாநிலத்தின் மகத் தான தலைவராகத் திகழ்ந்த 86 வயது நிறைந்த சிவாஜி சேனை என்ற சிவசேனை கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் என்று மரியாதையாக அனைவராலும் அழைக்கப்பட்ட பால்தாக்கரே அவர்கள் நேற்று (17.11.2012) பிற்பகல் 3.30 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தி, மராத்திய மாநில மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் போர்க் குரல் எழுப்பிய ஒரு அத்தியாயத்தின் சோகமான முடிவாகும்.
அவருடைய கொள்கைகளில் மாறுபடும் நம்மைப் போன் றவர்கள்கூட, அவருடைய ஒளிவு மறைவு அற்ற அணுகு முறையை, துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மராத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமைக்கே முன்னுரிமை தந்து பாடுபட்ட கருத்தியலை, முன் வைத்தவர். அதன் விளைவாகவே மராத்திய மாநிலத்தின் தனிப் பெரும் செல்வாக்கு படைத்த தலைவராக இறுதிவரை தலைதாழாது வாழ்ந்து வரலாறு படைத்தவர் அவர்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தவர்கள், சிவசேனைக் கட்சியினர் ஆகியோருக்கு நாம் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

18.11.2012, சென்னை


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...