Friday, October 26, 2012

ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மிகப்பெரிய அளவிலே இப்போராட்டம் தொடரும்!



சென்னை, அக். 22- ஒத்த கருத் துள்ளவர்களை அழைத்து மிகப் பெரிய அளவிலே இப்போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் முழக்கமிட்டார்.
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை மற்றும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வலியுறுத்தி  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையில் 22.10.2012 இன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நண்பர்களே, இன்றைய ஆர்ப் பாட்டம் என்பது, சென்னையில் இங்கு நடைபெற்றாலும், தமிழ்நாட் டின் ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும் நடைபெறக் கூடிய ஆர்ப்பாட்டமாகும்.
பெரியார் நெஞ்சில் தைத்த முள்
திராவிடர் கழகம் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம், தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, போராட்டக் களத்திலே நின்றார்கள். அவர்களுக்கு அரசு மரியாதையோடு சிறப்பு செய்த முதல்வர் கலைஞர் அரசு - பெரியார் நெஞ்சில் ஒரு முள்ளை வைத்துத்தான் புதைக்கவேண்டி இருந்தது என்று  கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகாததன் மூலமாக ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு திட் டத்தை வெற்றிகரமாக ஆக்க இயலாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதே என்று வருந்தினார்கள்.
பிறகு, ஏற்கெனவே அவர்கள் கொண்டு வந்த அந்தத் திட்டத்தின் அடிப்படையிலே, சட்டத்தின் அடிப் படையிலே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அந்த சட்டம் - உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குளறுபடி கள் காரணமாக செயல்படுத்தப்பட முடியாத நிலை! அதையும் தாண்டி ஆறு ஆண்டுகளுக்கு முன்னாலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - கலைஞர் தலைமையிலே அதை சட்டமாக ஆக்கியது.  உயர்ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் உள்பட அவர்களுக் குரிய விகிதாச்சாரத்தோடு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தெளிவாகத் தந்து, சுமார் 207 பேர் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். அந்த முறையிலே பயிற்சி பெற்றவர்தான் இங்கே தோழர் ரெங்கநாதன்  இவர் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்.
எனவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, அவர்களுக்கெல்லாம் பயிற்சி தந்த பிற்பாடுகூட, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று அதை முடக்கி வைத்திருக்கிறார்கள்; தற்காலிகமாக அதற்கு ஒரு இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறார்கள். ஆறு ஆண்டு காலமாயிற்று, உச்சநீதிமன்றத்திலே அது நிலுவையிலே இருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டம்
அதுபோலத்தான், 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழித்து, தமிழ்நாட்டின் தலைசிறந்த பொருளா தாரத் திட்டங்களிலே, வேலை வாய்ப்புத் திட்டங்களிலே ஒன்றான சேது சமுத்திரத் கால்வாய்த் திட்டம் மிகப்பெரிய அளவிலே அது நிறை வேற்றப்பட்டு, அத்திட்டம் முடிவடை யக்கூடிய நிலையிலே, அத்திட்டம் முடிவடைந்தால், அதனுடைய பெருமை அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்து விடுமோ என்பதற்காகத்தான், அரசியல் ரீதியாக இன்றைக்கு நினைத்து, தமிழக ஆட்சியாளர்களே கூட தவறான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு, இந்தத் திட்டமே வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
இந்தியாவினுடைய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே 2000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒரு திட்டம் தந்து, அந்தத் திட்டத்தினை ஒரு மாநில அரசு  நிறுத்து என்று சொல்லக்கூடிய விசித்திரமான வேடிக்கை, கேலிக்கூத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்.
80 விழுக்காட்டிற்கு மேலே முடிந் திருக்கின்ற அந்தத் திட்டத்தை மேலும் தொடரவேண்டும். பச்சோரி கமிட்டி அளித்த அறிக்கையில் அதே வழித்தடத் தில்தான் அந்தத் திட்டத்தைத் தொடர முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயராலே ஏற்கெனவே கொடுத்த தேர்தல் அறிக்கையிலே மணல் திட்டுக்கள் என்று சொல்லி ஆதம்ஸ் பாலத்தைக் குறிப்பிட்ட, அதே கட்சியைச் சார்ந்த, இந்த ஆட்சியைச் சார்ந்த அம்மையார் இப்போது  ராமர் பாலம் என்று கூறுவது, அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆர். விருப்பத்திற்கும் மாறானது மட்டுமல்ல, பெரியாருடைய கருத்து களுக்கும், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும் பாதகமான ஒன்றாகும்.
எனவேதான், தமிழ்நாட்டினுடைய வளத்திலே, முன்னேற்றத்திலே அக்கறை யுள்ள அத்துணைக் கட்சிக்காரர்களும், சில மதவாத கட்சிகளைத் தவிர, யாரும் தமிழக அரசினுடைய நிலைப்பாட்டை ஆதரிக்க வில்லை.
விழிப்புணர்வை உருவாக்குவதுதான்
பெரும்பாலான மக்கள் வேலையில் லாத் திண்டாட்டத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, தென்திசை யிலே மிகப்பெரிய ஒரு திட்டம் முடியும் தறுவாயில், இன்னும் சில நாள்களிலே கப்பல்கள் ஓட முடியும் என்று சொல்லக் கூடிய நிலையில், அந்தத் திட்டத்தை நிறுத்துவோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்வதை எதிர்த்து, மக்கள் குரல் கொடுக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதுதான் இந்த ஆர்ப்பாட் டத்தின் நோக்கமாகும்.
அந்தத் திட்டத்தைத் தடுத்தால் இலங் கைக்கு லாபம்; அந்தத் திட்டத்தைத் தடுத்தால் இலங்கைவாழ் மக்கள், இலங்கை அரசுக்கு லாபம் என்பது போன்ற ஒரு நிலை இருக்கின்றது என்பதை யும் மறந்துவிடக்கூடாது. ஆகவேதான், இந்தப் போராட்டம் ஒவ்வொரு மாவட் டத் தலைநகரங்களிலும் நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையிலே இருக்கிறது.
இரண்டு வழக்குகள்
ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச் சகர் ஆகவேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த வழக்கும்  விரைவுபடுத்தப்பட வேண்டும். இரண்டு, தமிழர்களின் வாழ் வாதாரமாகிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு. அதுபோலவே, வழக்கை எதிர்த்து பலரும் முன்வந்து நிச்சயமாக தமிழக அரசினுடைய நிலைப்பாடு - ஏற்கெனவே அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு முரணான புதிய நிலைப்பாடு - முற்றிலும் மக்கள் விரோத நிலைப்பாடு என்பதை எடுத்துக்காட்ட நாம் கடமைப்பட் டிருக்கிறோம். ஆகவே, மக்கள் கருத்தை திரட்டுவதற்காகத்தான் இந்தப் போராட் டம்.
இந்த ஆர்ப்பாட்டம் என்பது ஒரு முதற்கட்டம். இது பல்வேறு வகையிலே தொடரும். அனைத்து சாதியினரும் பயிற்சி பெற்றவர்கள்; முறையாக, ஆகம விதிகளிலேயே பயிற்சி பெற்றவர்கள். வைஷ்ண சம்பிரதாயங்களிலே வைஷ்ண கோவில்கள், சிவ ஆகமங்களை  படித்துத் தேர்வு பெற்றவர்கள் சிவன் கோவில்கள் என்று அந்த அரசியல் சட்டம் என்ன விதிக்கிறதோ, அந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமில்லாமல் இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள கோவில்களிலே கூட அவர்கள் சென்று பணியாற்றுகிறார் கள். அப்படி இருக்கும்பொழுது, ஏன் தமிழ்நாட்டுக் கோவில்களிலேயே அவர்களுக்கு நியமனம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்தப் கோரிக்கையின் அடிப்படை. மீண்டும் பல்வேறு கட்டங்களிலே ஒத்தக் கருத்துள்ளவர்களை எல்லாம் அழைத்து மிகப்பெரிய அளவிலே இப்போராட்டத்தினைத் தொடருவோம், தொடருவோம் என்று கூறி முடிக்கிறேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரை யாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...