இந்து மதத்தால் ஏற்படும் சீரழிவு : 30 நாட்களில் 37 பண்டிகைகளாம்!
அர்த்தமுள்ள இந்துமதம் என்கிறார்களே - அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகள்? எத்தனை எத்தனை நாட்கள் வீண்? பொருளாதார நாசம்? இதோ ஓர் பட்டியல் - வரும் நவம்பர் மாதத்திற்கு நாட்கள் 30 என்றால் இந்து மதப் பண்டிகைகள் மட்டும் 37 - உருப்படுமா நாடு?
அர்த்தமுள்ள இந்துமதம் என்கிறார்களே - அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகள்? எத்தனை எத்தனை நாட்கள் வீண்? பொருளாதார நாசம்? இதோ ஓர் பட்டியல் - வரும் நவம்பர் மாதத்திற்கு நாட்கள் 30 என்றால் இந்து மதப் பண்டிகைகள் மட்டும் 37 - உருப்படுமா நாடு?
நவம்பர் 2 - கார்வ சவுத்
நவம்பர் 2 - சங்கஷ்டி சதுர்த்தி விரதம்
நவம்பர் 6 - அஹொய் அஷ்டமி
நவம்பர் 10 - ஏகாதசி விரதம்
நவம்பர் 11 - பிரதோஷ விரதம்
நவம்பர் 11 - தந்தேராஸ், தன்வந்திரி ஜெயந்தி
நவம்பர் 12 - ஹனுமன் ஜெயந்தி, காலி சௌடாஷ்
நவம்பர் 13 - தீபாவளி, லஷ்மி பூஜை
நவம்பர் 13 - நாரக் சதுர்தசி
நவம்பர் 13 - அமாவாசை
நவம்பர் 14 - குஜராத்தி புத்தாண்டு (விக்ரம் சம்வத் 2069 தொடக்கம்)
நவம்பர் 14 - குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா
மற்றும் கர்நாடகாவில் கார்த்திகை மாதம் தொடக்கம்
மற்றும் கர்நாடகாவில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 14 - ஸ்கந்த சஷ்டி விரதம் தொடக்கம் (முருகனுக்குரியது)
நவம்பர் 14 - கோவர்த்தன் பூஜை
நவம்பர் 15 - பாய் தோஜ், யாம திவிதியை
நவம்பர் 15 - சித்திரகுப்த பூஜை
நவம்பர் 16 - மலையாளத்தில் விருச்சிக மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - தமிழில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - சபரிமலை கோவில் நடை திறப்பு
நவம்பர் 17 - வங்காளத்தில் அக்ரஹன் மாதத் தொடக்கம்
நவம்பர் 17 - சாத் பூஜை தொடக்கம்
நவம்பர் 19 - சூரசம்ஹாரம் ஸ்கந்த சஷ்டி
நவம்பர் 19 - சாத் பூஜை மாலை
நவம்பர் 20 - சாத் பூஜை காலை
நவம்பர் 21 - கோபஸ்தமி
நவம்பர் 22 - அக்ஷயம் நவமி- குஷ்மண்ட நவமி
நவம்பர் 24 - ப்ரபோதினி ஏகாதசி விரதம்
நவம்பர் 24 - சதுர் மாச விரதம் முடிவு
நவம்பர் 24 - துளசி விவாஹம் தொடக்கம்
நவம்பர் 24 - பந்தர்பூர் கார்த்திகை மேளா
நவம்பர் 25 - பிரதோஷ விரதம்
நவம்பர் 27 - வைகுந்த சதுர்தசி
நவம்பர் 29 - பவுர்ணமி
நவம்பர் 29 - தேவ தீபாவளி
நவம்பர் 29 - திரிபுரரி பவுர்ணமி
நவம்பர் 30 - வட இந்தியாவில் மகஷிரிஷ் மாதம்/ ஆகன் மாதம் தொடக்கம்
இவையெல்லாம் அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் உள்ள இந்துக்களின் முக்கியமான பண்டிகை நாள்களாம். (இதில் மாதத் தொடக் கம் என்பவற்றைக் கூடத் தள்ளிவிட முடியாது! ஏனெனில் அந்த நாள்களையும் பார்ப்பனர்கள் தங்கள் வசூலுக்கான நாள்களாகவே பயன் படுத்துகிறார்கள்.) அதாவது ஒரே ஒரு மாதத்திற்கு இத்தனைப் பண்டிகையாம்... விரதமாம்...இதையெல்லாம் கடைப் பிடிப்பதையே கர்மசிரத்தையாய் ஒருவர் செய்து கொண்டிருந் தால் விளங்குமா அவர் வாழ்க்கை! இது தான் இந்தியப் பண்பாடு என்று சொல்கிறார்களே, அப்படியிருந்தால் விளங்குமா இந்த நாடு!
இந்தப் பட்டியலைப் போட்டுவிட்டு, இது இந்திய நேரத்தின் அடிப்படையில் அமைந்த ஹிந்து பஞ்சாங் கத்தின் படி பட்டியலிடப் பட்டுள்ளது என்று தனிக்குறிப்பு வேறு! இவர்கள் சொல்லும் நல்லநேரம் இந்திய நேரப்படி என்றால் அமெரிக்காவில் எது நல்ல நேரம்?
ஆப்கானிஸ் தானில் எது நல்ல நேரம்? கிரீன்வீச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்புக்கொள்ளப்பட் டுள்ள உலகளாவிய நேரங்களில் எப்படி நல்ல நேரத்தைக் கணக் கிடுவது என்று உங்கள் பஞ்சாங்கத்தில் இல்லையே, ஏன்? நல்ல நேரம், கெட்ட நேரத்தையெல்லாம் உங்கள் பஞ்சாங்கம் இந்தியாவைக் கொண்டு கணக்கிடு கிறதே, அந்த நேரங்களின் தாக்கம் எல்லாம் உஸ்பெகிஸ் தானில் செல்லுபடியாகாதா? அதற்கு அங்கே பவர் இல்லையா?
இந்த லட்சணத்தில் ஹிந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று ஆகாச அளப்புகள் வேறு! மதப் பண்டிகைகளுக்கான விடுமுறை நாள்கள் அனைத்தையும் விருப்ப விடுப்பு நாள்களாக மாற்ற வேண்டும் என்றும், மதப்பண்டிகை விடுமுறையைக் குறைத்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பயனாக இருக்கு என்றும் பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறதே!
மக்கள் பிரச்சினைக்காகப் போராட்டம், கடையடைப்பு, பந்த் என்று அறிவித்தால் நாட்டின் பொருளா தாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆடம் ஸ்மித்களாக மாறி கருத்து சொல்லும் அறிவு ஜீவிகள் எல்லாம் மதம் என்று வந்துவிட்டால் ஆட்டம் போடாமல் அடங்கி விடு வதேன்?
மதம் மனித குல வளர்ச்சிக்குத் தடை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பதற்கு இவையெல்லாமே ஆதாரங்களா யிற்றே!
1 comment:
மூட நம்பிக்கை எந்த மதத்தில் தான் இல்லை ......... உண்மையானவனா இருந்தா "தொட்டால் ஊனம் குணம் ஆகும்னு" தொலை காட்சியில் நிகழ்ச்சியில் சொல்லும் கிருஸ்த்தவனை பற்றி என்ன எழுதி உள்ளாய் !!!!!
Post a Comment