ஊழலை ஒழிக்க ஒரு அரசியல் கட்சியைத் துவங்கியுள்ள ஹசாரே கம்பெனியிலிருந்து வெளியேறிய அர்விந்த கஜ்ஜிரிவால் என்பவர் மீடியாக்களின் வெளிச்சத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் குளித்து மகிழ்ந்து வருகிறார்!
அவரிடம் பலரும் புகார் காண்டத்தில் பங்குபெற - அதிருப்தியாளர்கள், எதிர் பார்த்து ஏமாந்தவர்கள், ஊழல் லஞ்சம் இவரால் ஒழியும் என்று நம்பும் அப்பாவி களான பரம பாமரர்கள், விளம்பரம் தேடிகள் - இப்படிப் பலரும் சென்று தங்களுக்குக் கிடைக்கும், கிடைத்த, அல்லது தயாரிக்கும் பல வகை பதார்த்தங்களும் பரிமாறப்பட்டு சில காலம் அவரது வண்டி ஓடி பிறகு நிற்கும் என்று நினைத்த பல மீடியா மன்னர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்; காரணம் எதிர்பார்த்ததை விட அவரது பலூனின் காற்று மிக வேகமாக ஓட்டைகளால் - இறங்க ஆரம்பித்துவிட்டது!
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய சிங், சில கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
இதற்கு எப்படி, என்ன பதில் சொல்லப் போகிறார் திருவாளர் வால் அவர்கள் என்பது அவரது தளர்பதிகளில் பலருக்குப் புரியவில்லையாம்.
1. உங்கள் தொண்டு நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் நன்கொடையாளர்கள் பற்றியோ, அல்லது கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகள் பற்றியோ உங்கள் தொண்டு நிறுவன இணையதளங்களில் எந்த விவரங்களும் இடம் பெறாதது ஏன்?
2. உங்களுடன் நெருங்கிய தொடர்புடைய கபீர் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு 1,72,000 அமெரிக்க டாலர்களும், 2009ஆம் ஆண்டு 1,97,000 அமெரிக்க டாலர்களும் ஃபோர்டு பவுண்டேஷனிடம் இருந்து நன்கொடை பெற்றது உண்மையா?
3. அவாஸ் என்ற அமெரிக்க தொண்டு நிறுவனத்துடன் உங்களது தொடர்பு என்ன? அந்த நிறுவனம் லிபியா, துனீஷியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற புரட்சிக்கு நிதி உதவி செய்தது தெரியுமா? அந்த நிறுவனத்திடமிருந்து உங்கள் இயக்கம் பெற்ற ஆதரவு என்ன?
4. மத்திய அரசு மீது மட்டும் ஊழல் புகார் கூறும் நீங்கள் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடக்கும் ஊழல் பற்றி பிரச்சினை எழுப்பாதது ஏன்?
5. ஜனலோக்பால் சட்டத்துக்காக நீங்கள் பேசாதிருக்கிறீர்கள். ஆனால் குஜராத்தை ஆளும் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளாக அங்கு லோக் அயுக்தா அமைக்கவிடாமல் தடுத்து வருகிறாரே - அது பற்றி நீங்கள் ஏதும் கேட்காதது ஏன்?
6. நீங்கள் இந்திய வருவாய்த்துறை (IRS) துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறீர்கள். ஒரே இடத்தில் 3 ஆண்டு களுக்கு மேல் பணிபுரிய விதிகள் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளாக நீங்கள் டெல்லியிலேயே தொடர்ந்து பணிபுரிந்தது எப்படி?
மேலும் அந்தப் பணியில் இருந்தபோது மேற்படிப்புக்காக முழு சம்பளத்துடன் விடு முறையில் செல்ல நீங்கள் அனுமதி பெற்றது எப்படி? அந்த விடுமுறைக் காலத்தில், விதிமுறையை மீறி, தொண்டு நிறுவனம் தொடங்கியது எப்படி?
- இப்படி பலப்பல கேள்விகள் கேட்டு இவர் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியில் வேட்பாளராக இவரோ, இவரைச் சார்ந்தவர்களோ, தேர்தல் ஆணையம் விதித் துள்ள சட்ட விதிகளுக்குள் தான் தேர்தல் செலவுகளைச் செய்வர் என்று உறுதியை நேர்மையான முறையில் - மனசாட்சிக்கு துரோகம் இழைக்காமல் இவரால் கூற முடியுமா?
********
ஏமாறதீர்! ஏமாற்றாதீர்!
ரூ.100 கோடியை எண்ணி கடைக் கோடிக்கு வரலாமா?
ஏமாந்து விழித்துக் கொண்டேன் என்கிறார் மதுரை ஆதினம். பலே! பலே!! காலம் கடந்த ஞானேதாயம்!!!
லவுகீக அய்.டெக் ஆன்மீக திருக்கோயில் வாரிசு நித்தியானந்தாவை தனது வாரிசாக நியமிக்கும்படி பார்வதியும் பரமசிவனும் வந்து ஆதீனம் கனவில் சொன்னார்களாம்! இப் போது இவர் அவர்கள் ஆணையை மதிக் காமல் தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை ஆணையை மதித்தாக வேண்டிய கட்டாயத்தினாலோ என்னவோ அல்லது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவோ என்னவோ திடீரென்று நித்தியை - யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது என்று முன்பு கூறியவர் திடீர் முடிவுக்கு வந்து வெளியே அனுப்பி விட்டார்.
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியை நீக்கினேன் என்று கூறியுள்ளார். நித்தியின் வரவால் மடம் சிறுமை அடைந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமா?
ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும் முதல் தவணையாக 5 கோடி ரூபாய் தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப் பொய்.
- இவ்வாறு மதுரை ஆதினம் அருணா கிரிநாதர் கூறினார் (தினத்தந்தி, 21.10.2012 (பக்கம் 5))
ரூ.100 கோடிக்கு ஆசைப்பட்டு இப்படி கடைக்கோடிக்கு வந்து நிற்கலாமா? மூவாசைகளில் பணத்தாசை அடங்காதோ ஆதினங்களுக்குத்தான் வெளிச்சம் என் கிறது ஒரு ஆன்மீகப் புளி (புலியல்ல) ஒன்று!
அய்யய்யோ சொல்ல வெட்கமாகுதே!
No comments:
Post a Comment