Wednesday, August 29, 2012

அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!


விடுதலை  ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து என்னை எழுது என்ற ஆணையைப் பிறப்பித்தவர் அய்யா!

அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!

உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!!
விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை

உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!! விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை
அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியராகப் பணியாற்றி யதற்கு ஒவ்வொரு வகையிலும் காரணமாக இருந்த - அய்யா தொடங்கி தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள் மனித குலத்தின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் அய்யா அவர்கள் தொண்டர்களில் ஒருவனான என்னை- கடந்த 50 ஆண்டு களுக்குமுன்பு, அவர்களே அழைத்து வந்து (சிந்தாதிரிப் பேட்டை, 2, பாலகிருஷ்ணப்பிள்ளைத் தெருவில்) விடு தலைப் பணிமனையில் பணியாற்ற என்னை ஒரு குரு சீட னைப் பீடத்தில் அமர்த்தி எழுத்தாணியைத் தந்து எழுது, துணிவாக எழுது, தெளிவாக எழுது, அச்சமின்றி உண் மையை எழுது என்று அறிவுறுத்துவதுபோல் அறிவுரை தந்து, தனது சிம்மப் பார்வையோடும், அன்பு நதியினில் நனைத்து கட்டிப் போட்ட இதயத்தோடும், பணித்தார்கள்!
அய்யா - அம்மா
அரை நூற்றாண்டு உருண்டோடிவிட்டது! இது எனது வாழ்வில் யான் பெற்ற பெரும்பேறு!! அய்யாவுக்கும், அம்மாவிற்கும் (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்) கடைசிவரை உடனிருந்து பணி செய்து பயன்பட்டு, மனநிறைவு கொள்ளச் செய்த மகத்தான பணிதான் எனது வாழ்வின் விழுமித்த பயன்.
எண்ணற்ற கழகக் குடும்பங்களின் இணையற்ற பாசம் தான் யான் பெற்ற - பெறுகின்ற, பெரும் ஊதியம்!
உலகின் ஒரே நாத்திக ஏடு!
உலகிலேயே பகுத்தறிவு - (நாத்திக) கொள்கையைப் பரப்பும் சமூக அறிவியல் புரட்சிப் பணிக்கென நாள்தோறும் அச்சிடப்பட்டு வெளியாகும் ஒரே ஒரு நாளேடு, விடுதலை நாளேடுதான் என்பதை உலகப் பகுத்தறிவாளர் - மனிதநேயர்கள் அமைப்பின் தலைவரான, நார்வே நாட்டினைச் சார்ந்த லெவிஃபிராகல் (டுநஎல குசயபரட) அவர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவின்போது, உலகுக்கே பிரகடனப்படுத்திப் பெருமைப்பட்டார்கள்!
அரசியல், பொருளாதாரத் துறைகளில் மக்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, வெற்றி பெறுவதுகூட (ஒப்பீட்டு அடிப்படையில்) எளிது; ஆனால், மக்களிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை, கடவுள், மதம், ஜாதி, பெண்ணடிமை போன்ற மனித ஒருமைப்பாட்டிற்கும், சமூக முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகளை எதிர்த்து - எதிர்நீச்சல் போட்டு 78 ஆண்டுகள் ஒரு நாளேடு தாக்குப் பிடித்து நிலைப்பது, நீடிப்பது என்பதே ஒரு தனித்ததோர் சாதனையென்றே சொல்லவேண்டும்.
எப்படி சாத்தியமாயிற்று?
நட்டத்திற்கென நடந்த ஏட்டினை, அய்யா தந்தை பெரியார்தம் சொந்த செல்வமும், சலிப்பறியாத உழைப்பும், எதிர்ப்பினால் கலங்காத நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், பற்றற்ற நிலையும் (அறிவுப் பற்று, கொள்கைப் பற்று, மனிதகுலப் பற்று தவிர வேறு எந்தப் பற்றும் - புகழ்ப்பற்றுகூட இல்லாத தலைவர்) உடைய அவர்களால் தான் தொடர்ந்து நடத்திடச் சாத்தியமாயிற்று.
அந்தப் பணி - அதே எதிர்நீச்சல், அடக்குமுறை - அரசுகளின் ஆதரவின்மை - இவைகளைத் தாண்டி தொடர்கிறது இன்றும்கூட - மூலகாரணம் அய்யாவின் அருந்தொண்டர்களான பற்றற்றான் பற்றினை பற்றி நடக்கும் மாவீரர்களான கருஞ்சட்டை வீரர் - வீராங் கனைகளின் கடும் உழைப்பும், பெரியார் ஆணை ஒன்றே நமக்குப் பெரிது; வேறு எந்த சுயநலச் சிந்தனையோ, ஆசா பாசமோ அல்லவென்றே கருதி, தம் வறுமை நிலையில்கூட கொள்கை வளத்தினை சுவாசிக்கும் தொண்டர் கூட்டத் தின் கட்டுப்பாடு தளரா பேராதரவின் காரணமாகத்தான்.
அவர்களின் பணியாளர்களில் - தோழர்களின் வரிசையில் கடைகோடியில் நின்று கடமையாற்றும் எளியவன் யான். எவ்வளவு மகத்தான ஆதரவு இப்பணி புரியும் எனக்கு!
என்னை ஊக்கப்படுத்தினால்...!
என்னை ஊக்கப்படுத்தினால், அது விடுதலைக் குழுமத்திற்கு உற்சாகத்தைப் பெருக்கும்; கழகக் குடும்பத்தினரை மேலும் உழைக்க, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழ வைக்க வாய்ப்பாகும் என்பதற்கு - 25 ஆம் தேதி ஆகஸ்ட் விடுதலை நாள் விழா - ஓர் எடுத்துக்காட்டே!
நன்றி! நன்றி!!
அனைவருக்கும் நன்றி!!!
அதில் கலந்துகொண்டு மனந்திறந்து பாராட்டி, சீராட்டிய தமிழினக் காவலர் - எம் இனத்தின் இன்றைய இராவணன், ஆட்சியைவிட இனத்தின் மீட்சிக்காக அல் லும் பகலும் அயராது உழைக்கும் ஓய்வறியா உழைப்பின் உருவம் - எம்மூத்த சகோதரர் மானமிகு கலைஞர் அவர்களும், காலையில் வந்து கலந்து, கருத்துமழை பொழிந்த தன்மானப் பெரும் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஜஸ்டீஸ் டாக்டர் எஸ். மோகன், ஜஸ்டீஸ் டாக்டர் ஏ.ஆர். இலட்சுமணன், அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன், ஊடகவியலா ளர்கள் பெருமைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா, லக்னோ பல்கலைக் கழக சமூகவியல் பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
உங்களது நம்பிக்கைகளை பொய்க்கவிடாமல், இறுதி மூச்சு உள்ளவரை - உழைத்து உழைத்து, காப்பாற்றிடு வேன் என்று உறுதி கூறுகிறேன்.
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
எனது உடல்நலப் பாதுகாப்புக்கென அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, என்னை தாயினும் சாலப் பரிந்து காக்கும் புரவலர்களுக்கும், அவர்களின் அன்பு மழைத் துளிகளை, அணைகளாகக் கட்டி ஒழுங்குபடுத்தி அறக்கட்டளை உருவாக்கி, எனது வேண்டுகோளை ஏற்று, பெரியார் நலநிதி அறக்கட்டளையாக்கிட இசைவு தந்து ஏற்பாடு செய்துள்ள அதன் தலைவர், எமது மதியுரைஞர் அய்யா மானமிகு எஸ். இராஜரத்தினம் மற்றும் அவர்தம் அணியினர், அனைவருக்கும் நன்றி.
என்றும் எனது காவலராக - நலம் பாதுகாப்பு அரணாக உள்ள டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும், உலக முழுவதிலும் உள்ள நலம் நாடிடும் நண்பர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
சென்னை 
28.8.2012
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...