- டி.ஆர். அந்தியார்ஜுனா
நீதித்துறையின் தீவிரச் செயல்பாடு என்னும் கோட்பாட்டை விளக்குவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. பலப்பல மனிதர்களுக்கும் அது பலவித மான பொருளை அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு நீதித்துறை எடுக்கும் முடிவு களை ஏற்காத விமர்சகர்கள் அவற்றைக் குறை கூறுகின்றனர். இத்தகைய தீவிரச் செயல்பாடும், அழகினைப் போலவே, காண்பவர்களின் கண்களில் இருப்ப தாகும். வசதியற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களும் நீதி கேட்டு நீதி மன்றங்களுக்குச் செல்லும் ஒரு வாய்ப்பினை இந்தியாவில் ஏற்படுத் திக் கொடுத்தது பொதுநல வழக்கு எனப் படுவது. 1979-லிருந்து உச்சநீதிமன்றத் தின் வழிகாட்டுதலில் நீதித் துறையானது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டி ராத ஒரு முறையில் செயல்படத் தொடங்கி, சமூக நீதியை வழங்குவதில் ஒரு முக்கியப் பங்காற்றத் தொடங்கியது.
வேறு எந்த நாட்டின் நீதித்துறையிலும் இல்லாதது
இத்தகைய பொதுநல வழக்குகளின் மூலம் இது காலம் வரை அசாதாரணமான தன்மையில் பொது மக்களின் நன்மைக் காக மேற்கொள்ளப்பட்டு வந்த நீதித் துறையின் இந்தத் தீவிரச் செயல்பாடு, இன்று அரசு மற்றும் அரசு அமைப்பு களின், அதிகாரிகளின் செயல்களைத் திருத்தும் ஒரு பொதுவான மேற்பார்வைப் பணி என்ற அளவுக்கே பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது என்பது பெரிதும் கவலைப் படவேண்டிய ஒரு விஷயமாகும். வேறு எந்த நாட்டின் நீதித் துறையிலும் இல்லாத ஒரு வகையான நீதித் துறையின் தீவிரச் செயல்பாடு இது.
அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தோன்றியதே இது!
சமூகத்தின் அல்லது சில அமைப்பு களின் குறிப்பிட்ட சில பிரிவினர்க்கு சில அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட சூழ்நிலையை நீதித்துறையின் கவனத் துக்குக் கொண்டு வந்த சமூக ஆர்வலர் களின் புகார்களை 1979 இல் உச்ச நீதிமன்றம் அனுமதித்ததில் இருந்து - அதன் தாக்கம், ஆற்றல் எத்தன்மையதாக இருக்கும் என்பதைப் பற்றி எவரும் சிறி தும் அறிந்திராத நிலையில் - தொடங்கி யது இந்த பொதுநல வழக்கு கோட்பாடு.
பொதுநல வழக்கு நடைமுறையின் தோற்றம்
1979 இல் உச்சநீதிமன்ற வழக்குரை ஞர் கபிலா ஹிங்கோரணி என்பவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஒரு நாளிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்தார். பிகார் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு என்ன சிறைத் தண்டனை கிடைக்குமோ, அந்தத் தண்டனைக் காலத்துக்கும் அதிகமாக சிறைகளில் விசாரணைக் கைதிகளா கவே அடைபட்டு துன்புற்று வருவதை அக் கட்டுரைத் தொடர் வெளிப்படுத்தியி ருந்தது.
பிகார் சிறை அதிகாரிகளால் சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்துவதைப் பற்றியும், கைதிகளின் பரிதாப நிலை பற்றியும் சுனில் பத்ரா என்ற கைதி நீதியரசர் கிருஷ்ணய்யருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இக் கடிதத்தையே மனு வாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சிறை களில் கைதிகள் மனிதநேயத்துடன் நடத் தப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆக்ராவில் உள்ள பெண்களின் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் எத்தகைய விலங்காண்டித்தனமான சூழ்நிலைகளில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருக் கின்றனர் என்பதுபற்றி நாளிதழ் ஒன்றின் ஆசிரியருக்கு இரண்டு சட்டப் பேராசிரி யர்கள் எழுதிய கடிதமே மற்றொரு வழக் குக்கு உச்சநீதிமன்ற ரிட் மனுவிற்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. கட்டு மானப் பணியிடங்களில் தொழிலாளர் சட்டங்களை மீறிய வகையில் தொழி லாளர்கள் ஏமாற்றிப் பயன்படுத்தப்படுவது ஒரு கடிதம் மூலம் உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கல் குவாரிகளில் தொழிலாளர்கள் கொத் தடிமைகள் போல நடத்தப்படும் நிலை ஒரு சமூக ஆர்வலரால் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மும்பை நடைபாதை வாசிகளை இடம் பெயரச் செய்ததை எதிர்த்து ஒரு பத் திரிகையாளர் நீதிமன்றத்திற்குச் சென் றார். இது போன்ற பல வழக்குகள் பொது நல வழக்குகளாகத் தொடர ஆரம்பித் தன.
பொதுநல வழக்குகளின் நோக்கம் என்ன?
இத்தகைய வழக்குகளைக் கையாண்ட நீதிமன்றங்கள், மக்களின் உரிமைகள் மற்றும் அரசுகளின் கடமைகள் பற்றி ஒரு புதிய விளக்கத்தை உருவாக்கி, அரசு தனது குற்றங் குறைகளுக்குப் பொறுப்பேற்று பதில் கூறக் கடமைப் பட்டுள்ளது என்னும் புதிய நடைமுறை களை உருவாக்கியது. பொதுநல வழக்கு எவ்வாறு தோன்றியது என்று அதன் நோக்கத்தைப் பற்றி 1982 இல் நீதியரசர் பி.என்.பகவதி மிகச் சரியாகக் கூறினார். மனித இனத்தின் கீழ் நிலையில் வைத்து பார்க்கப்படும் ஏழை மக்கள் கூட்டத்தின ருக்கும் எட்டும் தொலைவில் நீதித்துறை யைக் கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்ட, சட்ட உதவி இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதிதான் இந்த பொதுநல வழக்குகள். வழக்கமான, சாதாரணமான, பாரம்பரிய வழக்குகள் என்ற நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வகையான வழக்குகள் இவை என்று அவர் வலியுறுத்தினார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தின் வாடிக்கையாளர்களாக, நிலச்சுவான் தார்கள், வியாபாரிகள், தொழில் மற்றும் நிதி நிறுவனங்கள், வசதிவாய்ப்பு மிகுந்த மக்கள் மட்டுமே இருக்கவில்லை. பொது நல வழக்கு என்பதன் மூலம், ஒரு பாமர மனிதரும், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும், சமூக ஆர்வலர்களின் உதவியுடன், நீதி மன்றங்களை எளிதாக நாடத் தொடங் கினர்.
இத்தகைய ஈடு இணையற்ற நீதித் துறையின் தீவிரச் செயல்பாடு என்பது மற்ற நாடுகளில் காணப்படாத ஒன்றாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹேரி வுல்ஃப், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கிர்பி போன்ற புகழ்பெற்ற நீதிபதிகள் இதனைப் பாராட்டினர்.
பொது நலன் என்பது போய் பொது காரணம், பொது நோக்கம் என்பது வந்துவிட்டது
என்றாலும், ஆண்டுகள் செல்லச் செல்ல, பொது நல வழக்கு என்ற கோட் பாட்டில் இருந்த சமூக நலனுக்கான செயல்பாடு என்ற கண்ணோட்டம் நீர்த்துப் போகச் செய்யப் பட்டு மறைந்தே போனது; அந்த பொது நலன் என்ற இடத்தை பொதுக் காரணம் அல்லது பொது நோக்கம் என்பது பிடித்துக் கொண்டது.
இன்று இந்த மாதிரியான வழக்குகள் எல்லாம் பாமர மனிதரின், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தொடுக்கப்படும் வழக்குகள் அல்ல. அரசு நிருவாகம் அல்லது அரசு அதிகாரிகள் அல்லது துறைகள், பொது நிறுவனங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் உள்ள குற்றங் குறைகளை சரி செய்யும் நோக்கத்தைக் கொண்ட வழக்குகளே இவை. இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்களின் தலையீடுகளுக்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.
நீதிமன்றங்கள் கையாண்ட பொதுநல வழக்குகள்
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க் கும் நோக்கத்தில், மோட்டார் வாகனங் கள் வெளியிடும் புகையினால் காற்று மாசுபடுவதைத் தடுக்கவும், அளவுக்கு அதிகமான சப்தத்தைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க் கவும் ஆன சில நெறிமுறைகளை நிர்ண யித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப் பித்தது; வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து ஆணை யிட்டது; நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண் டும், குடியிருப்புப் பகுதிகளில் தூய்மை பராமரிக்கப்படவேண்டும், குப்பையை அழிப்பது, டில்லியில் போக்குவரத்துக் கட்டுப்பாடு, கார்களின் இருக்கை பெல்ட் போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக் குவது, நகரங்களில் குரங்குகளின் அட்டகாசத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, காவலர் இல்லாத ரயில்வே கேட்டுகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பது, கல்லூரிகளில் புதிய மாண வர்களை கேலி செய்வதைத் தடுப்பது, ரத்த வங்கிகளில் ரத்தத்தைச் சேகரிப்பது, சேமித்து வைப்பது, ஒலிபெருக்கிகளைக் கட்டுப்படுத்துவது, பட்டாசு வெடிப்பதைத் தடுப்பது என்று எண்ணற்ற வழக்குகளில் உயர்நீதிமன்றங்களும்,உச்ச நீதிமன்றமும் ஆணைகளைப் பிறப்பித்துள்ளன.
அண்மையில் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையில், இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற மிகுந்த சிக்கல் நிறைந்த பொறியியல் துறை பற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி: தி இந்து, 6.8.2012
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment