Wednesday, August 29, 2012

தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்


குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்? 
அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர் களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.

நமது கேள்வி:
தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்
இது போன்ற திடீர்ப் பொட்டை பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி வீட்டுப் பிள்ளையின் கன்னங்களில் வைக்காதது ஏன்? திடீர்ப் பொட்டில் கலந்திருக்கும் இராசாயனப் பொருள் தோல் வியாதியைத் தானே உண்டாக்குகிறது?


தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா? 
சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணிய பலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத்தான் அவன் திருந்தும் வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார்.
இந்த கருணையைப் புரிந்து கொண்ட வர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாத வர்களும், புரிந்து அலட்சியப் படுத்துபவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்ப துன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண் டேயிருப்பார்.
ஒரே பிறவியில் மனிதனைத் திருத்து வதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தாராது.
நமது கேள்வி:
இது உண்மையானால் கொலை குற்றப் புகழ் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் எந்தப் பட்டியலில் அடங்குவார்? புற்று நோயால் அவதிப்பட்டு மாண்ட ரமண ரிஷியின் நிலை என்ன?

ஒரு மாத காலம் படுத்த படுக்கையில் கிடந்து படாத பாடுபட்ட சாயிபாபாவும் பாவ ஆத்மாதானா?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பாவம் செய்வதை மட்டும் மனிதன் மீது சுமத்து வானேன்?

பாவச் செயலுக்குக் கடவுள்தானே பொறுப்பு?

பொறுப்பைத் தட்டிக் கழிப்பவன்தான் பகவானா?

ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா? 
நேரடியாக கொடுக்க முடியாது. உங்கள் தந்தை அதாவது சித்தப்பா, அல்லது பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.

நமது கேள்வி:
பெண் ஏன் திதி கொடுக்கக்கூடாது? பெண் மட்டும் ஆண்டவனின் படைப்பு இல்லையா? சிவபெருமான் தலையில் ஒரு பெண்ணையும் (கங்கையையும்) இடுப்பில் ஒரு பெண்ணையும் (பார்வதியையும்) வைத்திருக்கும் போது, சக்தி இல்லையேல் சிவன் ஏது என்று கூட சொல்லிக் கொண்டு பெண்ணை இழிவுபடுத்துவானேன்?

புத்தென்னும் நரகத்திலிருந்து தந்தை யைக் காப்பாற்றுபவன்தான் புத்திரனாம். உண்மையைச் சொல்லப்போனால் மகனை விட மகள்தானே தங்கள் பெற்றோர்களைப்; பெரும்பாலும் உபசரிப்பர். இந்த நிலையில் திதி கொடுக்கும் உரிமை மகனுக்கு மட்டும் ஏன்? ஓ, இந்து மதம் என்றால் பெண்ண டிமைத்தனம் தானே!

காசு மட்டும் பெண்கள் கொடுக்க வேண்டு மா? ஓ, நாய் விற்ற காசு குறைக்காதே!

பெற்றோர் இருக்கும் போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர் வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.

நமது கேள்வி:
காகங்கள் என்ன பித்ருக்களின் முகவர் களா? ஏமாந்த குழந்தைகளின் கைகளி லிருந்து காகம் கொத்திச் செல்லுகிறதே. அந்தப் பொருள் கூட பித்ருக்களுக்குத்தான் போய்ச் சேருமா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

ஆகஸ்ட் 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...