Friday, July 27, 2012

நாடு எங்கே செல்லுகிறது?


  • நாடு எங்கே செல்லுகிறது? மாணவி வீட்டில் குளித்ததை 3 மாணவர்கள் வீடியோ காமிராவில் பதிவு செய்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை. இது நடந்தது - திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தையடுத்த மண்மலையில்.
  • வீட்டில் நகையை வைத்தால் திருட்டுப் போய் விடுகிறதே என்று பயந்து பேருந்தில் தன்னோடு 32 பவுன் நகையை எடுத்துச் சென்றபோது, அந்த நகை திருடப்பட்டு விட்டது.திருப்பூரைச் சேர்ந்த நகையை திருட்டு கொடுத்தவர் ரங்கராசன் (59).
  • புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா நடத்தக் கூடாது என்று விதியை மீறி நடந்து கொண்ட தற்காக ஆந்திரா, தமிழ்நாடு அருணாசலப் பிரதேசம், பீகார், மகாராட்டிரா, ஜார்க்கண்ட் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
  • மீட்டர் காட்டும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்வது என்று கோவை ஆட்டோ ஓட்டுநர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டு இருக்க, ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பதோடு - மிரட்டவும் செய்கின்றனராம்.
  • சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, ஒப்பந்தப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றபோது பேருந்தில் இருக்கைக்கும் கீழ் உள்ள ஓட்டை வழியே தவறி விழுந்து மரணம்!
  • நெல்லை மாவட்டம் தென்காசி - அருகே உள்ள சுரண்டை காவல் நிலையத்தில் காவல் துறை உதவி ஆய்வாளரை கான்ஸ்டபில் சண்முக ராஜ் என்பவர் குத்திக் கொன்றார்.
  • ஏம்பலம் மறைமலை அடிகளார் அரசு மேனிலைப் பள்ளியில் இரண்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டனர்.
  • கரூர் அரசினர் மருத்துவமனையில் இருக்கை அதிகாரி மருத்துவர் பெரியசாமியும் மற்றொரு மருத்துவர் குமாரும் கட்டிப் புரண்டு சண்டை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...