மத்திய அரசால் நடத்தப்படும் அய்.அய்.டி., அய்.அய்.அய்.டி. மற்றும் என்.அய்.டி. முதலிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படித்தால் அவற்றிற்கு உலகத்தரம் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயர் அளவிற்கு இருக் கிறது. பெரும்பாலும் அந்த இடங்கள் நிரப்பப் படுவதில்லை.
தப்பித் தவறி நுழைந்தாலும் தேர்வு பெற்று வெளியில் வருவது என்பது முயற்கொம்பே! இத்தகைய கல்வி நிறுவனங்களில் சேரும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு ஆளாவது உண்டு.
மாநிலங்களில், மாநில அரசுகளால் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள், தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறியவர்கள் தகுதி அற்றவர்களா? அய்.அய்.டி.களில் படித்தவர்கள் மட்டும் நெய்யில் பொரிக்கப்பட்டவர்களா?
உண்மையைச் சொல்லப் போனால் மாநில அரசுகள் மற்றும் தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் படித்துத் தேறியவர்கள்தான் நம் நாட்டுக்குப் பயன்படக் கூடியவர்களாக உள்ளனர்.
அய்.அய்.டி. போன்ற மேல் தட்டுப் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குப் பறந்து சென்று விடுகிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் படித்தவர்கள் இந்த மக்களுக் காகச் சேவை செய்ய விரும்புவதில்லை. இதுதான் நடைமுறை உண்மை. அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களுக்குள் நுழைவு என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதுபோன்ற கடுமையான நடைமுறைகளை வைத்துள்ளார்கள்.
கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களோ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாணவிகள் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களைப்பற்றிக் கனவு காணவே முடியாது. அவ்வளவு இறுக்கமான நடைமுறைகள்!
கல்வியில் ஏன் இப்படிப்பட்ட பிராமண சூத்திர - பஞ்சம - வருணாசிரம முறை இருக்க வேண்டும்?
சமூக நீதியாளர்களின் கவனம் இந்தப் பக்கம் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற மமதையில் திளைக் கிறார்கள்.
அய்.அய்.டி. மற்றும் என்.அய்.டி.களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறையில் அவர்களுக்குள்ளேயே கருத்து மோதல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
இப்பொழுதுள்ள முறையில், பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. இது மாணவர்களுக்குப் பெருஞ் சுமையாக உள்ளது. இதனை மாற்றி அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் வலியுறுத்துகிறார். இதனை சில நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. வேறு சில நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன. குறிப்பாக அய்.அய்.டி.கள் ஏற்க மறுக்கின்றன.
இரண்டு வகையான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அய்.அய்.டி.யின் வழிமுறை என்ன? +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு முதன்மை நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் சதவிகித அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் இரண்டாவது நுழைவுத் தேர்வு (ஹனஎயஉநன நுஒயஅ) எழுதுவதற்கு அனுமதிக்கப்படும். இந்த இரண்டாவது முன்னேறிய நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.
அய்.அய்.டி. அல்லாத என்.அய்.டி. போன்ற நிறுவனங்கள் என்ன கூறுகின்றன? +2 படிப்பில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவிகிதமும், முதன்மை மற்றும் முன்னேறிய நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தலா 30 சதவிகிதமும் கூட்டப் பெற்று கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
இதனை சில அய்.அய்.டி. நிறுவனங்களின் செனட் டுகள் ஏற்க மறுக்கின்றன. இதுதான் இப்பொழுது பிரச்சினை.
+2 தேர்வு மதிப்பெண்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது என்று அய்.அய்.டி.கள் கூறுகின்றன. இது ஒரு உயர் ஜாதி மனப் போக்காகும். வடமாநிலங்களில் +2 தேர்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறது. அய்.அய்.டி. தேர்வு எழுதுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த கால கட்டத்திலேயே மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்.
இந்த முறைகள் மாற்றப்பட்டு +2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரி களில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
எல்லா மாநிலங்களிலும் அய்.அய்.டி.கள் இல்லையே என்று சமாதானம் கூறலாம். மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்துக்கு இத்தனை இடங்கள் என்று நிர்ணயித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமே.
நுழைவுத் தேர்வுகள் எந்த முறையில் வந்தாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆபத்தே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கல்விப் புரட்சி!
- தீண்டாமைச் சுவர்கள்
- தினமணியின் திரிபுவேலை
- தலைக்கவசம் உயிர்க்கவசம்
- கருநாடகம் ஒன்று போதாதா?
அடுத்து >>
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
No comments:
Post a Comment