Tuesday, July 3, 2012

பிரச்சினைகளை சந்திக்கும்போது நாணல்கள் ஆகுங்கள்!



ஆங்கில நாளேடு ஒன்றில் மிகவும் வருந்தத்தக்கதொரு செய்தி:
தனது எடை குறையவே இல்லை என்பதற்காக ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி யாற்றிய ஒரு பெண்மணி (கோவை யில்) தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்! என்னே கொடுமை!!
இதுபற்றி வேதனையுடனும் துயரத்துடனும் தவிக்கிறார் அவரது 44 வயதான தாய். (இரண்டு நாள் களுக்குமுன்) இச்சம்பவம் நடை பெற்றது; ஒரு சீட்டு எழுதி வைத்து விட்டு அந்தப் பெண்மணி  தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தனது எடை குறைய வேண்டுமென்பதற்காகவே, காலை உணவு, மதிய உணவு போன்ற வற்றையும் எடை குறைய வேண்டு மென்பதற்காகவே சில நாள்களாகத் தவிர்த்து வந்துள்ளார்!
அவர் கணவனிடமிருந்து பிரிந்த வரும்கூட. (அதுவும் இவரது மன அழுத்தம் Depression காரணமாக இருக்கக்கூடும்!)
ஒரு கல்லூரி விரிவுரையாளராக கை நிறையச் சம் பாதித்த, ஒரு பொறி யியல் துறை பேரா சிரியைக்கு இப்படி ஒரு பலவீனமான மனமா? மிகவும் துன்பப்படக் கூடிய செய்தி அல்லவா இது? தற்கொலை என்பது கோழை களின் தயார் ஆயு தம்; தன்னம் பிக்கையே இல்லாத பக்குவப்படாத நிலையில் உள்ள உள்ளங்களின் ஒரே புகலிடம் அது.
ஆறறிவு படைத்த மனிதர்கள், வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள், வேதனைகளையெல்லாம் தாங்கி அல்லது எதிர்கொண்டு வென்றெடுத்து வாழ்ந்து காட்டுவோம்; வாகை சூடி வெல்வோம் என்று அல்லவா முழங்க வேண்டும்!
எடை கூடுதல் குறைதல் என்பதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு.
உணவை மறுத்தல் மட்டுமே எடையைக் குறைத்து விடாது. குடும்பப் பாரம்பரியமும் மரபு அணுக்களும்கூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்! அதனால் நல்ல மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்; அப்படியே எடை குறையா விட்டால் என்ன குடியா மூழ்கி விடும்? இவ்வளவு சபலமான மனம் (Fickle - minded lady) படைத்த பெண், ஆசிரியையாக இருந்து என்ன பயன்?
பகுத்தறிவை நன்கு பயன்படுத்தி, சிந்தித்து விடை காணத் தெரியாதவர் களாக இத்தகையோர் இருப்பதா? நம்மில் பலரும் தேவையற்ற சிறுசிறு அற்பப் பிரச்சினைகளைக் கண்டுகூட அளவுக்கு அதிகமாக அஞ்சி நடுங்கி ஒடுக்கி  வாழ்க்கையை இடித்துக் கொள்வது அறிவீனம் அல்லவா?
படிப்பு வேறு பகுத்தறிவு - பட்டறிவு வேறு  என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவது தான் எவ்வளவு சரி!
மன அழுத்தம் உள்ளவர்களை, அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும், பெரும் விஞ்ஞானிகளாக இருந்தாலும் அவர்கள் மெல்லிய காற்று வீசியவுடன் சாயும் வாழைகளாக இருக்கக் கூடாது;
மாறாக, சுழன்றடிக்கும் சூறாவளி களையும் சந்திக்கத் தயங்காத நாணல் மூங்கில்களைப் போல வளைந்து கொடுத்து கடைசிவரை நிற்க வேண்டும்!
ஆலமரங்கள்கூட மிகப் பெரியவை தான். ஆனால் இந்த மூங்கில் - நாணல்களைப்போல வீழாமல் நிற்ப தில்லையே! அவைகளும் புயல் வீசும் போது வீழ்ந்து விடுகின்றனவே!
எனவே வாழ்க்கையில் தேவைப் படும்போது நாணல்களைப் போல வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மூச்சுக் காற்றை வழங்கும் வள்ளல்களும் அவைதான் மறவாதீர்!
உறுதிகட்ட வேண்டிய நேரத்தில் மட்டும் ஆலமரமாக ஓங்கி நில்லுங்கள்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...