புதுடெல்லி, ஜூலை 3- முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவருமான அர்ஜுன்சிங் சுயசரிதை புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். விரைவில் வெளியிடப்பட உள்ள அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியலின் அசிங்கமான முகங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன். சில சமயம் உண்மைகள் புதைக்கப்படுகின்றன. காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
காங்கிரசுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிக்கலாம் என்று நான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பி.வி.நரசிம்மராவிடம் பரிந்துரை செய்தோம்.
சிறிது நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்த நரசிம்மராவ் திடீரென பட்டாசாக கோபத்தை வெளிப்படுத்தினார். முகத்திலும், வார்த்தையிலும் கடுமையான கோபம் வெளிப்பட்டது.
காங்கிரஸ் கட்சி என்ன ரயில் பெட்டிகளா? நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் என்ஜினாக (தலைவராக) இருக்க வேண்டுமா? கட்சியில் தலைவர் பதவிக்கு வேறு ஆட்களே கிடையாதா? என்று பொரிந்து தள்ளினார்.
அவரது கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் அமைதியாக இருந்துவிட்டேன். அவரது பேச்சு மூலம் அவரிடம் நேரு குடும்ப எதிர்ப்பு மனநிலை இருப்பதை உணர முடிந்தது. உத்தரபிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் மதசார்பின்மை தன்மைக்கு இழுக்கு ஏற்பட்டது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:- சேது சமுத்திரத் திட்டம் - ஒரு புதிய திருப்பம்! புதிய பாதையில் நிறைவேற்ற சாத்தியம் இல்லை
- பணிக்குத் திரும்புகின்றனர் ஏர் இந்தியா விமானிகள்
- நித்யானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். ஆர்த்திராவ்
- பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
- 10 நிமிடத்துக்கு ஒரு கர்ப்பிணி பெண் மரணம்
அரசியலின் அசிங்கமான முகங்களை நேரடியாக பார்த்திருக்கிறேன். சில சமயம் உண்மைகள் புதைக்கப்படுகின்றன. காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
காங்கிரசுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை சரிக்கட்ட காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிக்கலாம் என்று நான் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பி.வி.நரசிம்மராவிடம் பரிந்துரை செய்தோம்.
சிறிது நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருந்த நரசிம்மராவ் திடீரென பட்டாசாக கோபத்தை வெளிப்படுத்தினார். முகத்திலும், வார்த்தையிலும் கடுமையான கோபம் வெளிப்பட்டது.
காங்கிரஸ் கட்சி என்ன ரயில் பெட்டிகளா? நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் என்ஜினாக (தலைவராக) இருக்க வேண்டுமா? கட்சியில் தலைவர் பதவிக்கு வேறு ஆட்களே கிடையாதா? என்று பொரிந்து தள்ளினார்.
அவரது கோபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் அமைதியாக இருந்துவிட்டேன். அவரது பேச்சு மூலம் அவரிடம் நேரு குடும்ப எதிர்ப்பு மனநிலை இருப்பதை உணர முடிந்தது. உத்தரபிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் மதசார்பின்மை தன்மைக்கு இழுக்கு ஏற்பட்டது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சேது சமுத்திரத் திட்டம் - ஒரு புதிய திருப்பம்! புதிய பாதையில் நிறைவேற்ற சாத்தியம் இல்லை
- பணிக்குத் திரும்புகின்றனர் ஏர் இந்தியா விமானிகள்
- நித்யானந்தா இந்த சமூகத்தின் புற்றுநோய். வெளியே தெரியாமல் வளரும் வைரஸ். ஆர்த்திராவ்
- பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
- 10 நிமிடத்துக்கு ஒரு கர்ப்பிணி பெண் மரணம்
1 comment:
kan ketta pinne ....
Post a Comment