Wednesday, July 11, 2012

இலங்கைக்கு அதிக அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும்


கடந்த மார்ச் மாதத்தின்போது அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத் தில் இலங்கை அரசுக்கு எதிராக இந் தியா வாக்களித்ததை அடுத்து, இலங்கை வாழ் தமிழ் மக்களின் நியாயமான குறைகளைத் தீர்க்கக் கோரி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப் பதுதான்  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜூன் 29 அன்று கொழும்பு விற்குச் செல்வதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், இலங்கை ராணுவத்தினர் நிகழ்த்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பிரச்சினை பற்றி விசாரணை நடத்துவதிலோ, தீர்வு காண்பதிலோ,  இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக உறுதி அளிக்கப்பட்டு வரும் மாகாண சுயாட்சி அளிக்கும் நடைமுறையிலோ எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே இலங்கை அரசுக்கு இத்தகைய அழுத்தம் அளிக்க வேண்டியதன் தேவையை உருவாக்கியுள்ளது. அதற்கு மாறாக, வடக்குப் பகுதியில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டு ராணுவ மயமாக் கப்பட்டு வருவதும், அப்பகுதிகளில் அதிக அளவில் சிங்கள மக்கள் குடியேற்றப் படுவதும் தமிழ் மக்களிடையே பரவலான கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
தமிழ் மக்களுடன் உண்மையான முறையில் சமரசம் செய்து கொண்டு செயல்படுவதை விட்டுவிட்டு, அவர் களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப் புகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில்தான் ராஜபக்சே அரசு நடந்து கொள்கிறது.  குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய ஓர் அணுகுமுறை தமிழ் மக்கள் மீண்டும் வன்முறையைக் கையில் எடுப்பதற்கு வழி வகுப்பதாக அமைந்து விடக்கூடும்.
தனது இலங்கைப் பயணத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிபர் ராஜபக்சே, அயல்துறை அமைச்சர் பெரிரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத பயராஜபக்சே மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் பாசில் ராஜ பக்சே ஆகியோரை மட்டும் சந்திக்க வில்லை; தமிழ் தேசியக் கூட்டணித் தலைவர் சம்பந்தனையும் சந்தித்திருக் கிறார். இன்றைய நிலையில் மிகவும் தேவை என்று கருதப் படும் அளவுக்கான பேச்சு வார்த்தைகளை கொழும்புவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்தியுள் ளார் என்பது அவர் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து தெரிய வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் அதிருப்தி பற்றிய செய்தியை இலங்கை ஊடகங்கள் நன்றாகவே அறிந்து கொண் டுள்ளன. தேசியம் பற்றிய கேள்வியில் ஓர் அரசியல் தீர்வினை உருவாக்குவதில் ஏற் பட்டுள்ள  முட்டுக்கட்டையை விலக்கு வதற்கும்,  வடக்குப் பகுதியில் இருக்கும் நிலப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அங்கு நியமிக்கப்பட்டுள்ள ராணுவத் தினரின்  அளவைக் குறைக்கவும் இலங்கை அரசு தவறிவிட்டது  பற்றி  இந்தியா வருந்துகிறது என்று சொல்லும் அளவுக்கு டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் ஜெனிவாவில் நடக்க இருக்கும் அய்.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில்  இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவகாரம் வரும்போது, கண் மூடித்தனமாக இலங்கை அரசை இந்திய அரசு ஆதரிக்கும் என்று இலங்கை அரசு எதிர் பார்க்க முடியாது என்பதையும் தேசிய பாதுகாப்பு ஆலோச கர் சுட்டிக் காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா இவ்வாறு மேற்கொண்ட ஓர் உறுதியான நிலை பற்றி இலங்கையில் ஒரு எதிர்மறையான கருத்து வெளிப்படுத் தப்பட்டது எதிர்பாராத ஒன்றல்ல. எடுத்துக் காட்டாக,  தமிழ் நாட்டிலிருந்து அளிக்கப்படும் நியாயமற்ற, பொருத்தமற்ற நிர்பந்தமே இதன் காரணம் என்றும், வெளிநாடுகளின் ஆலோசனைகள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உதவாமல் இடையூறு ஏற்படுத்தவே உதவும் என்றும்   தி அய்லாண்ட் என்ற பத்திரிகை தனது வாதங்களை முன் வைத்துள்ளது.  தேசிய அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் இது போன்ற பிரிவினை சக்திகளின் பிரச் சினைகளை அனைத்து தெற்காசிய நாடுகளும் சந்தித்தே உள்ளன என்று வாதத்தை முன்வைக்கும் அது, வட்டார, இன அடிப்படையிலாள கவுன்சில்களுக்கு பரவலாக அதிக அதிகாரம் அளிப்பதில் உள்ள ஆபத்தைப் பற்றி  இலங்கை எச் சரிக்கையாக இருப்பதாகவும் கூறுகிறது. மிகப் பெரிய விலை கொடுத்து இலங்கை அமைதியை நிலைநாட்டி இருப்பதாகவும், அது எவ்வாறாகிலும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.
இலங்கை பற்றி அய்.நா.மனித உரிமைக் குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து இலங்கைத் தலைவர்கள் இந்தி யாவுக்கு எதிராக விடுத்த அறிக்கை களின் ஒரு பகுதிதான் இந்த மேற்கூறிய எதிர்மறை கருத்துகளும். இலங்கையில் தொடர்ந்து அமைதியை யும், நிலைத் தன்மையை யும் உருவாக்கத் தேவை யான சமாதான நட வடிக்கைகளின் வெற் றியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மக்களின் நியாயமான கவலைகளைப் போக்கி, எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற இலங்கை அரசை வலியுறுத்தும் முயற் சியை மேற்கொள்ளும் தனது வழியை விட்டு இந்தியா விலகிக் செல்ல இத்தகைய எதிர்மறைக் கருத் துகள் காரணமாக அமைந்து விடக்கூடாது.
இத்தகையதொரு கொள்கையைக் கடைப்பிடிப்பதால், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொள்ளும் அளவுக்கு இலங்கை செல்வதன் மூலம் இலங்கையுடனான இந்திய உறவுகளில் ஒரு தற்காலிகமான எதிர்மறை பாதிப்பு ஏற்படவும் கூடும்.
நமது நீண்ட கால நலன்களைக் கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுக்கவும், அமைதி நிறைந்த நாடாக தன்னை இலங்கை உருவாக்கிக் கொள்ள உதவவும் இந்தியாவால் மட்டுமே முடியும் என்பதால், தனது உறுதியான நிலையில் இருந்து இந்தியா பின்வாங்குவதற்கு இது ஒரு காரணமாக இருந்துவிடாது என்று நம்புகிறோம்.
இலங்கைவாழ் தமிழ் மக்களின் நியாயமான நம்பிக்கைகளையும், எதிர் பார்ப்புகளையும் நிறைவேற்ற இலங்கையை வலியுறுத்தும் தனது முயற்சிகளில், எதிர் மறை மற்றும் ஆக்கபூர்வமான நெம்புகோல் களைப் பயன்படுத்தி தானாக முன்வந்து இந்தியா இப்போது செயல்பட வேண்டும். இது பற்றி எடுக்க இயன்ற நடவடிக்கை களில் சில :
தமிழ் மக்களின் மனித உரிமைக் கவலைகளை இலங்கை அரசு தீர்க்கா விட்டால், இலங்கைக்கு எதிரான அய்.நா. வின் மனித உரிமை மீறல் தீர்மானங்களை ஆதரிப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதை இந்தியா தெளிவாக இலங் கைக்குத் தெரிவித்துவிட வேண்டும்.
இலங்கைக்கு கடந்த இரண்டு ஆண்டுகாலத் தில் இந்தியா 1,100 மில் லியன் டாலர் அளவுக்கு பொருளாதார உதவி அளிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிதி உதவி அளிக்கப் படும் அளவு மற்றும் நேரம், இலங்கை வாழ் தமிழ் மக்களின் கவலைகளை எந்த அளவுக்கு இலங்கை அரசு தீர்த்து வருகிறது என்பதுடன் தொடர்பு கொண்டதாகச் செய்யப்பட வேண்டும். இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்வதாகத் தோன்றினால் நிதி உதவி கூட்டப்படலாம்; தற்போ துள்ள கடினமான நிலையையே இலங்கை கடைப்பிடிப்பதாகத் தோன்றினால் நிதி உதவியைக் குறைக்கலாம்.
இலங்கையின் பொருளாதார நிலை யையே முற்றிலுமாக மாற்றியமைப்பதற்கு உதவுவதற்கு ஏற்ற ஒரு  துணிவான, கற்பனைவளம் மிகுந்த ஒரு திட்டத்தை இந்தியா வகுக்கவேண்டும்.  இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஆக்கபூர்வமான செயல் களை இலங்கை அரசு கடைப்பிடிப்பதே இந்த பொருளாதாரத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான நிபந்தனை யாக விதிக்க வேண்டும்.
தங்களின் சொந்த நலனுக்காகவே, இலங்கையில் உள்ள மக்கள் அனை வரும் அமைதியாகவும், இணக்கமாகவும் வாழவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தி அனைத்து பிரிவு மக்களை யும் ஏற்றுக் கொள்ளச் செய்ய ஒரு ஒருங் கிணைந்த முயற்சி, செயல்திட்டம் மேற் கொள்ளப்படவேண்டும். இப்பணி யில், மக்களை மட்டுமல்லாமல், புத்த பிட்சுக் கள், முஸ்லிம்கள் போன்ற எதிர்ப்பாளர் களையும் ஈர்க்கும் முயற்சிகள் மேற் கொள்ளப் படவேண்டும்.
காலம் காலமாக நம்பிக்கையே அற்றுப் போன தமிழ் தலைவர்களுட னான நெருங்கிய தொடர்பும் உருவாக் கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த ஒரே  இலங்கை என்ற கோட்பாட்டின் கீழ் இலங்கைவாழ் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதில் உதவி செய்ய இந்தியா எப்போதும் தயா ராக உள்ளது என்பது உறுதி செய்யப் படுவதும் அவசியமானதாகும். அரசு அவ்வப்போது அளிக்கும் சலுகை களைப் பயன்படுத்திக் கொள்ள அவர் களுக்குத் தூண்டுதல் அளிக்கவும், தீவிரவாத செயல் திட்டங்களை மேற்கொள்வதிலிருந்து தடுக்கவும் இது உதவும்.
(நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 9.7.2012 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...