Wednesday, July 11, 2012

பெரியார் நினைவு சமத்துவபுரம்


பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற கருத்தோட்டம் மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதித்து மலர்ந்ததாகும்.
வாழ் நாள் முழுவதும் சமத்துவத்துக்காகப் போராடிய சிற்பி தந்தை பெரியார். தம் நோக்கத்தை ஒரே வரியில் கூறினார்.
பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்  (குடிஅரசு 11-11-1944) என்பதுதான் அந்தச் சிறப்பு மிகு வாசக மணியாகும்.
வேறு எந்த அரசியல் கட்சிகளையும்விட சமூக மாற்றத்திற்கான சட்டங்களையும், திட்டங்களையும் ஆணைகளையும் உருவாக்கியதில் முதல் இடம் தி.மு.க. ஆட்சிக்கே உண்டு.
சுயமரியாதைத் திருமணச் சட்டம் முதற் கொண்டு அடுக்கிக் கொண்டே போகலாம். மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கான திட்டத்தை அறிவித்தார்.
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை ((நிஎ 4) நாள் 22-10-1997)
இப்படி உருவாக்கப்படும்  வளாகத்தில் நூறு வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் அய்ந்து சென்டில் உருவாக்கப்பட்டவை. சாலை வசதி, பாதுகாக்கப்பட்டகுடிதண்ணீர் வசதி, பூங்கா, கல்விக் கூடம் (தேவைப்படும் இடங்களில்) உள் ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளடக் கிய தன்னிறைவுத் தோட்டமாக உருவாக்கப்பட் டது. ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையும் நிறுவப் பட்டது.
வீடுகள் ஒதுக்குவதில் சமூக நீதியும் பின்பற்றப் பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 25 மற்றவர்களுக்கு (பார்ப்பனர் உட்பட) 10 வீடுகள் என்று உருவாக்கப்பட்டன.
பொது மயானமும் இருக்கும். அதே நேரத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலமும் இருக் கக்கூடாது.  (பிரச்சினையே இங்கு தானே உருவா கிறது) அவரவர் வீட்டுக்குள் சாமி கும்பிடுவது தடுக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே வேறு யாருக்கும் தோன்றி யிராத இத்திட்டத்தை - மானமிகு சுயமரியாதைக் காரரான - பெரியார் தொண்டன் என்பதில்தான் எனக்குப் பெருமை என்று கூறுபவரான கலைஞர்தான் உருவாக்கினார்.
ஜாதி - வருணம் என்னும் பார்ப்பனிய சமூக அமைப்பு முறையை எதிர்த்து பிரச்சாரம் ஒரு பக்கம்! ஆக்க ரீதியான இத்தகைய செயல் திட்டம் என்பது இன்னொரு புறம்! குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று வினா தொடுப்பவர்களின் விலாவில் வீசப்பட்ட வெடிகுண்டு இது.
கடந்த 15 ஆண்டு காலமாக எங்கும் நடை பெறாத ஒரு செயல்; மதுரை மாவட்டம் உசிலம் பட்டியையடுத்த போச்சம்பட்டி ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திடீரென்று இரு கோயில்களை அமைக்கும் நச்சு வேலையில் ஒரு சிலர் இறங் கினர்; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்கொடி தூக்கிய நிலையில், உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலையிட்டு, போச்சம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரத்திலிருந்து அந்த சாமி சிலைகளை அகற்றியது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். தன் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறோம்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடிக்கடி பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நேரில் பார்வையிடுவதை ஒரு வழமையாகக் கொள்வது நல்லது.
தி.மு.க. அரசு கொண்டு வந்தது என்பதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரங்களை மேலும் உருவாக்காமல் இருப்பது நல்லதல்ல.
பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்கும் கட்சிதானே அ.இ.அ.தி.மு.க. அந்த முறையில் பார்த் தாலும் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவப் புரங்களை மேலும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டலாம் அல்லவா?
அது பற்றி இவ்வாட்சி சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...