கத்தார் நாட்டின் தோகாவிலும் ஆசியப் போட்டியிலும் தடகளப் போட்டியில் (ஓட்டத்தில்) பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த (புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கத்தக்குறிச்சி) சாந்தி செங்கல் சூளையில் கல் சுமக்கிறார். காரணம் சாந்தி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்.
லண்டனில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட உள்ளது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதில் எதைச் சாதிக்கப்போகிறது என்பது கேள்விக் குறியே!
ஆற்றலும், வலிமையும் கொண்ட மக்கள் கிராமப் புறங்களில், ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே பல்லாயிரக் கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
வருணாசிரம ஜாதிய ஆதிக்கச் சிந்தனை குடி கொண்ட இந்துத்துவா மனப்பான்மை என்பது இந்தியாவில் இருக்கும் வரைக்கும் உலக சாதனைகள் என்பது கனவு உலகத் தில்தான் இருக்கும். பார்ப்பனியத் தன்மை கொண்ட கிரிக்கெட் போன்றவைதான் இந்தியாவில் கொழிக்க முடியும்.
இங்கு மதம் என்பது வெறும் நம்பிக்கை என்பது மட்டுமல்ல, மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை நீரோட்டத்தைக் கொண்டது.
தலையெழுத்து நம்பிக்கையும், எதையும் பகவான் பாதத்தில் போடு என்கிற சோம்பேறி சித்தாந்தங்களும், அவற்றுடன் தொடர்பான கோயில் அமைப்பு முறைகளும், பண்டிகை களும் திருவிழாக்கள், சடங்குகள், சாத் திரங்களும் இந்தியாவில் வேர் பிடித்திருக்கும் வரை இங்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல்கள் வெடித்துக் கிளம்புவதற்கான அடிப்படை வாய்ப்புகளே கிடையாது.
கீதையைப் படிப்பதை விட ஒரு உதைப் பந்தைக் கற்றுக் கொள் என்று விவேகானந்தர் கூற்றையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள் ளலாம். தகவல் ஒன்று - புதுக்கோட்டை விடுதலை செய்தியாளர் தோழர் கண்ணன் மூலம் கிடைத்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த சத்தக் குறிச்சியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று, உலக அளவில் நட்சத்திரமாக மின்னினார். தென்னாசியப் போட்டியில் தங்கம் வென்றார்.
இப்படி சாதனை படைத்த சாந்தியின் இன்றைய நிலை என்ன? வறுமைத் தேள் கொட்டப்பட்ட நிலையில், செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஏன் இந்த நிலை? மத்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத் துறைகள் இருக் கின்றனவே. இவை எதை வெட்டி முறிக் கின்றன? சாந்தி போன்றவர்களை அடையாளம் கண்டு தேவையான அறிவியல் ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக அளவில் நடக்கும் போட்டிகளில் சாதனை களைப் படைக்க ஏன் ஆக்க ரீதியாகச் சிந்திக்கக்கூடாது - செயல்படக்கூடாது?
கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் என் றால், ராணுவத்தில் கூட பிரிகேடியர் தகுதியில் பணியமர்த்தம் செய்து, உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. எந்தப் பணியையும் செய்யாமலேயே அந்தப் பதவிக் குரிய சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகிறது. பெரிய பெரிய தனியார் நிறு வனங்களும் இதே போலவே பணியமர்த்தம் செய்து விளம்பரம் பெறுகின்றன.
ஆனால் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் தடகளப் போட்டிகளில் ஏன் இந்த வாய்ப்பு இல்லை? காரணம் தெரிந்ததே! தடகளப் போட்டிகளில் எந்தப் பார்ப்பனரும் ஒளிர்வதில்லை. கிரிக்கெட் போன்றவை பார்ப்பன தர்மம். தடகளப் போட்டிகள் சூத்திர, பஞ்சம தர்மம்.
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?
இன்னொரு உண்மை தெரியுமா? சகோதரி சாந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதாம். மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்களாம் - வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- சிலை திருட்டுகள்
- நதி நீரோட்டமும், தேசிய நீரோட்டமும்!
- தண்டிக்க இயலாத சட்டங்கள் - தீர்ப்புகள்
- பார்ப்பனர்கள் பார்வையில் ஈழத் தமிழர் பிரச்சினை!
- அய்யப்பன் பின்னணியில்...
அடுத்து >>
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
1 comment:
வீடு கூட இனிமே சாதிக்கு தக்க விப்பானுங்க போல...பிராமணர்களுக்கு மட்டும் என்று வீடுகள் விற்கப்படுகிறது...இதை பாருங்கள் எடுத்து செல்லுங்கள் உயர் ஜாதி கடவுள்களிடம் மோகம் கொள்ளும் இதர மக்களுக்கு புரியட்டும்..http://tamilmottu.blogspot.in/2012/07/blog-post_25.html
Post a Comment